97 வது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட துருக்கி சார்பில் Life 2023 Hayat Directed by Zeki Demirkubuz என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது . இயக்குனருக்கு இது 12 ஆவது திரைப்படம். ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட இவருடைய படம் அனுப்படுவது இதுவே முதல் முறை. சமீபத்தில் இந்த திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்து .
ஹிக்ரான் என்ற பெண் திடீரென ஒருநாள் வீட்டை விட்டு காணாமல் போகிறாள். அவரது தந்தையால் விருப்பமற்ற நிச்சயதார்த்தம் செய்ய வேண்டிய கட்டாயத்தில், வீட்டை விட்டு ஓடுகிறாள். எங்கு சென்றால் என தெரியவில்லை . திருமண நிச்சயம் செய்ய இருந்த ரெசா அனுப்பி வைத்த பரிசு பொருட்களை அவளின் தந்தை ரெசாவின் தாத்தாவிடம் ஒப்படைத்து விடுகிறார் . அவள் எங்கயோ போயிட்டாள் இனி வந்தாலும் அவளை கொன்று விடுவேன் என அவளின் தந்தை சொல்கிறார். ஹிக்ரான் க்கு தன்னை பிடிக்கவில்லை போல என தினமும் அவளை பற்றி நினைத்துக்கொண்டே இருக்கிறார் ரெசா , இந்த சூழ்நிலை அவரை வெகுவாக பாதிக்கிறது. நாயகனுக்கு ஒருகட்டத்தில் அவளை தேடி கண்டுபிடிக்க வேண்டும் என மனது உறுத்திக்கொண்டே இருக்க. நண்பர்களின் மூலம் இஸ்தான்புல் சென்று அங்கே அவளை தேடுகிறார் , பிறகு அவளை காணவில்லை என்ற போஸ்டரை ஓட்டுகிறார், விபச்சார கூட்டத்திடம் அவள் இருக்கிறாள் என்ற தகவல் கிடைக்கிறது. பின்பு ஒரு துப்பாக்கி ஒன்றை வாங்கி வைத்திருக்கிறார் முடிவில் அவளை கண்டுபிடித்தானா ? என்ன ஆனது ? எதற்கு துப்பாக்கி ? என்பதே மீதி படம் . கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடக்கூடிய இந்த திரைப்படம் நாவல் படிப்பது போன்ற உணர்வை தரக்கூடியது. சில வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு விருதுகளை வென்றுள்ளது.
நாயகன் நாயகி இருவருக்கும் முதல் திரைப்படம் இதற்கு முன்பு சிறு வயது பாத்திரங்களில் நடித்துள்ளனர். துருக்கி சார்பாக 30 திரைப்படங்களை ஆஸ்காருக்கு வெளிநாட்டு படங்கள் பிரிவில் அனுப்பி உள்ளனர் , குறிப்பாக Nuri Bilge Ceylan என்றாலே உங்களுக்கு தெரிந்திருக்கும் , இவரின் 6 திரைப்படங்கள் இந்த பிரிவில் கலந்துகொண்டுள்ளன ஆனால் ஒரே ஒரு முறை மட்டுமே ஷார்ட்லிஸ்ட் பட்டியல் வரை வந்துள்ளார் , நாமினேஷனோ வெற்றி ஓ பெறவில்லை , ஆனால் இவரின் திரைப்படங்கள் எல்லாமே நன்றாக இருக்கும். அதற்கு அடுத்தபடியாக Semih Kaplanoğlu மூன்று படங்கள் அனுப்பியுள்ளனர். துருக்கி படங்கள் நன்றாக இருக்கும் தேடிப்பிடித்து பார்ப்பவர்கள் பாருங்கள் நன்றி #OscarSubmission | #InternationalFeatures | #ForeignFilms
Post a Comment