மோனோஸ் என்றால் குரங்குகள் என்று அர்த்தம். இந்த படத்தில் ஒரு கொரில்லா புரட்சிகர அமைப்பைக் குறிக்கும். இவர்களுக்கு தலைவன் பயிற்சியாளன் எல்லாமே தூதராக வரும் குள்ளமாக இருக்கும் ஒருவர் தான் தான் . இவருக்கு மேலும் சில தலைகள் உண்டு அவர்கள் யாரும் படத்தில் காண்பிக்கப்படவில்லை . இந்த அமைப்பில் நடக்கும் அனைத்திற்கும் அவரே பொறுப்பாகும். இங்கே சில பதின் பருவ வயதை ஒத்த சிறுவர் சிறுமியர்கள் இருக்கிறார்கள் . அவர்கள் கையில் பெரிய பெரிய துப்பாக்கிகளும் இருக்கிறது .
அமெரிக்க பெண் ஒருவரை பணயக்கைதியாக சிறைபிடித்து வைத்திருக்கிறார்கள் . இந்த மோனோஸ் குழுவில் மொத்தம் 8 பேர். (அதில் குழந்தைப்பருவத்தைப் ஒத்த ஓரிருவர் , சிறுவர் மற்றும் வயதுவந்த ஆண் பெண் என மீதமும் இருக்கின்றனர்.) இந்த 8 பேர் கொண்ட குழுவில் தான் கவனிப்புடன் அவளை வைத்து இருக்கிறார்கள் . தூதர் வந்து இந்த குழுவிவை சந்தித்து அவர்களுக்கு பயிற்சி கொடுத்துவிட்டு . ஒரு பசு ஒன்றையும் கொடுத்துவிட்டு செல்கிறார்.
படத்தின் ஆரம்பக்காட்சியே உங்களை வியக்க வைக்கும் . படம் தொடங்கும் போது எல்லாரும் கண்ணை கட்டிக்கொண்டு கால்பந்து விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள் . ஆரம்பமே ஈர்க்கும் காட்சிகளிலிருந்து தொடங்கும் இப்படம் இன்னும் பல அழகிய காட்சிகளால் நிறைந்திருக்கிறது . மேலும் ஒரு சிறப்பான காட்சி உண்டு அது என்ன என நான் சொல்லிவிட்டால் சுவாரசியம் போய்விடும் . குறிப்பாக இதில் இடம்பெறும் ஒரு சம்பவம் இந்தியாவில் எந்த திரைப்படத்திலும் பார்க்க முடியாது . அதையும் நீங்கள் இங்கே பார்க்கலாம் . இந்த ஒரு காட்சியின் காரணமாக கூடவே இந்திய திரைப்படவிழாவில் இந்தப்படம் திரையிடுவது தவிர்க்கப்பட்டு இருக்கிறது . லக்கியாக நான் பெங்களூருவில் திரைப்படவிழாவில் அகன்ற PXL Screen ல் இதனை பார்த்துவிட்டேன் .
பணயக்கைதியாக இருக்கும் பெண் ஒருவர் இந்த சிறுவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்கிறார் . இதன் பிறகு சில எதிர்பாராத சம்பவங்கள் நடக்கின்றன . என்ன மாதிரியான சம்பவம் என்பதனை நீங்கள் பார்ப்பது தான் நன்றாக இருக்கும் என நான் நினைக்கிறேன். அதிலுள்ள சுவாரசியாமன காட்சிகளை பற்றி சொல்லிவிட்டால் உங்களுக்கு அந்த அனுபவம் கிடைக்காமல் போகலாம். ஆகையால் பார்க்க ஆர்வம் இருப்போர் பார்த்து விடுங்கள் . அதே நேரத்தில் வார் பின்புல அனுபவத்தை தரும். ஆகையால் வார் சார்ந்த திரைப்பட ரசிகர்கள் அவசியம் பாருங்கள்.
தனிப்பட்ட வகையில் என்னை கவர்ந்த ஒரு கதாபாத்திரமாக ஒருவரை குறிப்பிட்டு சொன்னால் , தூதராக வருபவர் தான் சொல்வேன். மலையில் மேல் இருந்து குதிரையில் வந்து இறங்கும் காட்சியிலிருந்து, முடிவு வரை சுவாரசியமாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. பெரும்பாலான காட்சிகள் ஒரு ரியாலிஸ்டிக் உணர்வை தந்தது . இசைக்கு தகுந்த காட்சியா அல்லது காட்சிக்கு தகுந்த இசையா என எப்படி வேண்டுமானாலும் வைத்து கொள்ளுங்கள். 2019 ல் ஒரு சிறந்த படமாக இந்த Monos எனக்கு பிடித்தது. அதுக்கு மிக முக்கியமான காரணமா அதோட Cinematography Sound And Visuals சொல்லலாம். .
அதிகமா Staturation நல்லா கலர்புல் Effect ன்னு ,பெரும்பாலும் எல்லா ஷாட்டுமே மிக நேர்த்தியாக இருந்தது. மனித சத்தங்கள் மூலம் சில ஒலிகளை எழுப்பி அட்டகாசப்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் நகர்வு விவரிப்பு என எளிதில் புரியும் வகையில் தான் இருக்கும். அதே நேரத்தில் இது அனைவருக்கும் பிடித்து விடாது. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இதுபோன்ற படங்கள் கவனம் பெரும் . பல காட்சிகளை பார்க்கும் போது வாழ்வின் ஒரு முறையேனும் இதுமாதிரி பகுதிகளுக்கு சென்றிட வேண்டும் என்ற ஆர்வத்தை கிளப்பி விட்டிருக்கிறது இந்த படம் . HDR சப்போர்ட் செய்யக்கூடிய டிவி அல்லது மொபைலில் பார்ப்பது நலம். சாதாரண திரையில் அந்த அளவிற்க்கு வண்ணங்கள் தெரியாது. Blu-ray வும் இருக்கிறது .
இந்தப்படத்தினை நான் முதலில் என்னுடைய லேப்டாப் ல் தான் பார்த்தேன் . அது தந்த அனுபவத்தில் விசுவல் க்காக மீண்டுமொரு முறை பெங்களூரில் பார்த்தேன் . பெரிய திரை அனுபவம் வேற லெவலில் இன்னுமொரு முறை கூட பார்க்க இருக்கிறேன் . ஆஸ்கார் வெளிநாட்டு சிறந்த பட பிரிவில் போட்டியிட கொலம்பியா சார்பில் அனுப்பி வைக்க பட்டு இருந்தது . தேர்வாகவில்லை. ஆனால் உண்மையில் படம் தரும் அனுபவமே சிறந்த ஒன்று. ஒரு சில புத்தகங்கள் நம்மை கவர்ந்து விட்டால் எந்த பக்கத்தை படித்தாலும் நம்மை கவரும் அல்லவா. அதே போலத்தான் இந்தப் படமும். பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு சில குறிப்பிட தகுந்த விருதுகளையும் வென்றிருக்கிறது.'
நன்றி
தற்போது இந்த திரைப்படம் இந்தியாவில் எங்கும் Stream ஆகவில்லை , இந்திய OTT யில் வருமா என்றால் தெரியாது . ஆனால் இணையத்தில் தேடினால் கிடைத்துவிடும் . VPN பயன்படுத்தினால் அமெரிக்க தளங்களில் நீங்கள் பார்க்கலாம் . MUBI யிலும் வெளிநாடுகளில் உண்டு .
Post a Comment