இந்த படம் உங்களை சிரிக்க வைக்கும் அதே சமயம் சிந்திப்புக்குள் ஆக்கும். சமகால இந்திய சமூகத்தின் பிரதியாக வந்த படங்களில் மிக முக்கியமானது இது . ஆம் நாம் வாழும் இந்த சமூகத்தில் கேள்வி என்பதனை கேட்டாலே பிரச்னை தான். நவீனம், தொழிநுட்பம் , வளர்ச்சி கல்வி கண்டுபிடிப்பு என இருந்தாலும் இன்னமும் பரிமாணம் எப்படி இருக்கிறது ? என்பதனை காண இந்த படத்தினை ஒரு உதாரணமாக சொல்லல்லாம்..
இந்த சமுதாயம் எப்படி ஆளுகிறது, நம் இயலாமை எப்படி பயன்படுத்துகிறது . "குச்சி எடுத்தால் தான் குரங்கு ஆடும்" என்பதை போல ஆட்டி வைத்திருக்கிறது. சமூகத்தின் உயரடுக்கு, கீழ் அடுக்கு ,மேல் வர்க்கம் கீழ் வர்கம்,, முதலாளித்துவம் தொழிலாளிதுவம் , மதம் , கடவுள், தேசியம் , ஜனநாயம் , மக்கள் , அரசியல் , பவர் இன்னும் என்னவெல்லாம் முடியுமோ முடிந்தவரை பேசி இருக்கிறார்கள் . இதற்கு மேல் அறிமுகம் தேவை இல்லை.
படத்தின் நாயகன் குரங்குகளை விரட்டும் அரசு பணியில் அமர்த்த படுகிறார். அதென்ன பணி. அதில் என்ன பிரச்னை ? அதில் எதை பேசுகிறது என்பதை எல்லாம் நீங்கள் பார்த்துதான் தெரிந்துகொள்ள வேண்டும்.டெல்லி அரசாங்க தலைமையகத்தை சுற்றி எப்படி படமாக்கினார்கள் என்பதெல்லாம் ஆச்சரியம் தரும் விஷயமாக இருந்தது . குடியரசு தின காட்சி அட்டகாசமாக ஒன்று இடம்பெற்றுள்ளது, அதன் பிறகு வரும் பாடல் என சிறப்பு .
இந்த படத்தினை கவனம் கொள்ள வைத்த அனுராக் காஷ்யப்புக்கு நன்றி. இயக்குனரின் மற்ற படைப்புகளை தொடர்ந்து பார்க்க ஆவலாக உள்ளேன். கடந்த வருடத்தில் நான் பார்த்த இந்திய படங்களில் என்னை கவர்ந்த Personal Best படங்கள் பட்டியல் ஒன்றை முகநூலில் பதிவிட்டு இருந்தேன். அதில் மூத்தோன், ஆனந்தி கோபால் , ஆமிஸ் ,ஜல்லிக்கட்டு , கும்பளாங்கி நைட்ஸ் என வகைப்படுத்தி இருந்தேன்.
முன்பே பார்த்திருந்தால் நிச்சயம் பட்டியலில் வைத்திருப்பேன் இதனை .. நண்பர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் தான் இந்த Eeb Allay Ooo... இந்த படத்தினை திரையிட ஏற்பாடு செய்திருந்தது மும்பை திரைப்படவிழா. பிறகு We Are One Global Film Festival லில் முழு படமும் பார்க்க கிடைத்தது. இந்த படத்தினை அப்போதே கண்டவர்கள் அனைவரும் அதிர்ஷ்டசாலிகள். 24 மணி நேரத்தில் படத்தை நீக்கி விட்டனர். இப்போது Netflix ல் காணக்கிடைக்கிறது .
إرسال تعليق