இந்த அறிமுகத்தில் பால்மா என்று பெயரிடப்பட்ட ஒரு அறிவாளியான நாயின் 2 வருட பாசப்போராட்ட கதையைத்தான் பார்க்க போகிறோம் . வெளியூரில் தனக்கு கிடைத்த வேலைக்காக அவசர அவசரமாக தான் வளர்க்கும் நாயுடன் விமான நிலையத்திற்கு செல்கிறார் ஒருவர் . நாயை தன்னோடு அழைத்து செல்ல உரிய மருத்துவ ஆவணம் ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும் , அப்படி இருந்தால் தான் அந்த விமானத்தில் பயணிக்க முடியும் , எதிர்பாராத விதமாக மருத்துவ ஆவணம் இல்லை. அதனால் அங்கேயே விட்டுவிட்டு அதன் உரிமையாளர் மட்டுமே விமானத்தில் செல்கிறார் . வாடிய முகத்துடன் தனது உரிமையாளர் ஏறிய விமானத்தை துரத்திக்கொண்டே ஓடும் அந்த நாய் விமான நிலையத்திலே தனித்து விடப்படுகிறது .
குழந்தைகளை மையமாக கொண்ட அல்லது செல்லப்பிராணிகளை மையமாக கொண்ட படங்கள் எப்போதுமே தனிப்பட்ட வகையில் கவனம் ஈர்க்கும் , மற்ற மொழி படங்களில் எப்படியும் வருடத்திற்கு ஒன்றாவது வந்துவிடும் . கடந்த வருடங்களில் வெளியான இந்திய , தமிழ் சினிமா க்களில் குறிப்பாக குழந்தைகள் படங்களை தேடிப்பார்த்தால் அவ்வளவு சிறப்பொன்றும் இல்லை . தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையம் கொண்டு நிறைய படங்கள் வரவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம் . இது போன்ற படங்களுக்கு எப்படியும் ரசிகர் பட்டாளமே இருக்கும் . குறிப்பாக குழந்தைகளை முக்கிய காதாபாத்திரமாக முன்வைக்கும் படங்கள் பல்வேறு ரசிகர்களின் கவனத்தை மற்றும் கூர்ந்த வரவேற்பை பெரும் குழந்தைகள் படமென இதனை தவிர்த்து விடாதீர்கள் இது எல்லாமே எல்லோருக்குமானது தான் .
சரி பால்மாவின் கதைக்கு வருவோம் , எப்படியும் ஒருநாள் உரியவரை கண்டுபிடித்துவிடுவோம் விட்டுச்சென்று போனவர் திரும்பி வருவார் என அதே விமான நிலையத்தில் பல நாள்கள் காத்திருக்கிறது . தொடர்ந்து வாரக்கணக்கில் தன்னை விட்டு சென்ற எஜமானர் ஏறிய அதே விமானம் வரும்போதெல்லாம் சத்தத்தை வைத்தே விமான ஓடுதளத்தில் ஓடி வந்து பார்க்கிறது . ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது . அதே விமான நிலையத்திற்கு வரும் 9 வயது சிறுவன் தனது தாயை இழந்தவன் . அவனுக்கு தந்தையோடு வாழ்வது விருப்பமில்லை , பால்மாவிற்கும் அந்த சிறுவனுக்கும் ஒரு சிறு நட்பு ஏற்படுகிறது . அந்த சிறுவனுக்கு பால்மாவை மிகவும் பிடித்துவிட , எஜமானரின் அன்புக்கு ஏங்குகிறது என கண்டறிந்து ஒரு லெட்டர் ஒன்றை எழுதுகிறான் . . அந்த சிறுவன் எப்படியாவது உரியவரிடம் பால்மாவை ஒப்படைக்க வேண்டும் என்ற சிறு முயற்சிகளை எடுத்து அது பெரிய அளவில் வந்து முடிகிறது . இறுதியில் என்ன ஆனது ? பால்மாவை ஒப்படைத்தானா ? விமான நிலையத்தில் எப்படி ஒரு நாய் 2 வருடத்திற்கு மேல் இருந்தது ? அரசாங்க நிலைப்பாடு என்ன ? சிறுவன் நட்பு என படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் .
உண்மையான நட்பையும் எண்ணிலடங்கா அன்பையும் சொல்லும் இந்தப் படம் நிச்சயம் உங்களை கவரும் . அவசியம் குழந்தைகளோடு பாருங்கள் . சிறுவனின் நடிப்பு அபாரம் அவன் சொல்லும் ஒரு வசனம் நம் அனைவருக்கும் தான் "உயிருள்ள எதையும் கூண்டில் அடைக்காதே ".
வாழ்நாளில் எப்படியும் நாம் ஒரு செல்லப்பிராணியாவது வளர்த்திருப்போம் .தன்னை வளர்க்கும் எஜமானர்கள் மேல் அளவுகடந்த அன்பு வைத்து அவர்களை மிகவும் விரும்புவது நன்றியுள்ள நாய்கள் தான் . அப்படி நம்மை ஆச்சரிப்பட வைக்கக்கூடிய எத்தனை எத்தனையோ செல்லப்பிராணிகள் சம்மந்தப்பட்ட படங்களை பார்த்திருப்போம் , அதில் பெரும்பாலும் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து உருவாக்கி இருப்பார்கள் . இதுவும் உங்களுக்கு மிகவும் பிடிக்கும் , நாய் பிரியர்கள் நிச்சயம் தவறவே விடக்கூடாத படம் . அவ்வளவு அழகாக ஒவ்வொரு காட்சியும் .
உண்மை சம்பவங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் ஏற்கனவே Tethered to the Runway 1989 என்ற பெயரில் வெளிவந்துள்ளது . எப்படி ஹச்சிகோ திரைப்படம் என்னை கவர்ந்ததோ அதே போலவே இந்த திரைப்படமும் . இதனை தற்போது Youtube ல் ஆங்கில Subtitles உடன் காணக்கிடைக்கிறது அவசியம் பார்க்கலாம் . உங்களுக்கு தமிழில் துணை எழுத்துக்கள் தேவைப்பட்டால் சொல்லுங்கள் கூகிள் AI உதவியுடன் மொழிமாற்றம் செய்து தருகிறேன் பயன்படுத்தி கொள்ளுங்கள் .
Full Movie Link :
Post a Comment