Baghdad Messi 2023 - Iraq - 97th Oscar Submission - 2025 International Features

97 வது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட Iraq  சார்பில் Baghdad Messi 2023 Directed by Sahim Omar Kalifa என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது . இயக்குனருக்கு இது இரண்டாவது திரைப்படம் இதற்க்கு முன்பு சில குறும்படங்களை இயக்கி உலக திரைப்படவிழாக்களில் பங்குகொண்டு பல விருதுகளை வாங்கியுள்ளார். ஏற்கனவே  2012 ல் அவர் இயக்கிய  Baghdad Messi   குறும்படத்தின் திரைப்பட வடிவம் தான் தற்போது 2024 ல் 1 மணி நேரம் 23 நிமிடம்  ஆக எடுத்து ஈராக் சார்பில் ஆஸ்காருக்கு தேர்வாகி இருக்கிறது . 




அந்த குறும்படத்தில் ஒரு  காலை இழந்த 10 வயது சிறுவன் ஹமூதி கால்பந்து விளையாட்டில் தீவிர பிரியனாக இருக்கிறார் மெஸ்ஸி என்றால் அவனுக்கு உயிர் ,  Barcelona-Manchester இடையில் நடக்கும் பைனல் மேட்ச் ஐ காண ஆவலாக இருக்கிறான் , திடீரென தொலைக்காட்சி பழுதாக அதனை சரிபார்க்க அங்கிருந்து வெகு தொலைவில் எடுத்து சரிபார்க்க தந்தையும் அவனும் கிளம்புகிறார்கள். ஈராக் இருக்கும்  சூழலில் அவனது ஆசை நிறைவானாதா ? என்பதே அந்த குறும்படம். 

Same  குறும்படத்தின் திரைப்பட வடிவத்தில் அவன் யார் ? எப்படி அவன் ஒரு காலை இழந்தான் ? அவனுடைய தந்தை யார் ? டிவி சரி செய்தானா ? என்ன ஆனது  என்பதே மொத்த படமும் . ஒரு சில காட்சிகள் நன்றாக இருந்தது .  உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். இதற்கு முன்பு ரோமானிய இயக்குனர்  Radu Jude ஒரு குறும்படம் ஒன்றை எடுத்து இருந்தார் The Tube with a Hat (2006)  அன்றிரவு ஒளிபரப்ப இருக்கும் ப்ருஷ்லீ படம் பார்க்க டிவியை சரி செய்ய வெகு தொலைவில் இருக்கும் நண்பரின் கடைக்கு அழைத்து செல்லும் தந்தை மகன் இருவருக்குமான நிகழ்வுகளை படமாக்கி இருப்பார் இயக்குனர். அது நினைவிற்கு வந்தது வாய்ப்பமைந்த்தால் இரண்டையும் காணுங்கள் நன்றி. 

ஈராக் சார்பில் இதுவரை 12 படங்களை ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் அனுப்பியுள்ளனர், இது 13 ஆவது Submission இதுவரை அனுப்பியதில் ஒருமுறை கூட வென்றதில்லை , ஆனால் Son of Babylon என்னை கவர்ந்த மிக சிறந்த படம் அது வெளிவந்த சமயத்தில் 2010 ஆம் ஆண்டு நிறைய நல்ல படங்களோடு போட்டி போடுகையில் ஷார்ட்லிஸ்ட் ஆக வாய்ப்பு கிடைக்கவில்லை , 2022 ஆம் ஆண்டு அனுப்பட்ட Exam என்ற படமும் , 2023 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட Hanging Gardens என்ற படமும் நன்றாக இருந்தன. 

குறிப்பாக Hannging Garden ல் 12  வயது சிறுவன் ஒருவன் குப்பைமேட்டில் கிடைத்த (S.e.x Doll  )  பெண் உருவ பொம்மை ஒன்றை வைத்துக்கொண்டு அங்குள்ள சிறுவர்களிடம் சிறிய பணம் வசூலித்து பயங்கரமான சில வேலைகளை செய்வான், தடைசெய்யப்பட்ட சம்பவங்கள் மேலும் சில  குற்றம் இருந்தாலும் கவனித்து பார்த்தல் அதிலுள்ள பாலியல் விழிப்பு தெளிவுறும், இந்தத் திரைப்படம்  மதம், அடிப்படைவாதம், அரசியல், வணிகம்,மக்கள் பிரச்னை , பாலியல் , பாலினம், ஆணவம் மற்றும் போர் போன்ற பலவற்றை ஒரே திரைப்படத்தில் பேசும்.   வெளிநாட்டு திரைப்பட விழாக்களில் மட்டுமே இதுபோன்ற திரைப்படங்களை காண முடிவும் , இதுபோல விழாக்களில் Submission செய்வதால் மட்டுமே என்னால் இப்படங்களை காண முடிந்தது .

நன்றி 

 #OscarSubmission | #ForeignFilms | #InternationalFeatures

Post a Comment

Previous Post Next Post