3096 Days (2013,Germany) - Film Intro By Tamil | பாதாள அறையில் அந்த 3096 நாட்கள்

ஒரு சைக்கோவிடம்  கிட்ட தட்ட 3096 நாள்கள் அடிமைப்பட்டு கிடந்த பெண்ணின்  உண்மை சம்பவத்தின் கதை தெரியுமா உங்களுக்கு . Austria நாட்டை சேர்ந்த Natascha Kampusch 1998 ல் தன்னோட பத்தாவது வயதில் கடத்தப்படுறாங்க 8 வருடத்துக்கும் மேல அவங்க அந்த கடத்தல்காரன் வீட்ல இருக்காங்க . பெரும்பாலும் வீட்டுகுள்ள இருக்க அந்த பாதாள அறையில் தான் , சில சமயம் வெளியுலகம் . அந்த சைக்கோவிடம் இருந்து மீளும் Natascha 2010 ல  தன்னோட சம்பவத்தை பற்றி ஒரு புத்தகத்தை எழுதுறாங்க அதுதான் 2013 ல 3096 Days ன்னு  திரைப்படமாக வெளியானது . இதையே 2011 ல்ல அந்த சைக்கோட பார்வையில ஒரு படத்தை எடுத்து கான்ஸ் திரைப்பட விழாவில் திரையிட்டார்கள் . பத்து வயது சிறுமி தன்னோட அம்மாகிட்ட எதிர்த்து பேசியதால்  வாங்கும் ஒரு அடியில்  அன்று பள்ளிக்கு நடந்தே செல்ல முடிவெடுக்கின்றாள் . ஆனால் அவளுக்கு தெரியாது இன்று நம் வாழ்வின் தலையெழுத்து மாறப்போகிறது என்று . பள்ளிக்கு செல்லும் வழியில் திடீர்ன்னு ஒருவனால் கடத்தப்பட்டு வீட்டுற்க்கு கீழுள்ள  பாதாள அறையில் அடைத்துவைக்க படுகிறாள் . சரியான உணவில்லாமல் கட்டளையிடும் அனைத்திற்கும் அடிமைப்பட்டு கொடுமைப்படுத்தி சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார் . பலமுறை பல வன்முறைகளுக்கு உள்ளாக்கப்படுகிறார் . ஒவ்வொருமுறையும் அதனை டாய்லெட் பேப்பரில் எழுதி வைக்கிறார் . ஒரு Box நிறைய பேப்பர்களால் அவன் எத்தனை முறை அடித்தான் எங்கெங்கு அடித்தான் என அத்தனையும் எழுதி வைக்கிறார் .    அதிலிருந்து மீண்டாங்களா ? எப்படி தப்பித்தார் போன்றதை பாதிக்கப்பட்ட பெண்ணின்  புத்தகத்தை தழுவி படமாக்கி இருக்கிறார்கள் . 


அந்த சைக்கோவிடம் மாட்டிக்கொண்டு கிடந்த நாள்களில் என்னென்ன நடந்தது என்பதை ஒரு சிறு பகுதி தான் படத்தில் காட்டப்பட்டு இருக்கிறது . புத்தகத்தை படித்தால் உங்களுக்கு இன்னும் தெரிய வரும் .  பின்புல விசாரணைகள் போலீஸ் இன்வெஸ்டிகேஷன் பார்வையில் படம் நகரவில்லை . என்பதை கூறிக்கொள்கிறேன் . இது ஒரு ஜெர்மன் நாட்டு  திரைப்படம் ஆனால் ஆங்கில மொழியில் தான் முழு படமும் திரைப்படமாக்கப்பட்டு இருக்கிறது . ஒரு பெண் இயக்குனர் தான் இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கிறார் . அவரின் கணவர் தான் ஒளிப்பதிவாளரும் . 2011 ஆம் ஆண்டு கடத்தப்பட்டவன் பார்வையில் Michael என்றொரு  திரைப்படம் உருவாகி கான்ஸ் விழாவில் இடம்பெற்றது . அதனையும் பார்க்காலமென்று இருக்கிறேன் . 


நம்ப ஊர்களில் இன்றளவும் சில பேரை பார்த்திருப்போம் அவர்கள் படித்து முடித்திருப்பார்கள் ஆனால் வேலைக்கு போகாமல் அப்படியே ஜாலியா சுற்றிக்கொண்டு இருப்பார்கள் , தகப்பனாரின் வருமானத்தில் சகலமும் அவர் கையில் இருக்கும் . அப்படிதான் இந்த சைக்கோ அவனுக்குன்னு தோழர்களும் இல்லை பெண் தோழியும்  இல்லை , சொல்லிக்கொள்ளும் படி ஒரு வேலையும்  இல்லை , ஆனால் அவன் எல்லாவற்றையம் அனுபவிக்கிறான் . அவன் வீட்டிலும் அவனை ஒரு பொம்மை போலத்தான் வைத்திருக்கிறார்கள் . அப்படி இருந்தும் இவன் வீட்டிற்கு அடியில் ஒரு பெண்ணை மறைத்து இத்தனை வருடங்கள் வைத்திருக்கிறான் என்றால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை . 


நம்ப எல்லாரும் சின்ன வயசுல பூனை , நாய் குட்டிகளுக்கு ABCD சொல்லித்தருவது , சுத்தி பசங்களை உக்கார வைத்துக்கொண்டு டீச்சர் , வாத்தியார் மாதிரி  Rhymes லாம் பாடி காட்டுறது , இல்லாதவங்கள இருக்கறவங்களா கற்பனை பண்ணிக்கிட்டு அவங்களை கைல குச்சி வச்சுக்கிட்டு மிரட்டுறது ன்னு சில வேலைகளை பண்ணி இருப்போம் . அப்படி தான் இந்த விசித்திரமான சைக்கோவும் ஆட்டிப்படைக்கிறான்  . அந்த புள்ளைய இவன் கட்டுப்பாட்டுல வச்சுக்கணும் ன்னு நிறையஸ் துன்புறுத்தல்களை பண்ணுகிறான் .  ரகுவரன் புரியாத புதிர் ல I know I know I know I know ன்னு தொடர்ந்து சொல்லுற மாதிரி இவன் Obey Me Obey Me Obey Me ன்னு அந்த பொண்ணுகிட்ட சொல்லுறான் . 


இந்த உண்மை சம்பவத்தில் மாட்டிக்கொண்ட பெண்ணை நினைத்தால் மிகவும் வருத்தமாக ,இருக்கிறது  இதுபோன்ற வேதனைகளை அனுபவித்து அதிலிருந்து மீண்ட பின்பும் அவர்களின் மனநிலை எவ்வளவு கடுமையான இருந்திருக்கும் என்பதை கொஞ்சம் கூட  யூகிக்க கூட முடியவில்லை  . இருந்தாலும் இந்த போராட்ட உலகத்தில் அவர் வாழ்ந்து காட்டிக்கொண்டு .இருக்கிறார்  . ஆமாம் அவங்க ஒரு எழுத்தாளர் , நகை வடிவமைப்பாளர் , டிவி நிகழ்ச்சி தொகுத்தும் வழங்கி இருக்கிறார் . தற்போது அவங்களுக்கு 34 வயது . வேண்டுவர் அவங்களை பற்றி இணையத்தில் தேடி தெரிந்துக்கொள்ளுங்கள் .


நன்றி 


இந்த திரைப்படம் தற்போது இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை வேண்டுமானால் இணையத்தில் தேடி பெறலாம் .  

Post a Comment

Previous Post Next Post