ஒரு ஷார்ட் பிலிமில் இந்தளவிற்கு அனல் பறக்கும் காட்சிகளை நீங்கள் பார்த்துள்ளீர்களா என்பது தெரியாது . ஆனா எனக்கு இதுதான் முதல் முறை .சும்மா ரத்தம் தெறிக்க தெறிக்க சண்டை காட்சியெல்லாம் அட்டகாசமாக எடுத்திருப்பார்கள் . He is My Patient ...!!!
"He is My Patient".... "He is My Patient"... He is My Patient...
சரியாக இரண்டு வருடத்திற்கு முன்பு எதார்த்தமாக Vimeo தளத்தை நோண்டிக்கொண்டு இருக்கையில் கண்ணில் பட்டது தான் இந்த குறும்படம் . அப்போது நான் இதனை பார்த்துவிட்டு அப்படியே முகநூலில் ஒரு போஸ்டரை பகிர்ந்தேன், கூடுதலாக லிங்க் ஐயும் போட்டு இதனை உடனே பார்த்துவிடுங்கள் சமயான ஷார்ட் பிலிம் என்றேன் , இந்த போஸ்டரை பார்த்த நண்பர் ஒருவர் பார்க்க வாசன் ஐ கேர் க்கு வாங்க நாங்க இருக்கோம் அப்படின்னு கிண்டலடித்தார் . ஆனால் உண்மையில் அதுதான் ஒரு சிறிய சம்பவமே .. என்னன்னு பாப்போமா ..
விடியக்காலை 3 மணி , கையில் ரத்தக்கரையோடு அறுவை சிகிச்சை பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது . மயக்கத்தில் ஒரு கேங்ஸ்டார் அவர்தான் Patient . அவரை சுற்றி மருத்துவர்களும் பணியாளர்களும் இருக்க . தீடீரென உள்ளே நுழையும் சில ரவுடீஸ் கும்பளால் அனல் களமாக மாறிப்போன ஆப்ரேசன் தியேட்டர் . அங்கே நுழைந்தவர்களை வெளியே போக சொன்னால் போக மறுத்து உள்ளே உள்ளவர்களை அடித்தும் சுட்டும் தள்ளுகிறார்கள் . எஞ்சியிருக்கும் ஒரே ஒரு மருத்துவர் இவர்களை எப்படி எதிர் கொண்டார் என்பதுதான் குறும்படம் .
டாக்டர் ன்னா உர்ர்ன்னு மூஞ்சு வச்சுக்கிட்டு , கிட்னியை பாக்ஸ் ல போடுறது , குழந்தை கடத்துறது , அசால்ட்டா ஆர்மியை இறக்குறது ன்னு டார்க் காமெடி பண்ணமால் . தன்னை நம்பி வந்த நோயாளியை காப்பாத்தணும் அது எப்படி வேணா இருக்கலாம் . இங்கே ஒரு பெண் மருத்துவர் , வந்திருக்க ரவுடிகளை எதிர்கொண்டு அந்த Patient ஐ காப்பாற்றினாரா ? என்பதுதான் இந்த பத்து நிமிட குறும்படம் .
உள்ளே வந்தவர்கள் உனக்கு யார் இவன் , நாங்க அவனை கொல்ல வந்திருக்கோம் ன்னு சொல்வார்கள் , இவரு என்னோட patient ன்னு அவங்களை கொலை பண்ண ஒரு வாய்ப்பு கூட கொடுக்க மாட்டாங்க அந்த மருத்துவர் . ஒற்றை ஆளாக ரவுண்ட் கட்டி ஆட்டம் காட்டுவார் , என்ன பா சொல்றத நம்பவே மூடில, இதெல்லாம் நெஜமாவே அந்த Patient காக தானா ?? இல்லை அங்கதான் ஒரு விஷயம் , அது ஏன்னு பத்து நிமிஷம் மெனக்கெட்டு பார்த்தால் தெரிந்துவிடும் .
இன்றும் Vimeo தளத்தில் காணக்கிடைக்கிறது இணைப்பை இந்தா இங்கேயே விடுறேன் பார்த்துட்டு வந்து சொல்லுங்க எப்படி இருந்ததுன்னு .
Do No Harm from Roseanne Liang on Vimeo.
Post a Comment