வார் தொடர்பான திரைப்படங்களை தேடிக்கொண்டு இருக்கையில் 1999 ஆம் ஆண்டு கொசோவா வார் பற்றி ஒரு குறும்படம் பார்க்க முடிந்தது . இந்தியாவில் திரையிடப்பட்ட முதல் கொசோவன் ஷார்ட் பிலிம் இதுதான் . SHAMIANA ஷார்ட் பிலிம் குழுமம் இதனை இந்தியாவில் திரையிட்டது . இதனை ஏற்கனவே எங்கோ நம் நண்பர் பரிந்துரைத்த நியாபகம் . , ஆனால் யார் என்பது நினைவிற்கு வரவில்லை . இறுதியில் அந்த பதிவையும் கண்டு பிடித்து விட்டேன் .
Pfools பக்கம் Pradeep Pandian Chelladurai சகோ அவர்களின் 100 நாடுகள் 100 சினிமா என்ற புத்தகத்தை எழுதும் பொழுது ஒரு 25 படங்கள் பற்றி முன்னமே முகநூலில் எழுதிவிட்டார் . அதற்கு பிறகு மேலும் 25 . புத்தகமாக வருகையில் 100 நாடுகளை தேர்வு செய்து இதில் அறிமுகத்திய சில படங்களை மாற்றி புத்தக வடிவில் வெளியிட்டார் . அந்த சமயத்தில் முகநூலில் Kosova நாட்டு சார்பில் அவர் பரிந்துரை செய்த ஷார்ட் பிலிமிது . நன்றி ப்ரோ .
இயக்குனர் இதுவரை குறும்படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் அதில் இது பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது . இந்த குறும்படத்தில் இரண்டு விதமான White Balnce காட்சிகளை இயக்குனரே எடிட் செய்துள்ளார் . ஒரு சூழலில் இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பார் அது என்ன என்பதுதான் .
வேறெந்த கதையும் தெரிந்துகொள்ளலாம் பார்த்துவிட்டு அதனை பற்றி வேண்டுமென்றால் தேடுங்கள் . போர் தொடர்பான , போருக்கு முந்தைய அல்லது பிறகான கதைகளை கொண்டு பல படங்கள் வந்தாகிவிட்டது . தெரியாத தகவல்கள் எத்தனையோ திரைப்படங்கள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது . ஒவ்வொன்றை பார்க்கும் பொழுதும் அது தொடர்பான தகவல்களை தேடிப்பிடித்து படித்துவிடுவது நல்லது .
1. யுகோஸ்லாவியா வரலாறு
2. யுகோஸ்லாவியா உடைந்த கதை
3. பால்கன் யுத்தம்
4.யுகோஸ்லாவியா போர்கள்
5.பிரிவினை
6.யுகோஸ்லாவியா சினிமா
என ஒன்றன் பின் ஒன்றாக தேடலை துவங்கிவிட்டது இந்த குறும்படம் . உங்களுக்கு நேரமிருந்தால் அவசியம் அந்த குறும்படத்தை 20 நிமிடம் பாருங்கள் நீங்களும் தேடலாம் . 100 நாடுகள் 100 சினிமா புத்தகம் எல்லாம் வாய்ப்பிருந்தால் வாங்கிக்கொள்ளுங்கள் . திரைப்பட பிரியர்களுக்கு உதவியாக இருக்கும்.
Post a Comment