Beyond Silence (2025) – Directed by Marnie Blok | Tamil Intro | Oscars Shortlisted Live Action Short

இந்த short film பார்த்த பிறகு தோன்றிய ஒரே விஷயம் இதுதான்: இரண்டு மணி நேர feature film தரக்கூடிய ஆழமான உணர்வை, கேள்விகளை , தேடல்களை ஒரு சில  short films ஒரே மூச்சில் தந்துவிடுகிறது. “Beyond Silence” அப்படிப்பட்ட ஒரு  short film. 

மூன்று பெண்கள் மட்டுமே. ஒரே அறை. ஒரே உரையாடல். ஆனால் அந்த மூன்று பெண்கள் மூலமாக, இப்படிப் பாதிக்கப்பட்ட அனைத்து பெண்களுக்குமான ஒரு குரல் இங்கே ஒலிக்கிறது. அதுவும் வாய்பேச முடியாத ஒருவரின் குரல் . ஆமாம் இந்த குறும்படத்தில் அப்படிப்பட்ட ஒருவர் தனது வலியையும் வேதனையும் ஒலிக்கவைக்கிறார்.






பெரும்பாலான பெண்கள், தங்கள் வாழ்க்கையில் எங்கோ ஒரு கட்டத்தில் இப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டிருப்பார்கள். Swimming pool coach, gym trainer, librarian, professor, tuition teacher இந்த பட்டியல் முடிவதில்லை. அதுவே இந்த short film-ன் மிகப்பெரிய உண்மை. 
 

இந்த குறும்படத்தில், பேச முடியாத  ஒரு பெண் Anna , கல்லூரியில் டாப் 3 மாணவர்களில் பட்டியலில் இருக்கிறார். அடுத்த கட்ட நகர்வில்  பேராசியர் ஒருவர் மூலம் கிடைக்கும் வாய்ப்பை தவற விட விரும்பவில்லை.ஆனால்  அந்த கல்லூரி பேராசிரியரால் வலுக்கட்டாயமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறாள். அந்த உண்மையை அவள், தன் கல்லூரி dean முன்பு சொல்ல வரும்போது, “உன்னிடம் இதற்கான வலுவான ஆதாரம் வேண்டும்?” சம்மந்தப்பட்டவர்களிடமும் உயர் அதிகாரிகளிடம் எடுத்து செல்லும் போது  ஆரம்பம் முதல் முடிவு வரை  “என்ன நடந்தது என்பதை தெளிவாகச் சொல்லு” “நீ இன்னும் சற்று careful-ஆ இருந்திருக்க வேண்டாமா?” என்பது போன்ற கேள்விகள் அவள் மேல் விழுகின்றன. 

இவை கேள்விகள் போலத் தோன்றினாலும், உண்மையில் அவை victim-ஐ சந்தேகப்படுத்தும் வாக்கியங்கள். அவளுக்காக ஒரு Sign Language translator eva உதவியுடன் அவள் பேசத் தொடங்குகிறாள். அந்த translator கூட, மெதுவாக அந்த வலியை தானே சுமக்கத் தொடங்குகிறாள். ஆதீத கோபத்துடன் கத்தவும் செய்கிறாள் . ஒரு கட்டத்தில் Anna  கேட்கிறாள்: “உங்களுடைய மகளுக்கு இப்படியொரு பிரச்சனை நடந்திருந்தால், இதே மாதிரியா கேள்வி கேட்டிருப்பீங்க?” “உங்கள் வாழ்க்கையில் இப்படியொரு விஷயம் நடந்திருந்தால், என்ன செய்திருப்பீர்கள்?” கையில் ஒரு பேப்பர் ஸ்ப்ரே வைத்துக்கொள்ளட்டுமா ? அந்த ஒரே கேள்வி, முழு அமைப்பையும் (system) உறைய வைக்கிறது. அதை தொடர்ந்து நடக்கும் உரையாடல் மூவருக்கும் முடிவில் என்ன?

17 நிமிடங்களுக்குள், தனக்கு நடந்த கொடுமையை, அதற்குப் பிறகு அவள் அனுபவித்த மௌனத்தை, வேதனை எப்படி ஒரு பெண்ணின் வாழ்க்கையை முழுவதுமாக மாற்றுகிறது என்பதை, இந்த படம் மிக நேர்மையாகச் சொல்கிறது. முடிவில் அவள் மீண்டொருமொரு பாதிக்கப்பட்ட அனுபவத்தை சொல்லும் போது இது இன்னும் எத்தனை பேருக்கு தொடரும் என்ற அச்சம் . 


இது ஒரு பெண்ணுக்கான நீதியை மட்டும் கேட்கும் படம் இல்லை. இது, “இனி மௌனம் வேண்டாம்” என்று தைரியமாகச் சொல்லும் ஒரு எதிர்ப்பு. Oscar shortlist-ல் இடம் பெற்ற இந்த short film-ஐ நான் இரண்டாவது குறும்படமாக  பார்த்தேன். இந்த ஆண்டு shortlist-ஆகிய 15 short films-ல, இது மிக முக்கியமான, மிகவும் அவசியமான ஒரு படம் என்று நிச்சயமாகச் சொல்லலாம். வருடா வருடம் இப்படி ஒரு ஷார்ட் பிலிம் அந்த பட்டியலில் இடம்பெறும்.
நடித்த மூவரில் Translator ஐ தவிர இருவரும் ஏற்கனவே பல படங்களில் நடித்துள்ளனர். இயக்குனருக்கு முதல் குறும்படம். 
நன்றி 

Post a Comment

أحدث أقدم