Heaven Is Beneath Mother’s Feet 2024 - Kyrgyzstan - 97th Oscar Submission - 2025 International Features

97 வது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட கிர்கிஸ்தான்  சார்பில் Heaven Is Beneath Mother’s Feet 2024 Бейиш — эненин таманында Directed by Ruslan Akun என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது .இயக்குனருக்கு இது பத்தாவது திரைப்படம். இதற்க்கு முன்பு அவர் இயக்கத்தில் எந்த திரைப்படமும் பார்த்ததில்லை இதுவே முதல் முறை. 




75 வயது தாயுடன் வசிக்கும் ஆதில் கொஞ்சம் மனநலம் பாதிக்கப்பட்டவர் 35 வயது ஆகிறது . அறிவுசார் வளர்ச்சி எட்டு வயது சிறுவனை போன்ற குணம் தாய் தான் அவருக்கு உலகமே தாய் சொல்லை தட்டுவதில்லை . தனது கிராமத்தில் ஒரு நாள் தாயோடு பேசிக்கொண்டு இருக்கிறார் அப்போது வாழ்நாளில் ஒருமுறை மெக்காவுக்கு செல்ல வேண்டும் அதுவே என் விருப்பம் அங்குதான் சொர்கம்  உள்ளது , ஆனால் மெக்காவுக்கு செல்ல நிறைய பணம் தேவைப்படும் என வருத்தமடைகிறார் .  200 thousand soms தேவைப்படும் என தாய் சொல்ல அதனை ஏற்பாடு செய்ய கிளம்புகிறார் ஒருவழியாக பணம் கிடைத்து , ஆனால் இப்படி ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்றவுடன் ஊரே சிரிக்கிறது. முடிவில் இருவரும் பயணத்தை தொடங்க தனது தாயை  சக்கர வண்டியில் வைத்து கொண்டே பயணத்தை ஆரம்பிக்கிறார்.

  உஸ்பெக்கிஸ்தான் கஜகஸ்தான் சிரியா என நடந்தே  பார்டர்களை கடந்து பயணிக்கும் அவர்களுக்கு சில போதை கும்பல்களையும் ராணுவத்திற்கு எதிரானவர்களையும் சந்திக்கிறார்கள் பிறகு வழிநெடுகிலும் மிக நல்ல நபர்களையும்  சந்திக்கிறார்கள் முடிவில் அவர்கள் சென்றார்களா? இல்லையா? என்பதே இந்த தாயின் காலடியில் சொர்கம் என்ற திரைப்படம். 

கிர்கிஸ்தான் சார்பாக இதுவரை 16 திரைப்படங்களை ஆஸ்காருக்கு வெளிநாட்டு சிறந்த திரைப்படங்கள் பிரிவில் போட்டியிட  அனுப்பி உள்ளார்கள் அதில் இதுவரை எந்த ஒரு படமும் நாமினேஷனோ ஷார்ட்லிஸ்ட் ஓ கூட ஆனதில்லை , அதில் Aktan Abdykalykov 5 படங்கள் மட்டும் நியாபகம் அதிலும் குறிப்பாக Light Theif பிடித்த படம் . எனக்கு 2020 ஆம் ஆண்டு அனுப்பிய Running to the Sky பிடித்திருந்தது இந்த வருடம் அனுப்பியதும் உலக தரம் வாய்ந்த படங்களோடு போட்டி போடுகையில் நாமினேஷன் ஆவது சிந்திக்கவேண்டியது தான். பாட்டி நன்றாக நடித்திருந்தார். 

 #OscarSubmission | #InternationalFeatures

Post a Comment

Previous Post Next Post