ஒரு திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்ற தூண்டுதல் உங்களுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி . அதாவது நல்ல படங்கள் மற்றும் கலைப்படங்களை பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் நிச்சயம் வரவேற்க தக்கதே . படங்களை பார்ப்பது எப்படி ஒரு கலையோ அதுபோல திரைப்படத்தை தேடிப்பெறுவதும் ஒரு கலைதான் . இந்தியப்படங்களுக்கு இங்கே பல OTT கள் உள்ளன . அதனால் அதற்கு பிரச்னை இல்லை ஆனால் வெளிநாட்டு படங்களோ திரைப்படவிழாக்கள் இன்ன பிற OTT கள் , Bluray டிஸ்க்குகளை தாண்டி எங்குமில்லை என்ற கவலை புரிகிறது .
சரி அதற்கு ஒரு வழி செய்வோம் . முடிந்தவரை அதற்கான தொகையை கொடுத்து rental எடுத்து பாருங்க இல்லையேல் மாற்று வழிக்கு வாங்க . முதலில் கூகுளில் அந்தப்படம் இருக்கிறதா என தேடுங்கள் . பிறகு Youtube ல் இவை இரண்டுடிலும் தேடி பலனில்லை என்றால்
JustWatch என்ற App தளத்தில் காணுங்கள் . JustWatch என்றால் என்னவென்றா தெரியாதா ? இந்த விடியோவை பாருங்கள் .
நீங்கள் தேடும் படத்தின் பெயரை தெளிவாக குறிப்பிட்டால் JustWatchல் லீகளாக படம் எங்கே காண கிடைக்கும் என்ற தகவலை காட்டும் , நவீன வளர்ச்சியில் எல்லாமே DVD யிலும் இல்லை Streamings ல் தான் நிறைய உண்டு . இந்த டெக்னலாஜி காலத்தில் உலகில் எந்த கார்னரில் இருந்தாலும் உங்களால் வெளிநாட்டு படங்களை பார்த்திட முடியும் என உலகப்பட இயக்குனர்களே சிலர் சொல்லியிருக்கிறார்கள் .
ஒருப்படம் லீகள் Information இருந்தால் அதனை தான் முதலில் தருவேன் . இதுவே இல்லீகள் இங்கே சொல்ல முடியாது . இதை எல்லாம் நான் முகநூலில் லிங்க் ஓ இணைப்போ அல்லது எங்கு கிடைக்கும் போன்ற தகவலையோ நிச்சயம் தர முடியாது , தரக்கூடாது , தரவும் மாட்டேன் . pirated link மூலம் ஏற்கனவே முகநூல் குழுவிற்கு பிரச்னை இருக்கு . என்பதை கவனம் கொள்க .
படத்தை நீங்கள் தேடிப்பெறுவதில் இருக்கும் சுவாரசியம் வேறெதிலும் இல்லை . அதை கூடிய விரைவில் உணர்வீர்கள் . .
Post a Comment