La Llorona (2019, Guatemala) - Film Intro By Tamil | தன் இழப்பிற்கு பழி தீர்க்கும் லா லொரானா | World Movies Museum

ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி போர்க்குற்ற காரணங்களால் விசாரணை செய்யப்பட்டு இறுதியில் அவர் குற்றவாளி தான் இருந்தும் தண்டனை இல்லாமல் விடுவிக்க படுகிறார். வீட்டை சுற்றி மக்கள் போராட்டம் செய்ய . அவர் வீட்டில் பணிபுரிந்த பலரும் அங்கிருந்து செல்கின்றனர் . புதிதாக வேலைக்கு வரும் பெண் பிறகு நடக்கும் அனுமான்ஷய நிகழ்வுகள் என மேற்கொண்டு காட்சிப்படுத்தியுள்ளனர். 



Must Watch The Trailer Trailer : https://youtu.be/22fb9LhDfXM 

வருடத்திற்கு பத்திற்கும் குறைவாகவே திரைப்படங்கள் வெளிவரும் நாட்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வந்த இந்த திரைப்படம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 2019 ஆம் ஆண்டு குவாத்மாலாவில் இருந்து வெளிவந்த Our Mothers (2019) சிறந்த படம். அதற்கு பிறகு இதனை சொல்லலாம். குவாத்மாலா நாட்டில் நடந்த சம்பவங்களை நினைவில் கொண்டு புராண கதை சேர்த்தி எழுதி இயக்கி இருக்கிறார் Jayro Bustamante . அவரே தயாரித்து எடிட்டிங் வேலையும் செய்திருப்பது கூடுதல் தகவல். அது எல்லாம் என்ன சம்பவம் ஏன் இப்படி என்பதே மீதிப்படம் . வரலாறு, அரசியல், அதோடு புராண கதைகளில் சொல்லப்டுகின்ற பேய் The Weeping Women . + கற்பனை கலந்த , ஹாரர் திரைப்படம் என்றாலும் 

குவாத்மாலா இனப்படுகொலை 

சம்பவம் பற்றி தெரிந்துகொள்வது அவசியம் .. **** 

குவாத்மாலா இனப்படுகொலை **** 1982 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த Efrain Rios Montt சர்வாதிகாரி, எப்சில் மாயா என்ற இனத்தவரை அழிக்க உத்தரவிட்டார். உள்நாட்டு போர் சமயத்தில் குவாத்மலாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கொரில்லாக்கள் இருக்கும் தகவலை அறிந்த ராணுவத்தினர் சோதனை நடத்தியல் எவரும் பிடிபடவில்லை. அந்த ஆத்திரித்தில் அந்த பகுதியில் வசித்த கிட்ட தட்ட 200 க்கு மேலானோர் அன்று ராணுவத்தினரால் கொன்று குவிக்கப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் கற்பழிக்கப்பட்ட ஆண்கள் கொடூரமான பல சித்திரவதைகள் செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ராணுவ ஆட்சிக்கு எதிரான கொரில்லாக்களை காட்டிக்கொடுக்காத காரணத்தினால் அந்த சம்பவம் நடந்தேறியதாக கூறப்படுகிறது . 


கிட்ட தட்ட 36 ஆண்டுகள் நடந்த உள்நாட்டு போரில் இரண்டு லச்சத்திற்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர். உள்நாட்டு போர் 1996 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்தது. அதன் பிறகு சர்வாதிகாரி மேல் இனப்படுகொலை வழக்கு தொடக்க பட்டு விசாரணை செய்து வந்தனர். 2018 ஆம் ஆண்டு ஹார்ட் அட்டாக் வந்ததில் இறந்துவிட. இவருக்கு கீழ் இயங்கிய ராணுவ தலைவர் 171 பேர் மற்றும் குழந்தைகள் பலரை கொன்ற குற்றத்திற்காக.. கொலை குற்ற 30 ஆண்டுகள் வீதம் 5160 ஆண்டுகள் சிறை என தண்டனை கிடைத்தது.. இதுவே அந்நாட்டின் அதிக ஆண்டுகள் கொடுக்கப்பட்ட தண்டனையாம். இந்த திரைப்படமும் புராண கதைகளில் கேள்விப்பட்ட லா லோரணா அழுகைக்கு பழி தீர்க்க போன்ற கற்பனை கதையே. 


மற்ற ஹாரர் படங்களை போல திகில் காட்சிகளோ பதரடிக்கும் காட்சிகளோ, யூகிக்க முடியாத திருப்பங்களோ இல்லை. மிக மெதுவான படம் ஆனால் சொன்ன விஷயம் உங்களை தூங்க விடாது. இல்லை நான் அதை எதிர்பார்த்து தான் பார்ப்பேன் என்றால் ஏமாற்றமே . ஆனால் ஒலிமைப்பும் அதனை கையாண்ட விதமும் மிக சிறப்பாக இருந்தது. 7 நிமிட பாடல் ஒன்றை இறுதியாக இணைத்துள்ளேன் அதனையும் கேளுங்கள் . 

Song : https://youtu.be/9FL7GmbNzK4 

இந்த திரைப்படம் வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதினை வென்றது குறிப்பிட தக்கது. 2020 ஆம் ஆண்டு ஆஸ்காரில் வெளிநாட்டு படப்பிரிவில் கலந்துகொண்டு இறுதி ஷார்ட்லிஸ்ட் பட்டியல் வரை வந்தது . María Mercedes Coroy (அல்மா) வின் நடிப்பு அருமை . வாய்ப்புள்ளவர்கள் கிடைத்தால் பார்க்கலாம்.

எங்கே கிடைக்கும் இந்தப்படம் ?? Where To Watch

Post a Comment

أحدث أقدم