தென்கொரியாவை சேர்ந்த உதவிக்குழு 23 பேர் ஆப்கனிஸ்தானில் மலைப்பகுதியில் பேருந்தில் சென்றுகொண்டிருக்க, அங்கு திடீரென வந்த தாலிபான்கள் இவர்களை பிணைக் கைதிகளாக பிடிக்கின்றனர் . இவர்களை விடுவிக்க வேண்டுமானால் அமெரிக்க சிறையில் உள்ள 8 தாலிபான்களை விடுதலை செய்ய வேண்டும் என நிபந்தனையை வைக்கிறார்கள். அதுவும் 24 மணி நேரத்திற்குள் . அவர்களை மீட்டனரா ? இல்லையா? என்பதே இந்த திரைப்படம் . உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம் , 2023 வருடம் தொடங்கியது முதல் இன்று வரை கணக்கில் கொண்டால் கொரியாவில் அதிக பார்வையாளர்கள் பார்த்த மற்றும் வசூலிலும் முதல் இடத்தில் இந்த திரைப்படம் இருப்பது குறிப்பிடத்தக்கது .
கொரிய திரைப்படங்கள் பற்றி சொல்வதற்கு பல விஷயங்கள் உண்டு உலக மக்களின் பாராட்டுகளை பெறுவதில் சாமர்த்திய சாலிகள் , கடந்த வருடங்களில் வெளியான பல திரைப்படங்கள் பலரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது . இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் அதிரடி கலந்த திரைப்படமாக இருக்குமோ என நினைப்போருக்கு ஏமாற்றம் தான் . அதை எதிர்பார்த்தும் பார்க்க வேண்டும் . முழுக்க முழுக்க அந்த சம்பவத்தில் மக்களை மீட்க எடுக்கப்பட்ட முயற்சியை காட்டியுள்ளனர் .
கொரிய வரலாற்றிலே அதிக பிணைக் கைதிகளை பிடித்து பேச்சு வார்த்தை நடத்தி பல கெடுக்களையும் நிபந்தைகளையும் கண்டது இந்த சம்பவம் தான் . இதில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் , மீட்க பட்டனர் அங்கே பேச்சுவார்த்தை நடத்த சென்ற ஒருவரை பற்றியும் முன்னாள் ஏஜென்ட் ஒருவரை பற்றியும் காபித்திருக்கிறார்கள் , அங்குள்ள மக்கள் காப்பாற்ற பட்டனரா ? என்ன மாதிரியான முயற்சிகள் எடுத்தார்கள் என்ன முடிவு என்பதை திரைப்படமாக்கி இருக்கிறார்கள் .
இருவருமே சிறந்த நடிப்பு , ஒன்றிரண்டு பரபரப்பான காட்சிகள் , அட்டகாசமான கேமரா ஒளிப்பதிவு என படம் பார்க்கலாம் . இயக்குனரின் மற்ற எந்த திரைப்படத்தையும் பார்த்ததில்லை , பார்க்க வேண்டும் .
நன்றி
إرسال تعليق