கடந்த ஐந்தாறு வருடங்கள் தான் இந்த OTT களின் வளர்ச்சி . இன்னும் 10 வருடத்தில் எது நிலையாக இருக்கும் எது காலியாகும் என்பது அந்தந்த நிறுவனத்துக்கு மட்டுமே தெரியும் . சரி அதை விடுவோம் . எந்த படம் வந்தாலும் உடனே பார்த்துவிடுகிறார்கள் படம் பற்றி எழுதி Intro செய்கிறார்கள் , பத்தி பத்தியாய் ரீவீவ் போடுகிறார்கள் ஆனால் படத்தை எங்கே பார்த்தார்கள் என்பதை மட்டும் சொல்ல மறுக்கிறார்கள் . ஒருவேளை அவர் லீகளாக பார்த்திருந்தால் நிச்சயம் தளத்தின் பெயரை குறிப்பிடுவார் . அதுவே இல்லீகள் முறைப்படி பதிவிறக்கி பார்த்தல் நிச்சயம் குறிப்பிட மாட்டார் , அங்கே போய் நாம் அவர்களை Ott யை சொல்லு என்றால் நச்சரித்து விட்டால் கடுப்பாகி விடுவார்கள் . ஆக ஆயிரம் முறை நச்சரித்தாலும் கடுப்பாகாமல் நமக்கு எந்த OTT யில் லீகளாக காணக்கிடைக்கும் என்று சொல்லும் அற்புத ஜீவன் ஒன்று இருக்கிறது . அதுதான் JUSTWATCH என்னுடைய FAV App .
இனிமே நீங்க OTT ? Amazon or Netflix ? Link ? Where You Watched ? இதுபோல இன்னும் பல கமெண்டுகளை கேற்க தேவையில்லை . இதில் தேடினால் கிடைத்துவிடும் இதனை பற்றி ஒரு சிறிய வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறேன் . வேண்டுவோர் சென்று பார்த்து தெரிந்து கொள்ளவும் ..
ஒரு திரைப்படத்தை பார்க்க பல்வேறு முறை உண்டு . அவரவர் விருப்பத்திற்கும் தேவைக்கும் பணம் கட்டி பார்ப்பதா? கட்டாமல் பார்ப்பதா? என்பதெல்லாம் தனிப்பட்ட உரிமை . சீனியர் சினிமா விரும்பிகள் பலரும் பர்மா பஜார் பைரேட்டட் டிவிடி களையும் , பல திரைப்படவிழாக்களிலும் நண்பர்களிடம் பென்ட்ரைவில் இரவல் வாங்கியும் பார்த்து, எத்தனை எத்தனையோ பதிவெழுதி புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்கள் . இங்கு பலரும் அப்படிதான் நானும் அப்படித்தான் . என்னிடம் இருக்கும் ஸ்ட்ரீமிங்ஸ்ல் படம் இல்லாத பட்சத்தில் நான் அதை தேடி பதிவிறக்கி தான் பார்க்கிறேன் , நான் லீகல் பேர்வழி என்று சொன்னதே கிடையாது . நான் பார்க்க விரும்பும் ஒரு உலகப்படம் OTT யில் இல்லாத படச்சத்தில் அதனை நான் இல்லீகள் ஆக பதிவிறக்கி தான் பார்க்கிறேன் . நீங்க தேடியும் (கடல்லையே இல்லையாம் )கிடைக்காத படத்தை இங்கே கேளுங்க நான் தரேன் https://t.me/+eTruJIBFJcI4M2Q1
தமிழ்நாட்டு திரையரங்கள் உலக படங்கள் வெளியாவது திரைப்பட விழா மட்டுமே . ஆகையால் நான் உலகப்படங்களை இணையத்தில் தேடி பதிவிறக்கிய பின்பு பார்ப்பேன், இந்திய படங்களை பதிவிறக்குவதும் இல்லை . . சரி முடிவுக்கு வருவோம் ! ஆக இனி ஒரு திரைப்படத்தை பார்க்க விரும்புவோர் முதலில் தேடுங்கள் . ஒருவேளை நீங்கள் தேடியும் கிடைக்காத பட்சத்தில்.
JustWatch என்ற App or தளத்தின் மூலம் படம் எங்கு பார்க்கலாம் OTT இருக்கா? என்பதை தெரிந்துகொள்ளுங்கள் .
Post a Comment