97 வது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட பாலஸ்தீன் சார்பில் From Ground Zero 2024 قصص غير محكية من غزة من المسافة صفر என்ற திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது . இதில் மொத்தம் 22 இயக்குனர்களின் குறும்படங்கள் அந்தாலஜியாக சேர்த்தி படமாக்கி இருக்கிறார்கள் .
ஆஸ்காருக்கு இதுவரை பாலஸ்தீனம் சார்பாக 16 திரைப்படங்களை அனுப்பி இருக்கிறார்கள் அதில் இரண்டு முறை நாமினேஷன் வரை வந்துள்ளனர் , அந்த இரண்டும் இயக்குனர் Hany Abu-Assad ன் படங்கள் , Paradise Now (2005) மற்றும் Omar (2013) இதில் ஒமர் அவசியம் காண வேண்டிய படம் கான்ஸ் திரைப்பட விழாவில் Un Certain Regard ஜூரி விருதை வென்றது . இவரின் மற்றொரு படமான Idol உம் Submit செய்யப்பட்டது ஆனால் நாமினேஷன் ஆகவில்லை , எனக்கு Elia Suleiman படங்கள் பிடிக்கும் , பாலஸ்தீனம் சார்பாக அனுப்பட்ட மற்ற படங்களும் நன்றாக இருக்கும் வாய்ப்புள்ள நண்பர்கள் ஆஸ்காருக்கு அனுப்பட்ட படங்களை தேடி பாருங்கள்
From Ground Zero - பேரழிவுக்கு சாட்சியமான பல காட்சிகளும் அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நிறைய உள்ளன , வாழ்ந்த வீடு , அழிந்த வீடு , காண்பிக்கையில் வேதனை தான். பாலஸ்தீன் இஸ்ரேல் பிரச்சனைகளை கொண்டு டாக்குமென்டரி வாயிலாகவும் திரைப்படங்கள் வாயிலாகவும் நமக்கு பல காணக்கிடைக்கின்றன அந்த வகையில் இதுவும் ஒன்று . இதிலும் அதே போல் ஒவ்வொரு தலைப்பிலும் தொடங்கி முடிவு வரை அவர்களின் பிரச்சனைகள் குறித்துதான் , இறந்த மகனை தேடும் தந்தை , இறந்தவர்களை மூடுவதற்கு பயன்படும் பையில் உறங்குதல், மண்ணில் புதைந்த மீண்ட கதை , இடுபாடுகளில் சிக்கி இறந்தவர்களின் கதை , வீட்டில் விட்டு வந்த புத்தகங்கள் , ஆசிரியரை சந்தித்த பழைய மாணவன் , என பல வற்றையும் அப்பகுதியில் மீண்டு இருப்பவர்களின் வாழ்கையையம் பதிவுசெய்துள்ளனர்.
பாலஸ்தீனத்தை சேர்ந்த திரைப்பட இயக்குனர் Rashid Masharawi நிதியின் மூலம் 22 வளரும் திரைப்பட துறையை சார்ந்த கலைஞர்களை கொண்டு உருவாக்கப்பட்டது தான் , இதில் மூன்று முதல் 7 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய குறும்படங்களும் அனிமேஷன் முறையிலும் , டாக்குமென்டரி , பிக்ஷன் , நடந்த நிகழ்வுகள் கொண்டு உருவாக்கப்பட்டவை தான் , காசா வில் வெவ்வேறு பகுதிகளில் இருந்து படமாக்கப்பட்டது இதில் 22 வெவ்வேறு மனிதர்களின் பசி , பஞ்சம் , வறுமை , இழப்பு , வலி , நோய் , உயிர் வாழ்வதற்க்கான போராட்டம் ,
கடந்த வருடம் உக்ரைன் சார்பில் அனுப்பப்பட்ட 20 Days in Mariupol 2023 ‧ War/Documentary எந்த அளவிற்கு தாக்கத்தையும் அழுத்தத்தையும் கொடுத்ததோ அதே போல இந்தப்படமும் தரக்கூடியது. சமீபத்தில் இதனை பார்க்கும் வாய்ப்பு கிடைத்து . அதில் ஒரு குறும்படத்தில் கடவுளே என்னை எப்படியாவது அழைத்துச்செல் நான் அங்கே நிம்மதியாக வாழ்ந்து கொள்கிறேன் என்று ஒரு வசனம் வரும் . உணர்ச்சிவசப்படக்கூடிய சம்பவங்களும் அதிர்வுகளும் உண்டு, கடுமையான சூழலில் வாழும் மக்களின் வேதனைகளை காட்சிப்படுத்த வெவ்வேறு இளம் இயக்குனர்களின் முயற்சி , அதிலும் ஒரு குறும்படம் எடுத்துக்கொண்டு முடியும் சமயத்தில் சகோதரனும் அவரின் குழந்தையும் இறந்துவிட அந்த குறும்படத்தின் முடிவில் இயக்குனர் பேசி முடிக்கிறார் .
அடுத்த நிமிடம் நிச்சயமற்ற சூழலில் வாழும் மக்களின் அன்றாட போராட்டத்தை பற்றி ஒவ்வொன்றும் பேசுகிறது , வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பாருங்கள் நன்றி. #FreePalestine
Post a Comment