Chained (2012,Canada) - Film Intro By Tamil | 9 வயதில் சைக்கோவுடன் மாட்டிக்கொண்ட சிறுவன்

ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் 3096 Days என்ற ஒரு படத்தை பார்த்தேன் , அதில் ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த  பத்து வயதில் கடத்தப்படும் சிறுமி கிட்ட தட்ட 8 வருடங்களுக்கு மேல் ஒரு சைக்கோ விடம் மாட்டிக்கொண்டு பல சித்திரவதைகளை அனுபவித்து பாதாள அறையில் அடைபட்டு கிடந்து ஒருகட்டத்தில் தப்பிக்கிறாங்க அது  தான் சம்பவம் .  அடிமை வாழ்க்கையாக நடந்தேறிய அந்த நிகழ்வை  பாதிக்கப்பட்ட பெண்ணின் சுயசரித்ததின் கொண்டு உருவாக்கப்பட்டு இருந்தது . அதுவே சைக்கோவின் கண்ணோட்டத்திலும் மைகேல் என்றொரு படமும் உண்டு  . இதை பார்த்த பின் இதிலிருந்தே   வெளிவராமல் இருந்துகொண்டிருந்தேன் இதன் தாக்கமே குறைந்தபச்சம் ஒரு சிறிய  வேதனையை நமக்குள் உண்டாக்கும்  . அதற்குள் இந்த Chained படத்தையும் பார்த்துவிட்டேன் .  



Chained படத்தில் அதே போல 9 வயதில் சிறுவன்  தனது தாயுடன் சினிமா பார்க்க செல்கிறான் . அங்கே  டாக்ஸி ட்ரைவர் ஒருவனால் இருவரும் கடத்தப்டுகிறார்கள் .  தாயை  கொன்றுவிட்டு சிறுவனை அவனுக்கு கீழ் அடிமையாக வைத்துக்கொள்க்கிறான்  . அவனுக்கு கொடுக்கப்பட்ட நிபந்தனைகள் . நான் கதவை தட்டினாலோ அல்லது பெல் அடித்தாலோ பத்தே செகண்ட் ல் திறக்க வேண்டும் . நான் இப்படித்தான் அடிக்கடி ஒரு பெண்ணை இங்கே கூட்டிக்கொண்டு வருவேன் . நான் நினைத்ததை செய்வேன் . பிறகு கொன்று புதைப்பேன் . 


நீ  தினமும் காலை எனக்கு உணவை தயார் செய்ய வேண்டும் . நான் மிச்சம் வைப்பதை தான் நீ திங்க வேண்டும் . இன்னும் பல கட்டளைகளை இடுகிறான் . எதையாவது தேவையில்லாமல் முயற்சி செய்தாலோ நான் சொல்வதை  கேற்காவிட்டாலோ உன்னையும் கொலை செய்ய எனக்கு ரொம்ப நேரம் ஆகாது என பலவற்றை சொல்கிறான் . சிறுவனுக்கு ஒரு நாள் தப்பிக்க வாய்ப்பு கிடைக்கும் ஆனால் மாட்டிக்கொள்வான் அதற்கு பிறகு இந்த சைக்கோவால்  அங்கே ஒரு பெரிய சங்கலியால் கால்களில் கட்டப்படுகிறான் .  பிறகு அவன் நிலை என்ன ஆனது தப்பித்தானா ? என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கும்  அல்லவா ? சரி  நான் சொன்னது வெறும் முதல் 20 நிமிடம் தான் . அதற்கு பிறகு இன்னும் ஒரு மணி நேரம் பத்து நிமிட படம் இருக்கிறது . என்ன படம் என்ன ஆனது என்பதை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . ஹாரர் சினிமா விரும்பிகள் ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம் . 


கொலைகாரன் , சைக்கோ , சீரியல் கில்லர் என்று வந்துவிட்டாலே அவனுக்கு ஒரு பிளாஷ் பேக் அல்லது , அவன் வாழ்வில் ஜீரணிக்க முடியாத நிகழ்வுகள் , இதனால் தான் நான் இந்த மாதிரி கொலை செய்ய ஆரம்பித்தேன் . என் வாழ்வில் என்னை  பாதிப்புக்குள்ளாகிய சம்பவங்களால் தான் ,  இப்படி செய்ய ஆரம்பித்தேன் என அதற்கு ஒரு நீதி நியாயம் புகட்டுவது எல்லாம் என்றைக்குமே என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது . இதிலும் அப்படி சில காட்சிகளை கொண்டு வந்திருப்பார்கள் . அதை எல்லாம் தவிர்த்து தீவிர ஹாரர் த்ரில்லர் ஆக்கி இருக்கலாம் . சரி விடுங்க . 


ஒரு சில காட்சிகள் சுவாரசியமாய் இருந்தது . உதாரணத்திற்கு கொல்லப்பட்டவர்கள் லைசென்ஸ் வைத்து நம்ப ஊரில் WWE  Card  விளையாடுவதை போல சைக்கோ லைசென்ஸ் ஐ வைத்து விளையாடுவான் . ஊறுகாய்க்கு கூட போலீஸ் என்ற விஷயமே படத்தில் இருக்காது . அதுவும் ஒரு கார் மட்டும் போகும் . கடைசி 30 நிமிடம் கொஞ்சும் அழகா இருந்தது . ஏன் அழகா இருந்தது ??? பார்த்தா புரியும் . 


படத்தின் முடிவு நிச்சயம் உங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் . ஐயோ இப்படிப்பட்டவர்களா இந்த மனிதர்கள் என உங்களை திணறவைக்ககூடிய ஒரு ட்விஸ்ட் ஐ சொல்லி இருக்கிறார்கள் . ஆனால் இது உண்மை சம்பவமல்ல , ஒரு சைக்கலாஜிக்கல் ஹாரர் Slow த்ரில்லர் அவ்வளவுதான் .   அதானால் பார்த்துவிட்டு கடந்துவிடுங்கள் . இது ஒருவிதமான இருண்ட பக்கத்தை சொல்கிற டிஸ்டர்ப் பண்ணக்கூடிய படம்தான்  ,  ஒருசிலருக்கு பிடிக்கும் , சிலருக்கு பிடிக்காது ,  David Lynch என்ற புகழ்பெற்ற இயக்குனரின் மகள்தான் இந்த திரைப்படத்தின் இயக்குனர் . சஸ்பென்ஸ் நிறைந்த திகில் கதை இருக்குமோ , உள்ளங்கை வியர்கிற பரபரப்பான திரில்லர் ஆ இருக்குமோ என யூகிக்காமல்  . பார்க்க நினைத்தாள் ஒருமுறை பார்க்கலாம் . 


இந்தப்படம் இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை . வேண்டுமானால் VPN பயன்படுத்தி TUBI டிவி யில் காணலாம் நன்றி . 

Post a Comment

Previous Post Next Post