இதுபோல கதையமைப்பு கொண்ட படங்கள் என்றாலே பரபரப்பாக இருக்கும்.குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் Eg. Call 911 . தொலைபேசி உரையாடல்கள் மூலம் மட்டுமே நிகழும் . எதிரே பிரச்னையில் சிக்கிக்கொண்டு தவிப்போரை எப்படி மீர்க்கிறார்கள் பிரச்னையில் மாட்டிக்கொண்டோர் எப்படி எதிர்கொள்கிறார்கள். என்பதே பார்வையாளர்களையே ஒருவிதமான Tense மனநிலையில் வைத்திருக்கும்.
ஒரே அறையில் மற்றும் ஒரே கதாப்பாத்திரத்தை முன்வைத்து நகரும் படங்கள் என்றாலே ஆர்வம் அதிகம் , கவனிக்க தக்க பட வரிசயில் the Guilty திரைப்படத்தை, பார்த்தே ஆக வேண்டும் என இரண்டு மாதத்திற்கு முன்பிலிருந்தே Watch list ல் வைத்திருந்தேன் . தற்போதுதான் பார்த்து முடித்தேன் . டென்மார்க் நாட்டின் சிறந்தபடமாக பல திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு, விருதுகளையும் வென்றுள்ளது. .
இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தின் இணைப்பை மேலே பதிகிறேன், அதனை காணும் பொழுதே இந்த படத்தை பார்க்கலாமா? வேண்டாமா? என உங்களால் உறுதி செய்ய முடியும் . ஏனென்றால் இதுபோல படங்கள் சிலருக்கு பிடிக்கலாம் சிலருக்கு சலிப்படைய செய்யலாம் . உதாரணத்தை நம்மையும் சோதிக்க வைத்து விடும்.
"தி கில்டி" இது ஒரு டேனிஷ் மொழிப்படம் . இந்த வகை படங்களில் என்னை மிகவும் கவர்ந்த படமென்றால் அது இதுதான் . பல விருதுகளையும் பல பரிந்துரைகளையும் வென்றுள்ளது இப்படம். ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை உங்களையும் அந்த படத்தோடு அழைத்துச் செல்லும். இன்னும் சொல்லப்போனால் உங்களுக்கு கண்களை மூடவோ, அல்லது காதுகளை மூடவோ இந்த படம் முற்றிலும் அனுமதிக்காது. அதைவிட சிறப்பம்சம் ஒரே ஒரு ஆள் மட்டுமே . இரண்டே அறைகள் அவ்வளவுதான் . தொலைபேசி உரையாடல்கள் மூலம்தான் முழு படமும்.சொல்லப்போனால் உங்களுக்கு ஒரு நாவல் படித்த திருப்தியை இந்த படம் தரும். After This Watch Jake Gyllenhaal Version in Netflix
அதே நேரத்தில் நடிப்பும் டெக்னீக்கல் ஒர்க் என அனைத்திலும் சிறப்பாக கையாண்டு இருப்பார்கள்..இதில் இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல்கள் சான்ஸே இல்லை . இந்த இயக்குனர் க்கு நிச்சயம் பல திறமைகள் இருக்கு. இந்த படம் ஆஸ்காரில் கண்டுகொள்ளப் படாமல் போனது . ஆனால் நிறைய நபர்களின் கவனத்தை பெற்றது . பதிமூன்றே நாள்களில் மூன்று கேமராக்களை வைத்துக்கொண்டு ஒரு படத்தை கொடுத்துள்ளனர். ஒரு மணி நேரம் 25 நிமிடம் தான் . Actually i like it. 👌 நன்றி
إرسال تعليق