சோமாலியா நாட்டை பற்றி நிறைய சொல்லலாம் . பசி பஞ்சம் பட்டினி வறுமை , கல்வியின்மை , நிலையற்ற அரசாங்கம் , உள்நாட்டு போர் , இயற்கை பேரிடர்வுகள் , பலவித கொடிய நோய்கள் . கடற்கொள்ளையர்கள் . என இன்னும் .வருடத்திற்கு பல இறப்புகளை சந்திக்கும் சோமாலிய மக்களின் ஆயுள்காலம் 60 வயதிற்கும் குறைவே .
Streaming Alert = Amazon Prime தமிழ் மொழியிலும் உண்டு.
அவர்களின் உள்நாட்டு போர் குறித்து இணையத்தில் தேடினால் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைக்கும் . நான் பார்த்த ஒரு தென் கொரிய திரைப்படம் சோமாலியா உள்நாட்டு போர் சமயத்தில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை . சோமாலியாவின் தலைநகரமான Mogadishu வில் கொரிய தூதரர்களாக பணிபுரிபவர்கள் உள்நாட்டு போர் வெடித்ததில் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் இருக்கின்றனர் . அதையும் மீறி வெளிவந்தால் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி அங்கேயே உயிரை விட வேண்டியது தான் .
இப்படி இருக்கையில் வட கொரியாவின் தூதரகம் சூரயாடபட மொத்தமாய் தென் கொரியா பகுதியில் ஒன்று சேர்க்கின்றனர் . தங்களிடம் உதயவியை நாடி வந்தவர்களுக்கு அடைக்களம் கொடுத்தால் பெரிய பிரச்னைகளை சந்திக்கலாம் . முதலில் ஒருவரை ஒருவர் கண்டு சந்தேகிக்கின்றனர் . முடிவில் என்ன ஆனது இறுதியில் . வடகொரியர்களும் தென் கொரியர்களுக்கும் தப்பித்தார்களா ? இல்லையா என்பதை பரபரப்பை கிளப்பி விட்டு இருக்கிறார்கள் . கடைசி 30 நிமிடம் எல்லாம் அட்டகாசமா படமாக்கி இருக்கிறார்கள் .
சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் உங்களை இறுதி வரை பார்க்கவைக்கும் . The Berline File , Veteran, The Battleship Island போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் தான் இதனையும் இயக்கி இருக்கிறார் . The Chaser, The Yellow Sea , The Classified File ,The Thievs , Sea Fog , 1987, Dark Crime போன்ற படங்களில் நடித்தவர் இதில் முதன்மை கதாபாத்திரமாக அசத்தி இருக்கிறார் . . ஆஹா ஓஹோ உலக தர சினிமா வா பார்த்தே தீர வேண்டுமா என்றெல்லாம் சொல்லவில்லை . ஆனால் நிச்சயம் ஒருமுறை தாராளமாக பார்க்கலாம் .
இந்த வருட ஆஸ்காருக்கு 94 . சிறந்த வெளிநாட்டு பட பிரிவில் தென் கொரியா சார்பில் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது . நாமினேஷன் ஆகவில்லை ஆனால் பரபரப்பான படம்
إرسال تعليق