ஆறு வயது Anna வின் பார்வையில் இரண்டாம் உலகப்போரின் சிறு பக்கங்கள் தான் இந்தப்படம் . உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதையை தழுவி 75 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு திரைப்படமாக 2018 ல் வெளிவந்தது . தரமான உலக சினிமாக்கள் பல கவனிக்கத்தக்க + Experimental திரைப்படங்கள் பங்குபெரும் IFFR ல் இந்த திரைப்படம் இடம் பெற்றது .
சில திரைப்பட விழாக்களில் சிறந்த படத்திற்கான விருதுகளை வென்றுள்ளது கூடுதல் தகவல் . நாஜிப்படைகள் ஆக்கிரம்பிப்பு செய்த பகுதியில் இருந்து தொடங்குகிறது இந்தப்படம் .
யூதர்களை கொன்று புதைத்துவிட்டு படைகள் கிளம்ப , தீடீரென அந்த பிணங்களுக்கு நடுவே உயிரோடு எழுகிறாள் Anna , குடும்பத்தை இழந்த Anna அருகிலிருந்த ஒரு வீட்டிற்குள் வீட்டிற்கு செல்ல அவர்கள் நாஜிக்கள் ஆக்கிரமிப்பு செய்த தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கிறார் . அந்த கட்டிடமோ நாஜிப்படைகளின் உயர் அதிகாரிகள் சிறிது காலம் தங்குமிடமாக இருக்கிறது . அது ஒரு பழைய பள்ளிக்கூடம் .
அதில் புகைபோக்கி ஒன்றில் ஒளிந்துகொள்ளும் ஆனா உணவின்றி நீர் இன்றி நாள்கணக்கில் வாரக்கணக்கில் இருக்கிறார் . ஒருநாள் இரவு நேரத்தில் வெளியே வர அந்த ரூமில் கிடைப்பதை உண்கிறாள் குடிக்கிறாள் . பலவற்றை எதிர்கொள்கிறாள் . இந்த நிலை நீடித்ததா ?எத்தனை நாள்கள் ? என்ன ஆனார் ? ஒரு குறுகிய கேமரா கோணங்கள் மூலமும் அன்னாவின் பார்வை நமக்கு காட்சிகளை காண்பிக்கப்படுகிறது .
படத்தின் ஒளிப்பதிவு மிக நன்றாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள் . எப்படி சிறுமியை நடிக்க வைத்தார்கள் என்பதே ஆச்சர்யம் . ஒவ்வொரு காட்சிகளும் சிறு சிறு துணுக்குகள் போக வருகிறது . ஒரே நேர்கோட்டில் செல்லும் அனாவின் பார்வையில் இந்த போர் காலகட்ட படம் சினிமா பிரியர்கள் பார்க்க வேண்டிய படம் . சின்ன படம் தான் 75 நிமிடம் அவள் ஒரு வார்த்தை கூட பேசி இருக்க மாட்டாள் ஆனால் நிச்சயம் ஒரு சிறிய தாக்கத்தையாவது உங்களிடம் ஏற்படுத்தி இருப்பார்,
இயக்குனரின் மற்ற படங்களை பார்க்க வேண்டும் . நீங்கள் இந்தப்படத்தை பார்த்து விடுங்கள் என்றே பரிந்துரை செய்கிறேன் . இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை என நினைக்கிறன் . தேடிப்பாருங்கள் கிடைக்கவில்லை என்றால் கேளுங்கள் தருகிறேன் .
Anna’s War 2018 ‘Война Анны’ Directed by Aleksey Fedorchenko
Post a Comment