Mother of Mine (2005,Finland) - Film Intro By Tamil | போரினால் வேறு நாடுகளுக்கு அனுப்பட்ட 70000 மேற்பட்ட குழந்தைகள் | World Movies Museum

குழந்தைகள் சார்ந்த திரைப்படங்கள் எல்லாம் தனிப்பட்ட ஒரு உலகம். அது எல்லாவருக்கும் பிடித்துவிடும் என்று கூற முடியாது .  பார்வையாளன் முற்றிலும் தன்னை மறந்து விடக்கூடிய அனுபவங்கள் குழந்தை திரைப்படங்களில் உண்டு , அனிமேஷன் மட்டுமே குழந்தைகள் சார்ந்த திரைப்படங்கள் அல்ல  . Mother Of Mine உலகப்போர் சமயத்தில் பின்லாந்தில் இருந்து கிட்டத்தட்ட 70000+ குழந்தைகளை சுவீடன் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் . 5 முதல் பத்து வயதுள்ள குழந்தைகள் தான் பெருமளவு .  அங்கே சிலர் மற்ற குடும்பத்தினர்களால் தத்தெடுத்து கொண்டார்கள் , மற்றவர்கள் குழந்தை காப்பகத்தில் வளர்ந்தார்கள் . இந்த நிகழ்வை கொண்டு  அதில் கற்பனையாக எழுதப்பட்ட கதைதான் இந்த என்னுடைய அம்மா திரைப்படம்

Mother of Mine 2005

"mother of mine"



Director :  Klaus Härö  Country: Finland,Sweden  Language : Finnish,Swedish  Running Time : 111 Mins 


ஒரு போர் தங்கள் இருப்பிடத்தை விட்டு , வீட்டை விட்டு , உறவுகளை விட்டு எப்படி வெளியேற தூண்டுகிறது என்பதனை குழந்தைகள் வாயிலாக காண்பித்திருக்கிறார்கள்  . பின்லாந்தில் அந்த காலகட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று போர்கள் நடந்தேறின . குளிர்கால போர்  இரண்டாம் உலகப்போர் அதனை தொடர்ந்து மற்றுமொரு போர் என இரண்டாம் உலகப்போர் முடிவதற்குள் மூன்று போர்களையும் இரண்டு எதிர்ப்புகளையும் கண்டனர் . பல உயிர் இழப்புகள் , தொடர்ந்து குடும்பங்களில் மரணம் ,என போர் சூழல் முடியும் வரை தங்களின் குழந்தைகளுக்கு அடைகளம் கொடுத்து உதவுமாறு அரசாங்கம் கேட்டுக்கொள்ள . அண்டை நாடான சுவீடன் உதவ முன்வந்தது , பல இழப்புகளையும் சந்தித்த நாட்டிற்கு மற்ற நாடுகளும்  உதவும் முன்கரம் வந்தார்கள் .  


போரில் உயிரிழந்த குடும்பத்தை சார்ந்த குழந்தைகளுக்கு முன்னுரிமை அளித்து அவர்களை சுவீடனுக்கு அனுப்பினார்கள் . இதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட , பெயர் , விலாசம் , எங்கிருந்து , எங்கே , பதிவு எண் , வயது என ஒரு அட்டை ஒன்றை கழுத்தில் மாட்டிவிட்டு அவர்களை அங்கிருந்து கூட்டி சென்றார்கள் . பின்லாந்தில் இருந்து வெளியேறிய குழந்தைகள் அனைவரும் வெகு சிறப்பாக ஒன்றும் வாழ்ந்துவிடவில்லை . அவர்களுக்குள்ளும் பல பிரச்னைகள் . உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் . இதை எல்லாம் கடந்து அவர்களின் வாழ்வு எப்படி இருந்தது என்பதனை ஒரு சிறுவனின் வாயிலாக நமக்கு காண்பிக்கிறார்கள் . போருக்கு பிறகும் கூட 10 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட குழந்தைகள் சுவீடனில் தங்கினார்கள் . 

கிட்ட தட்ட 4000 வீடுகளில் அவர்கள் வசித்தார்கள் 1000 மேற்பட்ட காப்பகங்களிலும் இருந்தார்களாம் . போர் முடிந்து வீடு திரும்பிய குழந்தைகள் பலர் தங்களின் மொழியை மறந்து விட்டார்கள் என்பதும் கூடுதல் தகவல் . அதுபோக செல்லும் முன் இருந்ததை விட இங்கே வரும் பொழுது பெரும் மன உளைச்சலை ( சொந்த நாட்டிற்கு திரும்பும் பொழுது ) சந்தித்திருந்தார்கள் பலர் உடல்ரீதியாகவும்  அதிகம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் தகவல்  . 

இந்த படத்தை பற்றியோ அல்லது இந்த உண்மை சம்பவத்தை பற்றியோ மேலும் தெரிந்துகொள்ள இணையத்தில் War Childrens அல்லது Finnish War Children என தேடினால் சிறு சிறு படங்களும் டாக்குமென்டரிகளும் உங்களை நிச்சயம் வருந்த செய்யும் . 


போருக்கு முன் கதை அல்லது பிந்தைய கதைகளை கையாளும் திரைப்படங்கள் எப்போதுமே கவனம் பெரும் . அந்த வகையில் சில  வருடங்களுக்கு முன்பே பதிவுசெய்து வைத்து சரியான Subtitles கிடைக்காத காரணத்தினால் வெகு நாளாக பார்க்காமல் இருந்த திரைப்படம் .வழக்கம் போல இணையத்தில் தேடுகையில் எதிர்பாரத விதத்தில் கிடைத்த Subtitle ஓடு  படத்தினை துவங்கினேன் . சிறப்பான நடிப்பு அதனைவிட  அருமையான காட்சிகள் , நம்மையும் அவர்களோடு பயணப்பட வைத்துவிட்டார்கள் என்றே சொல்லலாம் . 78 வது சர்வதேச சிறந்த ஆஸ்கார் திரைப்படங்கள்  பட்டியலில் பின்லாந்து சார்பாக கலந்துகொண்டது , ஆனால் நாமினேஷனில் இடம்பெறவில்லை . 

அந்த ஆண்டு தென் ஆப்ரிக்க படமான Tsotsi 2005 வெற்றி பெற்றது , அது தமிழில் அமீர் நடிக்க யோகி என்று இன்ஸ்பயர் ஆனதும் குறிப்பிடத்தக்கது . ;) 


இந்த திரைப்படம் இந்தியாவில் எந்த OTT களிலும் தற்போது இல்லை . 

Mother of Mine 2005

1 Comments

Post a Comment

Previous Post Next Post