சீரியல் கில்லர் படங்கள் , கொலைகளை துப்பறியும் படங்கள் என்றாலே ஒரு ஆர்வம் வந்துவிடும் . அதிலும் கொரியா காரர்களை அடித்துக்கொள்ள முடியாது, அந்த அளவிற்கு பல சீரியல் கில்லர் படங்களை சுவாரசியமாக தந்துள்ளார்கள் . இந்த படத்தை ஏற்கனவே பார்த்த பல படங்களில் வந்த அதே காட்சிகள் போன்றதோர் எண்ணத்தை தந்துவிடாமல் பார்வையாளருக்கு இதுவும் ஒரு புது சீரியல் கில்லர் படம் என குறைந்த வன்முறை யோடு பரபரப்பாகவும் அதே நேரத்தில் ஆங்காங்கே சில காமெடியாகவும் கடத்தி இருப்பது சிறப்பு . .
தொடர் வயதான மனிதர்களின் இறப்புகள் நடக்கிறது , இது கொலையா ? தற்கொலையா ? இதே போல 30 வருடங்களுக்கு முன்பும் நடந்ததாக செய்திகள் . இரண்டுக்கும் என்ன தொடர்பு .
எதனால் என்பதெல்லாம் படம் பார்த்து தெரிந்துகொண்டால் நலம் .. படத்தின் போஸ்டரில் வருவதை போல தான் நம்ப ஊருக்குள்ள ஒரு சீரியல் கில்லர் இருக்கான் . என்பதை மட்டும் பார்த்துவிட்டு கூடுதலாக ட்ரைலரையும் பார்த்துவிட்டு படம் பார்பவர்களுக்கு சுவாரசியப்படலாம் மற்றவர்களுக்கு சுமாராக தோன்றலாம் . நேரமிருந்தால் ஒருமுறை பார்த்து வைக்கலாம் .
இந்தப்படம் இந்தியாவில் Netflix ல் இருக்கிறது . அது இல்லாதோர் தேடி பிடித்து பார்க்கவும் .
إرسال تعليق