Dream Home (2010,Hong Kong) Uncut - Film Intro By Tamil | தன் கனவு வீட்டிற்க்காக கொலைகாரியாகும் நாயகி | World Movies Museum

சர்வசாதாரணமாக கொலையை செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடும் சில படங்களை பார்த்து இருக்கேன் . பார்க்கின்ற பெரும்பாலான படங்களில் ஒரு சில படங்களை பற்றி துளியும் பேசிவிடக்கூடாது அதை பற்றி எழுதக்கூடாது என உறுதியாக  இருப்பேன் . காரணம் அந்தப்படத்தின் காட்சிகள் கொடுத்த தாக்கம் . 


உதாரணத்திற்கு செர்பியன் பிலிம்  என்ற படத்தை குறிப்பிட்டு சொல்லலாம் . பிறகு Dara , Macabre , Inside , Cold Fish இன்னும் பல  இது போன்றவற்றை பற்றி  எழுதுவதை கூட  தவிர்த்திருக்கிறேன் . சோ இந்தப்படமும் இந்த லிஸ்ட் ல் இணைக்க 40% பொருந்தி போகிறது என்பதை ஆரம்பத்திலே குறிப்பிட்டு விடுகிறேன் .  இந்தப்படங்கள் எனக்கு பிரச்சனை இல்லை என்பவர்கள்  மட்டுமே ட்ரைலர் பார்த்துவிட்டு பார்க்கவும் . 18+படம் தொடக்கத்திலையும் முடிவுலையும் ஹாங்க் காங்க் வீடுகளை பற்றி வரும் . அதாவது 2007 கணக்கின் படி ஒரு சரராசி மனிதனின் வருமானம் 10000 HK டாலர்கள் என வைத்துக்கொண்டால்  அவர்களால் வருடத்திற்க்கு பத்து லச்சத்திற்குள் வருமானம் ஈட்ட முடியும் , பொது செலவு போக சேமிப்பில் சேர்த்தி அவர்கள் வீடு வாங்க வேண்டுமென்றால் எவ்வளவு செலவாகும் தெரியுமா ?

ஒரு 600 முதல் 800 சதுரடி வீடுகளை  சாதாரண அபார்ட்மெண்டில் வாங்கினால் கிட்ட தட்ட 6 முதல் 10 கோடிகள் வரும் . சாமானியனால் எதிர்பார்த்திருக்க முடியாத தொகை அது. நாளுக்கு நாள் அது எங்கே வந்து விடும் என்பது தெரியாது . மதிப்பே கூடிக்கொண்டே போகும் . நமக்கான நிரந்தர வீடு அதுவே என் கனவு என பலபேருடைய கனவு வெறும் கனவாகவே கலைந்துவிடும் . 


இதுவே கடற்கரை ஒட்டிய துறைமுக பகுதியில் வாங்கினால்?  இந்திய மதிப்பு படி பார்த்தால். ஒரு சிறிய Sqft டைல்ஸ் கல் அளவிற்கு பகுதியை நாம் வாங்க வேண்டும் என உத்தேசத்தி பாருங்கள்  ,கிட்ட தட்ட 3 லச்சம் ருபாய் கையில் வைத்திருக்க வேண்டும் .  சரி வாடகைக்கு இருக்கலாம் என்றால் சிறிய ONE BEDROOM KITCHEN  வீட்டையும் இடத்தையும் பொறுத்து  மாதம் 3 முதல் 5 லச்சம் கொடுக்க வேண்டி வரலாம் , கொஞ்சம் தலை சுத்துதா ஆக 2022 கணக்குப்படி பார்த்தல் அவர்களின் avg வருமானம் மூன்றிலிருந்து ஐந்து மடங்கு உயர்ந்திருக்கும் அப்படின்னா மாசம் அஞ்சு லச்சம் வருமானம் ன்னா வீடு விலைகள் இப்போ ???  , Just - Cost Of Livng in Hong Kong ன்னு கூகுள் பண்ணுங்க உங்களுக்கு இன்னும் தெரியும்  . சோ அப்படிப்பட்ட நிலையில் நகரம் நம்மை நரகமாக சிந்திக்க வைக்கும் . 


அப்படி சிறுவயதில் தான் வசித்த வீடுகளை இழந்துவிடும் ஒரு சிறுமி. வளர்ந்து எப்படியாவது தான் வசித்த அதே பகுதியில் துறைமுகம் ஒட்டிய கடற்கரை View  பகுதியில் அபார்ட்மெண்டில் தனெக்கென ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக கொண்டுள்ளார்  . இதில் என்ன தவறு  இருக்கிறது எல்லோருக்கும் இருக்கும் அதே விருப்பம் அதே கனவு ஆனால் அந்த லட்சியத்திற்காக பல எதிர்பார்க்கவே முடியாத சம்பவங்களை செய்கிறார் ஒரு பெண் என்றால் உங்களால் நம்ப முடியுமா ? அதுதான் இந்தப்படம் குறிப்பா 18+ கடந்தவர்கள் பார்க்கலாம் . 


இதை ஒரு சிறந்த பெஸ்டிவல் திரைப்படமாக கொண்டு வந்திருக்கலாம் ஆனால் இயக்குனர் இதை ஒரு கொலைவெறி கொலைகார படமாக எடுத்து இருக்கிறார் . இது எல்லோருக்கும் நிச்சயம் பிடித்து விடாது , நம் ஆட்களுக்கு கீர்த்தி சுரேஷ் கொலை செய்வதையே தாங்கி கொள்ள முடியவில்லை , இந்தப்படமெல்லாம் வெறுத்து தள்ளி விடுவார்கள்  , ஏன் பார்க்கும் பொது கூட பல வெறுப்புகளை தரலாம் . இது ஒரு Slasher Killer திரைப்படம் . ட்ரைலர் பார்த்துவிட்டு எதையும் முடிவு செய்யுங்கள் . இதிலும் CUT , UNCUT என்ற இருவிதமான பிரிண்ட் இருக்கிறது . 


கதை சொல்வதில் நேர்கோட்டில் செல்லாமல் முன் பின் முறை காட்சிகளை  இழுத்து ஆங்காங்கே வருவதினால் புரிந்துகொள்வதில் சற்று சிரமம் இருக்கலாம் , ஆனால் கொலைவெறியோடு கொலைசெய்யும் காட்சிகள் எல்லாம் இதயத்துடிப்பை அதிகரிப்பு செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு . இதிலும் கூட நம் சினிமா பிரியர்கள் வயலன்ஸ் மட்டும்தான் இருக்கிறது எந்தவொரு உணர்வுகளோடும் படம் ஒட்டவில்லை , முதலில் இதற்ற்க்கெல்லாமா கொலை என அவர்களின் கருத்துக்களை கொண்டு வந்துவிடுவார்கள்  . 

கஷ்டமும் ,வலியும் ,வேதைனையும் நமக்கு வரும்போது மட்டும்தான் அதோட முழுமை தன்மையை உணர முடியும் . அது எதுவுமே இல்லாம இதுக்கெல்லாமா ஒருதத்தர் சீரியர் கில்லர் ஆகுறார் , சைக்கோ கொலைகாரர் ஆகுறார் , பழிவாங்க துடிக்கிறார் என முகநூல்களில் சினிமா பிரியர்களின் கருத்துக்கள் இருக்கும் , அனைவரின்  கருத்துக்களும் வரவேற்க தக்கதே ஆனால் அந்த நிலை நம்மை எப்படி மாற்றும் எனபது யாருக்கும் தெரியாது. அதனால் தான் இதுபோன்ற படங்களில் நான் பின் கதை முன் கதை என கொலைகாரனுக்கு நீதி சேர்க்கும் கருத்துக்களை கண்டுகொள்வதில்லை . அவன் ஒரு கொலைகாரன் அவ்வளவுதான் ஹாரர் திரைப்படத்தை எதை நினைத்து பார்க்கிறோமோ அதுவரை நமக்கு நல்லது . இந்தப்படம் வேறு மாதிரி வந்திருக்க வேண்டும் , ஹாரர் Subgenre slasher பிரியர்கள் மட்டுமே ஒருமுறை பார்க்கலாம். 


Dream Home 2010 ‘維多利亞壹號’ Directed by Pang Ho-cheung

இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை என நினைக்கிறன் . தேடிப்பாருங்கள் கிடைக்கவில்லை என்றால் கேளுங்கள் தருகிறேன் .

எங்கே கிடைக்கும் இந்தப்படம் . Where to watch? 


    $results={3}


2 Comments

  1. Nice write up. Please include in all your reviews, where the movies are available for viewing by the readers like Youtube,Amazon Prime, Netflix etc .

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post