தனக்கு நேர்த்த துயரத்திற்கு சரியான நீதி கிடைக்கவில்லை . தான் அனுபவிச்ச அதே வலியும் வேதனையும் இழப்பையும் இன்னொருத்தனுக்கு திருப்பி தர முடியுமா ? அதுதான் படம் .
ஹாரர் திரைப்படங்கள் என்றாலே பேய் பூதம் பிசாசு ஆவி மட்டும்தான் என்று சுழன்றுகொண்டிருந்த தமிழ் சினிமாவில் இதுபோன்ற Sub Genre Revenge த்ரில்லர்கள் நல்லா ரத்தம் தெறிக்க தெறிக்க வருவது வரவேற்கத்தக்கது , French Extreme படங்களில் வருவது போல Uncut , Cut என்ற இருவிதமான வெர்சன்களில் தமிழில் வரும் காலங்களில் படங்கள் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . இதுபோன்ற படங்களை பார்க்க குறிப்பிட்ட ஆடியன்ஸ் இருப்பார்கள் , அவர்களை மட்டுமே நோக்கி உருவாக்கப்படும் படங்கள் இவை .
குறிப்பாக இது எல்லாருக்குமானதல்ல , பிறகு பார்த்துவிட்டு புலம்பித்தள்ளக்கூடாது . இதுவரை நான் இதுபோன்ற படத்தையே பார்த்ததில்லை என்போருக்கு இந்தப்படம் உண்மையில் ஒரு அட்டகாசமான அனுபவத்தை தரும் , இல்லை ஏற்கனவே நான் டஜன் கணக்கில் பார்த்துள்ளேன் என்றால் இது ஒரு AVG படமே . .
Don Vito Corleone: Revenge is a dish best served cold. - காட்பாதர்
பெரும்பாலான பழிவாங்கும் படங்களைப் போல மிக அமைதியாய் துவங்கியது. பிறகு வேட்டை தான் . பெண் கதாபாத்திரங்கள் முன் நிறுத்தி Revenge த்ரில்லர் ஒன்றை கொண்டுவந்திருப்பது சிறப்பு , நான் ரிவென்ஜ் த்ரில்லர்களை அதிகம் பார்க்க ஆரம்பித்தது கொரியப்படங்கள் மூலம் தான் . கிளட்டுப்பையனும் , நான் சாத்தானைப் பார்த்தேன் என்ற இரண்டு படம்தான் , புரியவில்லையா ? Old Boy , I Saw The Devil இந்த இரண்டும் தான் . இதில் I Saw The Devil நாயகன் தன் மனைவியை கொன்றவனுக்கு நரக வேதனை என்றால் என்ன ? என்பதற்கு பதில் செய்திருப்பார் , ஓ நீங்க நினைச்சது விட அதுக்கும் மேல செய்திருப்பார் , பாக்கலைன்னா பாருங்க .
மறுபடி சாணிக்காயித்துக்கு வருவோம் . இரு முக்கியமான கதாபாத்திர அமைப்போடு மிக சிறப்பான படம் , ரெண்டும் பேருமே தனித்துவமா தெரிகிறார்கள் , கூடுதலாக ஆங்காங்கே வரும் பின்னணி இசையும் ஒளிப்பதிவும் தனிப்பட்ட முறையில் கவர்ந்து ஈர்க்கிறது . ஒரு சில காட்சிகளை தவற , பல இடங்களில் நல்ல மேக்கிங் . 90 நிமிடத்தில் வந்திருந்தா இன்னும் சிறப்பு ரைட் . ஒருவன் எதற்க்காக இன்னொருவனை பழிவாங்க வேண்டும்? . தனக்கு வேண்டப்பட்டவர் கொடூரமாக கற்பழித்து கொல்லப்பட்டதற்காக , கண்முன்னே குடும்ப உறுப்பினர்களை கொன்றதற்க்காக , போதையில் எதோ ஒரு ஆளை கொன்றதற்க்காக என பல காரணம் இருக்கலாம் . அந்த சிறு தீ உடலில் கொளுத்தி விட்டால் அது என்னவாகும் . ?
நார்வேயில் ஒரு படமுண்டு மகனை இழந்த அப்பா பழிதீர்த்ததை கதை அப்பாவிற்கு எப்படியும் 70 கிட்ட இருக்கும் வயசு , ஏன் தன்னுடைய செல்லப்பிராணி ஒன்றை கொன்றதற்க்காக எல்லாம் கூட ரிவெஞ் இருக்கிறது . சோ உலக சினிமாவிலும் இதுபோன்ற படங்கள் கதைகள் ஏறலாம் இதில் புதுமைய தேட ஒன்றும் இல்லை , ஏன் ரிவெஞ் எதற்கு எப்படி என்பதை தான் நமக்கு தெரியும் . . குடும்ப பகைமையாக இருக்கலாம் . தன் மகனுக்காக, மகளுக்காக, மனைவிக்காக, தனக்காக ஏன் மொத்த குடும்ப உறுப்பினர்களுக்காக கூட இருக்கலாம் . அல்லது பொதுவாகவே எதோ ஒரு காரணத்திற்காக இருக்கலாம் . ஆக தனக்கான தீர்வு ஒன்று சரியாக எழுதப்படாத பட்சத்தில் நானே தீர்வெழுதுகிறேன் என்பதுதான் மேலோட்டமாக சொல்லாம் . சோ அப்படி ரிவெஞ் எடுக்க சென்ற கதைதான் சாணி காயிதம் .
இதிலும் சைலன்ட் ஆக ரிவெஞ் எடுத்த படங்களெல்லாம் உண்டு . உதாரணமாக Dog man இத்தாலி நாட்டு படம் . ஆக இதேபோல கதையமைப்பு கொண்ட பல படங்கள் இருந்தாலும் அது ஒன்றும் இயக்குனருக்கு தெரியாமல் இல்லை நாம் வாழும் அதே உலகில் தான் அவரும் வாழ்கிறார் , நாம் பார்க்கும் அதே படங்களை அவரும் பார்த்திருப்பார் . அதே கதை கொண்ட படங்கள் நம்மூர் ஆடியன்ஸை எப்படி சுவாரசியப்பட வைக்கிறது என்பதுதான் இயக்குனரின் திறமை . புதிதாக பார்ப்போருக்கு ஒரே ரத்தக்களறியா இருக்கு பா ன்னு தோன்றலாம். கொரியா ,ஜப்பான் ,இந்தோனேசியா எல்லாம் ஒரு படி மேலே போய் துண்டு துண்டாக நறுக்கி உடல் பாகங்களை மீனுக்கு இறையாக்கி எலும்புகளை எரித்து சாம்பலாக்கி ஆள் இருந்த அடையாளமே தெரியாமல் செய்துவிடும் அளவிற்கு பல சம்பவங்களை செய்துவிட்டார்கள் .
சோ தமிழுக்கு கதை ஒன்றும் புதிதல்ல காட்சிகளும் மேக்கிங் தான் புதிது , எனக்கு இதுபோன்ற படங்கள் பிடிக்கும் , நான் ஹாரர் gore slasher அதற்கு கீழ் இருக்கும் Subgenre என பல படங்களை பார்த்து இருக்கிறேன் . அந்தவகையில் நான் இதை வரவேற்கிறேன் . இன்னும் பலமான படங்கள் வரவேண்டும் . இயக்குனரை இயக்குனரின் போக்கிற்க்கே விட்டால் அவர் டார்கெட் ஆடியன்ஸை மட்டும் நோக்கி இதுபோல தீவிர சினிமாக்களை தருவார் . நான் இன்னும் ராக்கியை பார்க்கவில்லை . வந்த சமயத்தில் இங்கே வெளியாகவில்லை . பார்க்க வேண்டும் , இதுபோன்ற படங்களை பார்ப்பேன் எனக்கொன்றும் பிரச்னை ல்லை என்போர் அவசியம் பார்க்கலாம் .
அப்புறம் இதுபோல படங்கள் எனக்கு அலர்ஜி , நான் ஆர்ட் பிலிம்ஸ் மட்டுமே பார்ப்பேன் என்றால் நீங்கள் அதோட விட்டு பார்ப்போர்களை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள்ளலாம் , பிறகு நானும் ஒரு கத்தியையும் சுத்தியையும் எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவேன் , வன்முறை என்னை தூண்டி விட்டது போன்ற நண்பர்கள் யாரவது இருந்தால் பார்க்காமல் இருப்பதே நலம் . ஒரு படத்தை பார்த்துவிட்டால் நமக்கு அதே Genre யில் இன்னும் பல படங்கள் பார்க்க ஆர்வம் இருக்கும் அவர்களுக்காக கீழே ஒரு குட்டி லிஸ்ட் . என்ஜாய்
முதலில் Argentina நாட்டு படமான - WildTales ஐ பார்த்துவிடுங்கள் அப்புறம் பிரெஞ்சு பெண் இயக்குனரின் பார்வையில் ஒரு ரத்தம் தெறிக்கும் படமொன்று இருக்கிறது அதையும் மிஸ் பண்ணாதீங்க . Revenge (2017) , I Spit On Your Grave old and new , Bedevilled (2010), Blue Ruin (2013) , 7 Days (2010) , The Horseman 2008 ,The Nightingale 2018, Death Sentence,, Confessions 2010,Revanche (2008),In Order of Disappearance (2014), Hunting Emma, AMERICAN MARY 2012, Ready Or Not, Homefront, Remember எச்சச்ச கச்சச்ச எச்சச்ச கச்சச்ச chaaaaaaaaa <3
18 ஐ கடந்தவர்கள் குடும்பமாக உக்கார்ந்துகொண்டு பார்க்கலாம் என்பதனை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள் .
ʏᴇᴀʀ : 2022
ᴅɪʀᴇᴄᴛᴏʀ : ᴀʀᴜɴ ᴍᴀᴛʜᴇꜱᴡᴀʀᴀɴ
ʟᴀɴɢᴜᴀɢᴇ :ᴛᴀᴍɪʟ
ᴄᴏᴜɴᴛʀʏ : ɪɴᴅɪᴀ
ɢᴇɴʀᴇꜱ : ᴄʀɪᴍᴇ , ᴅʀᴀᴍᴀ , ᴀᴄᴛɪᴏɴ , ʀᴀᴘᴇ ʀᴇᴠᴇɴɢᴇ
ʀᴜɴɴɪɴɢ ᴛɪᴍᴇ : 138 ᴍɪɴ
ᴏᴛᴛ : ᴀᴍᴀᴢᴏɴ ᴘʀɪᴍᴇ ᴠɪᴅᴇᴏ
Join World Movies Museum Facebook Group
அமேசான் நேரடி வெளியீடு பார்க்கலாம் .
Post a Comment