"நீ இப்ப சாக வில்லை சாவை கொஞ்சம் தள்ளி போட்டு இருக்க "
"SNIPER KILLER " இந்த மாதிரி படங்கள் பயணம் பண்ணனுங்கற ஆசையே கெடுத்து விட வாய்ப்பு இருக்கும் . ஆக பயணப்பிரியர்கள் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் பிடிக்காதோர் தவிர்ப்பது நல்லது . மேற்கொண்டு படத்தின் ட்ரைலர் பார்த்து முடிவு செய்யுங்கள் பார்க்கலாமா வேண்டாமா என்று .
மூன்று பெண்கள் , மூன்று ஆண்கள் ஒரு காரில் ஆள்கள் அறவேயற்ற ரோட்டில் , பயணம் செய்து கொண்டிருக்கும் போது. திடீர்ன்னு கார் டயர் வெடிக்கிறது . அவர்கள் இருக்கும் பகுதியோ சுத்தமாக டவர் இல்லாத பகுதி . டவர் வேண்டுமானால் கொஞ்சம் மூன்று அடியாவது நகர வேண்டும் . ஆனால் காலில் கன்னி வெடியை மிதத்து விட்டது போல ஒரு அடி நகர்ந்து விட்டால் மரணம் தான். ஒரு Sniper சைக்கோ அங்குள்ள ஒவ்வொரு வராக சுட்டு தள்ளுகிறார் . அவரிடம் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள் குண்டு தீர வேண்டும். இல்லையேல் அவனாக கிளம்பிட வேண்டும் அவ்வளவே . இந்த கொலைகாரனிடம் இருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதே திரைப்படம் .
ஒரு 30 to 45 நிமிட குறும்படமாக எடுத்து இருக்கலாம் , ஒருசில காட்சிகளை இன்னும் சுவாரஸ்யமாக்கி இருக்கலாம் போன்ற எண்ணம் . பரபரப்பான திரில்லர் திரைப்படங்கள் பற்றி தேடிக்கொண்டு இருக்கும் போது கண்ணில் பட்டது இந்த திரைப்படம் .
Toronto International Film Festival ல் திரையிட்டு இருக்கிறார்கள். The Midnight Meat Train , Azumi போன்ற திரைப்படத்தை இயக்கிய ஜப்பான் நாட்டு இயக்குனரின் திரைப்படம் வேண்டுவோர் மட்டும் பார்க்கலாம் ஒருமுறை .
இந்தியாவில் இந்த திரைப்படம் தற்போது எந்த OTT யிலும் இல்லை என்று நினைக்கிறன் . வேண்டுவோர் இணையத்தில் தேடி பெறுங்கள் . தேடி கிடைக்காத பட்சத்தில் வார இறுதியில் இங்கே என்னை கேளுங்கள் தருகிறேன் .
إرسال تعليق