ருமேனியா வில் ஒரு கொட்டுக்காளி
97 வது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட ருமேனியா சார்பில் Three Kilometres to the End of the World 2024 Trei kilometri până la capătul lumii Directed by Emanuel Pârvu என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது . நடிகர் மற்றும் திரைப்பட இயக்குனரான Emanuel Pârvu சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார், இவருடைய இயக்கத்தில் நான் பார்க்கும் முதல் திரைப்படம் இதுவே , இவர் இயக்கிய மற்ற அனைத்தையும் தேடி பார்க்கவேண்டிய ஆவலை தூண்டியுள்ளது. கான்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டு உயரிய விருதான Palme d'Or க்கு நாமினேஷன் ஆகி Queer Palm ஐ வென்றுள்ளது.
பழைமைவாத சூழலில் இன்னும் வெளியுலகம் காணாத எத்தனையோ மக்கள் இருக்கிறார்கள், இதுதான் நடைமுறை , பழக்கவழக்கம் , கலாச்சாரம் இப்படித்தான் இருக்க வேண்டும் போட்ட கோட்டின் மேல் மட்டுமே நடக்க வேண்டும் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் வாழ்ந்துகொண்டு வருகிறோம். குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் மக்கள் இன்னும் எத்தனையோ விஷயங்களில் எண்ணங்கள் மாறாமல் அப்படியே இருக்கின்றனர். நம்மூர்களில் தான் இப்படி என்றால் வெளிநாடுகளிலும் கூட சாமி குத்தம் , பேய் ஓட்டுகிறேன் , பிரேயர் பண்றேன் , மருந்து எடுக்கறேன் , செய்வினை வைக்கிறேன் , எடுக்கறேன் , கலாச்சார சீர்கேடு , ஒரே பாலினத்தவர்களை விரும்பினால் அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை இப்படி பல சம்பவங்களை கூறலாம் அப்படி ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்ட ஆதி யின் கதைதான் இந்த உலகின் முடிவிற்கு மூன்றே கிலோமீட்டர்கள் திரைப்படம் , அதனால் தான் ருமேனியா கொட்டுக்காளி ன்னு சொன்னே.
தனது விடுமுறை நாட்களை கழிக்க சொந்த கிராமத்திற்கு சென்றுள்ள ஆதி ஒரு ஓரினச்சேர்க்கையாளர் , அது அவரின் பெற்றோர்களுக்கு தெரியாது . தனது சொந்த ஊருக்கு வந்துள்ள டூரிஸ்ட் ஒருவருடன் மகிழ்ச்சியோடு பேசிக்கொண்டு இருக்கிறார். வீட்டிற்கு திரும்புகையில் ஆதியின் முகம் ஒரே ரத்தக்களரியாக இருக்கிறது , யாரோ அடித்து உதைத்து இருக்கிறார்கள் . விசாரித்தால் அவன் ஏதும் சொல்லவில்லை , தந்தை சிலர் மேல் சந்திக்கிறார் இவனை தாக்கியது ஆதிக்கு அங்குள்ள பெண் தோழியின் அப்பாவாக இருக்கலாம் என விசாரிக்கிறார்கள். ஆனால் அவரும் இல்லை பிறகுதான் தெரியவருகிறது அங்குள்ள பணக்கார வீட்டை சேர்ந்த சக வயதை ஒத்த இரண்டு சகோதரர்கள் தான் இதற்கு காரணம் என்பது . என்ன காரணத்திற்க்காக அடித்தார்கள் என விசாரணையில் கேட்டால் சாலையில் இவன் ஒருவனை முத்தமிட்டுக்கொண்டு இருந்தான் அதனால் தான் அடித்தோம் அவனும் திருப்பி தாக்கினான் என்கிறார்கள் ஆனால் ஆதிக்கு மட்டுமே காயங்கள் உடல் முழுவதும் இருக்கிறது என்றால் எங்கள் மகன் பலமாக தாக்கி இருக்கலாம் என்கிறார்கள் . சரி அது ஒரு புறம் இருக்கட்டும் , இந்த விஷயத்தை அறிந்த பெற்றோர்கள் மகன் இப்படி எங்கள் பெயருக்கு களங்கம் தந்து சீர் கெட்டுவிட்டான் அவனை எப்படியாவது மாற்ற வேண்டும் அதிலிருந்து வெளியேற்ற வேண்டும் என தாயும் தந்தையும் அருகிலுள்ள பாதிரியார் ஒருவனிடம் கூட்டிக்கொண்டு போய் கை கால்களை கட்டி பிரேயர்களை செய்கிறார்கள். இதற்கு பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்த திரைப்படம்.
நாயகன் வசனம் ஒன்று தரமாக இருந்தது அம்மாவை பார்த்து கேப்பார் - “உலகம் என்ன சொல்லும் என்று நீங்கள் பயப்படுகிறீர்களா? இந்த உலகம் என் குடும்பம் அல்ல.
ருமேனியா இதுவரை 39 திரைப்படங்களை ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட அனுப்பி இருக்கிறது இது 40 ஆவது Submission இந்த திரைப்படம் இப்போதைக்கு ஷார்ட்லிஸ்ட் ஆவதற்கு வாய்ப்புண்டு மற்ற படங்கள் அனைத்தும் பார்த்தல் முடிவு தெரியும். இதுவரை அவர்கள் அனுப்பிய 39 ல் ஒரே ஒருமுறை மட்டுமே இறுதி 5 நாமினேஷன் பட்டியல் வரை வந்துள்ளது அதுவும் Colectiv என்ற ஒரு டாக்குமென்டரி படத்துக்காக . Romania நாட்டு படங்கள் என்றாலே Radu Jude , Cristian Mungiu படங்கள் தான் நினைவிற்கு வருபவை இனி Emanuel Pârvu இருப்பார் என நம்புகிறேன்.
Post a Comment