ஒரு ஆப்கானிய அகதியான அசிம் ஈரானில் உள்ள தெஹ்ரானில் தனது மனைவியோடு வசிக்கிறார் . ஈரானில் இரவு நேர நகராட்சி தூய்மை பணியாளர் வேலையில் இருக்கிறார் அசிம் . வழக்கம் போல சாதாரண குடும்ப நிகழ்வில் உறவினர்கள் ஒன்று கூட அனைவரும் அசிமை பாட சொல்லி கேற்கிறார்கள் . அசிமோ எனக்கு எல்லாமே என் அம்மா தான் , என் அம்மா கேட்டா இந்த உலகத்தையே பெற்று தருவேன் , அம்மா பாட சொன்னால் நான் பாடுகிறேன் என்கிறார் பதிலுக்கு அம்மாவோ எந்த ஒரு பதிலும் இல்லாமல் அமைதியாய் இருக்கிறார் .
பிறகுதான் தெரியவருகிறது அசிமிற்கு குழந்தைகள் இல்லை , அசிமின் உடன்பிறந்த சகோதரர் வீட்டில் தான் அம்மா வசிக்கிறார் . கடந்த 8 வருடங்களாக அங்கே இருக்கிறார் , அவரின் சகோதரர் , மனைவி மற்றும் குழந்தைகளோடு திடீரென ஜெர்மனி செல்லவிருப்பதாக தெரிகிறது , ஆனால் அம்மாவை அழைத்துக்கொண்டு செல்ல சகோதரருக்கு விருப்பமில்லை , பிறகு அசிம் அம்மாவை தன் வீட்டிற்கு அழைத்துக்கொண்டு செல்கிறார் . இவர்கள் சென்ற வருத்தத்தில் அம்மாவிற்கு பேரன் பேத்திகளை பார்க்காமல் ஏக்கம் , பிறகு வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொது மயக்கமாக விபத்து ஏற்படுகிறது .
உடனடியாக மருத்துவரை அணுகும் அசிமிற்கு ஒரு அதிர்ச்சி . உடலிற்கு எந்த பிரச்சனையும் இல்லை , ஆனால் அவர்கள் சுகர் குணப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்து விட்டது . இன்னும் ஓரிரு வாரங்களில் உங்களை விட்டு பிரிந்து விடுவார் , அதற்குள் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்துவிடுங்கள் என்கிறார்கள் . உடனே அசிமின் கிட்டினை பொருத்தலாம் என்றால் அவருக்கும் சில பிரச்னை இருக்கிறது , அதையும் மீறி கொடுத்தால் பல சிக்கலுக்கு உள்ளாகலாம் என்கிறார் டாக்டர் . வேறொருவரின் கிட்னி கிடைத்தும் அதை அம்மாவிற்கு பொறுத்த முடியாமல் போகும் சம்பவம் எல்லாம் கொடுமை . இந்தப்படத்தின் முடிவில் அம்மாவிற்கு சமர்ப்பிக்கிறேன் என கார்டில் வந்த பின்னும் நம் மனது ஏற்றுக்கொள்ள முடியாது நிலை .
இயக்குனரின் மூன்று படங்கள் தொடர்ந்து ஆஸ்காருக்கு ஆப்கானிஸ்தான் சார்பாக அனுப்பட்டது இரண்டு அவர் இயக்கியவை ஒன்றிக்கு எழுத்தாளராக பணியாற்றி இருக்கிறார் . சமீபத்தில் நான் பார்த்த துருக்கி , எகிப்து , ஈரான் , ஆப்கானிய படங்கள் எல்லாம் மனித வாழ்க்கையை அப்படியே பிரதிபலிக்கும் வெகு இயல்பாக படமாக்கப்பட்டவை . இந்த திரைப்படமும் அதற்கு விதிவிலக்கல்ல , வாய்ப்பு கிடைப்போர் அவசியம் ஒரு முறை பார்க்கலாம் . நல்ல படம் .
தற்போது இந்தியாவில் இந்த திரைபடத்தை காண முடியாது நீங்கள் ஆஸ்திரேலியாவில் இருந்தால் நிச்சயம் காணலாம் . இலவசம் தான் . SBS ON Demand தளத்தில் பார்க்கலாம் . இங்கிருந்து VPN உபயோகித்தும் பார்க்கலாம் . VPN ஏற்கனவே உபயோகித்தவர்கள் முயற்சி செய்து பாருங்கள் நன்றி .
إرسال تعليق