Our Mothers (2019,Guatemala) - Film Intro By Tamil | மனித எலும்புக்கூடுகளை தேடும் நாயகன்

பெங்களூர் திரைப்படவிழாவில் 2020 பார்த்த முதல் படம். பலரும் அறியாத உள்நாட்டு போர்களில் உடமைகளையும் உறவுகளையும் இழந்து தவிக்கும் பலரின் கதைகளை சினிமாக்கள் மூலமாக பதிவு செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களின் குடும்ப பெண்களுக்கும் ஆண்களுக்கும் நடந்த துன்பங்கள் ஏராளம். இந்த திரைப்படத்திலும் குவாத்தமாலா படுகொலையை தொடர்ந்து நடக்கும் மக்களின் பக்கத்தை   பற்றிதான் பதிவு செய்து இருக்கிறார்கள். 




ஏற்கனவே குவாத்தமாலா இனப்படுகொலை பற்றியும் போர்க்குற்றங்கள் பற்றியும் . பாதிப்புகளை குறித்தும் இந்தப்படத்தில் அறிமுகம் செய்து வைத்திருந்தேன் . இதனை படுத்துவிட்டு மேலும் இந்த பதிவை படித்தால் நலம் .  



1980 களின் முற்பகுதியில் மத்திய அமெரிக்க தேசத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்களைக் கொன்ற குவாத்தமாலா இனப்படுகொலை பற்றியும் கணவர்களை இழந்து அவர்களின் உடல் எலும்புகளை கூட கிடைக்காத பெண்கள் பலரின் முகங்களின் ஏக்கங்களையும்  , அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் துன்பங்கள் துயரங்களை என பலவற்றை வார்த்தைகளின் மூலமும் வலி வேதனையாகவும் பேசுகிறது இந்தப்படம் . நம்ப ஊர்களில் அல்லது கிராமங்களில் அரசு சம்மந்தபட்ட எதாவது பணியாளர் வந்து உங்களின் அடையாள அட்டைகளை கொண்டு வாருங்கள் Verification செய்ய என்பார், அப்போது கூட்டம் கூட்டமாக நம் மக்கள் அதனை கையில் எடுத்துக்கொண்டு வந்து காண்பிப்பார்கள் . 

La Llorona (2019, Guatemala) - Film Intro By Tamil | தன் இழப்பிற்கு பழி தீர்க்கும் Alma  லா லொரானா 

அப்படித்தான் இங்கே வயதான தோல் சுருங்கிய பெண்கள் தனது இறந்து போன அல்லது காணாமல் போன கணவனை பற்றிய தகவலை தெரிந்துகொள்ள அலைமோதுகிறார்கள் .  எர்னஸ்டோ தடயவியல் அறக்கட்டளையில் பணிபுரிகிறார், குவாத்தமாலா இனப்படுகொலையின் போது ஆயிரக்கணக்கான போர் வீரர்கள் மற்றும் குடும்பங்களில் இருந்து காணாமல் போனவர்கள் என ஒரு பெரிய பட்டியலைக் கையில் வைத்துக்கொண்டு அவர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார். இது மாயன் இனப்படுகொலை என்றும் அழைக்கப்படுகிறது . 


உள்நாட்டு போரின் போது காணாமல் போனவர்களின் அல்ல இறந்தவர்களின் எலும்புகளை வைத்தும் சில ஆராய்ச்சிகளின் மூலமும் அவர்களை கண்டறிந்து விடலாம் என முயற்சி செய்பவர். 1980 ஆம் ஆண்டு Guatemala வில் நடந்த உள்நாட்டு போரில் கொரில்லா படையில் இருந்த தன்னுடைய கணவனை கண்டறியுமாறு ஒரு வயதான பழங்குடி பெண் ஒருவர் வருகிறார். இந்த பெண் சொல்வதை எல்லாம் வைத்து பார்க்கும் பொழுது அதே படையில் இருந்த தன்னுடைய தந்தை பற்றியும் தெரிந்து கொள்கிறான். அவருடைய தந்தையும் கண்டுபிடித்து விடுவோம் என்ற நம்பிக்கை அவனுக்குள் எழுகிறது. அவனுடைய தாய்க்கு தெரியாமல் தந்தையை கண்டுபிடிக்க முயற்சி செய்கிறான் . கிடைக்கும் புகைப்படத்தை வைத்துக்கொண்டு இவனுடைய தந்தையும் தேட ஆரம்பிக்கிறான். அதற்கு பிறகு பிரச்னைக்குரிய போர் குற்ற சோதனைகளுக்கு மத்தியில் . போரில் இறந்தவர்களின் எலும்புகளை மீட்டெடுத்ததற்காக குற்றம் சாட்டப்படுகிறாரன். இறுதியில் அவனுக்கு கிடைத்தது என்ன என்பதனை தன்னுடைய திரைமொழி மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர். 


முக்கிய பாத்திரமாக நடித்த எர்னஸ்டோவை ஏற்கனவே Heli (2013) திரைப்படத்தில் பார்த்து இருக்கிறேன். மிக சிறப்பாகவே நடித்து இருந்தார். படத்தில் நடித்த பழங்குடி மக்கள் யாரும் சினிமாவிற்கு தொடர்பில்லாதவர்கள். அவர்கள் ஏற்பட்ட கொடுமைகள் , அவர்கள் தாங்கிக்கொண்ட வலிகள், நேர்ந்த கொடுமைகள் என இயக்குனர் பார்ப்போர் கண்களில் கண்ணீர் வர வைத்து விட்டார். அவர்களுக்கான சாட்சியமாகவும் பெண்களின் துன்பத்தையும் முதன்மையான பதிவு செய்து காட்டி இருக்கிறார் . படத்தின் இயக்குனருக்கு இதுவே முதல் முழு நீள திரைப்படம். இதற்கு முன்பு இரண்டு டாக்குமென்டரி படங்களை எடுத்து இருக்கிறார். திரைப்பட துறையில் முக்கியமான துறைகளான எழுத்து, இயக்கம், ஒளிப்பதிவு ,எடிட்டிங், சவுண்ட் டிசைன் என முன்னமே பணியாற்றி இருப்பதானால். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து சிறப்பாக செய்துள்ளார். 



78 நிமிஷமே ஓடக்கூடிய இந்த திரைப்படம் Cannes திரைப்பட விழாவில் கேமரா டி'ஓர் விருதை வென்றுள்ளது. மேலும் பல திரைப்பட விழாக்களில் திரையிடபட்டுள்ளது.. மீண்டும் ஒரு முறை பார்க்க வேண்டிய படம். ஆனால் திரைப்பட விழாவை தவிர வேறெங்கும் பார்க்க தற்போது எந்த வழியும் இல்லை. எனக்கு பெங்களூர் திரைப்படவிழாவில் பெரிய திரையில் பார்த்த அனுபவம் நன்றாக இருந்தது. Official submission of Belgium for the 'Best International Feature Film' category of the 92nd Academy Awards in 2020. But not nominated... இயக்குனரின் பேட்டியை கீழே இணைத்துள்ளேன். படம் பார்த்தவர்கள் மட்டும் பேட்டியை பாருங்கள். 



இந்தப்படத்தை அமெரிக்காவில் இருப்பவர்கள் சில தளங்களில் Rental எடுக்கலாம் . MUBI TR VPN பயன்படுத்தியும் பார்க்கலாம் . நன்றி 

Post a Comment

Previous Post Next Post