The Door Is There 2023 - Uruguay - 97th Oscar Submission - 2025 International Features

97 வது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட உருகுவே நாட்டு    சார்பில்  The Door Is There 2023 Hay una puerta ahí Directed by Facundo Ponce de León, Juan Ponce de León  என்ற  79 நிமிட டாக்குமென்டரி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது . சிறந்த  வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில்  ஆஸ்காருக்கு உருகுவே சார்பில் இது 24 ஆவது Submission , இதுவரை அனுப்பியதில் எந்தவொரு படமும் நாமினேஷன் ஓ அல்லது ஷர்ட்டலிஸ்ட் ஓ ஆனது இல்லை , ஆனால் தனிப்பட்ட முறையில் எனக்கு A Twelve-Year Night என்ற திரைப்படம் பிடிக்கும் , அதற்கு பிறகு சமீபத்தில் பார்த்த The Employer and the Employee பிடித்திருந்தது. 

நேற்று இந்த டாக்குமென்டரியை காணும் வாய்ப்பு கிடைத்தது. மரணப்படுக்கையயில்  இருப்பவருக்கும் மருத்துவருக்கும் இடையே நிகழும் உரையாடல்கள் இருவரும் வெவ்வேறு பகுதிகளில் இருப்பதால் , பகிர்ந்துகொண்ட வார்த்தைகள் , வீடியோ காலில் பேசிகொண்டவற்றை மொத்தமாக ஒரு டாக்குமென்டரி ஆக்கி இருந்தார்கள். கோவிட் சமயம் என்பதால் நான் வரும் வரை உயிரை கையில் பிடித்துக்கொண்டு இரு என சொல்லும் போது எனக்கு இன்னும் நாள்கள் இருக்கிறது என சொல்வார். தீராத நோய் பல கேள்விகளை எழுப்பிடும். தூக்கத்தை கெடுத்திடும் , மன நிம்மதியற்ற கடும் யோசனையை தரக்கூடூம் .  நம்மால் நம்மை சுற்றியுள்ள அன்பான குடும்ப உறுப்பினர்களுக்கு அதீத  வேதனனயை கூட உண்டாக்கும் மேலும் பிறருக்கு கஷ்டத்தை தருகிறோமோ போன்ற  கூடுதல் எண்ணங்களை அதிகரிக்கும் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி பாதிக்கப்பட்ட நபர் வாழ்வை முடித்துக்கொள்வது பற்றியான படங்கள் உலக சினிமாவில் நிறைய இருக்கின்றன. 






பனாமாவில் வெளிவந்த Birthday Boy என்ற திரைப்படத்தில்  பாதிக்கப்பட்ட நாயகன் இன்னும் சில நாட்களில் இறந்து விடுவோம் என முன்பே  தெரிந்துகொள்வார். அதனால்  பிறந்தநாளன்றே தனது உயிரை மாய்த்துக்கொள்ள போகிறேன் என்று  நண்பர்கள் கூட்டத்தில் திடீர்ன்னு அறிவிப்பார் . Piece Of Sky என்ற   ஸ்விஸ் படத்தில் நாயகனுக்கு மூளை கட்டி பிரச்னை இருக்கும் நம்மை விரும்பிய குடும்ப உறுப்பினரை கஷ்ட படுத்தக்கூடாது என்பதற்காக காதல் மனைவியை விட்டு விலக சில விஷயங்களை செய்வார்.   
இந்தியாவில் கூட கோதாவரி என்றொரு மராத்தி மொழிபடம் இருக்கிறது  அதிலும் எதற்கெடுத்தாலும் கடுமையாக எரிந்து விழும் நாயகன் முடிவில் கண் கலங்கவைப்பார் .  இந்த வகையில் உருகுவே நாட்டை சார்ந்த இந்த டாக்குமென்டரி யும் மேலும் மனதை கவர்ந்துவிட்டது. டாக்குமென்டரி உணர்வை தாண்டி இன்னும் என்ரிக் பெனிட்டோவுக்கும் இடையேயான உரையாடல்கள் மண்டைக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. 

#OscarSubmission | #Uruguay | 

Post a Comment

Previous Post Next Post