Santhosh 2024 - UK - 97Th Oscar Submission - 2025 International Features



97 ஆவது ஆஸ்காருக்கு சிறந்த வெளிநாட்டு படங்கள் பிரிவில் போட்டியிட UK நாட்டு சார்பில் இந்த சந்தோஷ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி இருக்கிறார்கள். 1991 லிருந்து 2023 வரை UK சார்பாக ஆஸ்கர் திரைப்படவிழாவிற்கு  வெளிநாட்டு படங்களை அனுப்பி வருகிறார்கள். கடந்த வருடம் 2023 ல் இவர்கள் அனுப்பிய The Zone of Interest தான் சிறந்த படத்திற்கான விருதை வென்றது, மேலும் இரண்டு முறை நாமினேஷன் வரை வந்தது குறிப்பிடத்தக்கது ( Hedd Wyn (1992) Solomon & Gaenor (1999) )




இந்திய மொழி பேசக்கூடிய படங்கள் தற்போது வெளிநாட்டு தயாரிப்பில் அவர்கள் சார்பாக அனுப்பி வைக்கிறார்கள் இதற்கு முன்பு கனடா Water (2005) படத்தை அனுப்பி இறுதி 5 நாமினேஷன் பட்டியல் வரை வந்தது. இந்த வருடம் பிரான்ஸ் ஷார்ட்லிஸ்ட் பட்டியலில் கூட All We Imagine as Light 2024 இடம்பெற்று இருந்தது ஆனால் அவர்கள் Emilia Pérez 2024 முடிவாக அனுப்பினார்கள். இப்படி மற்ற நாடுகள் மூலம் இந்திய திரைப்படங்கள் இடம்பெறுவது மகிழ்ச்சி தான் இந்தியா சார்பில் அனுப்பும் படங்கள் மற்ற படங்களோடு போட்டி போட்டு வெளியேறாமல் 15 ல் ஒன்றாக ஷார்ட்லிஸ்ட்  ஆகுமளவிற்க்கான படத்தையாவது தேர்வு செய்ய வேண்டும். 

ஒரு வருடத்திற்கு அதிகமான திரைப்படங்கள் வெளியிடும் நாடுகள் பட்டியலை கணக்கிட்டால் முதல் ஐந்து இடங்களுக்குள் நிச்சயம் இந்தியா இடம்பெறும். இங்கும் பல்வேறு திரைப்பட முயற்சிகள் உள்ளன  உண்மை கதைகள் மக்கள் பிரச்னைகள் குறித்து பல டாக்குமெண்டரிகளும் திரைப்படங்களும் உருவாகின்றன ஆனால்  வெளியிடுவதில் சிக்கல் படத்திற்கு  மிக வலுமையான  எதிர்ப்பு , அரசாங்க , சாதி மத ரீதியான பிரச்னைகள் மேலும்  சிலரால் நாட்டில் நடக்கும் பெரும்பாலான சம்பவங்கள் என பல படங்கள் அறியப்படாமல் போகலாம் , வெளிநாட்டு தயாரிப்பில் இந்த வருடம் இரண்டு இந்திய படங்கள் கான்ஸ் ல் பங்குபெற்றன , இரண்டுமே திரைப்படவிழாவில்  வெளியாகி நல்ல  கவனத்தை பெற்று இருக்கிறது. இந்தியா என்றாலே இப்படித்தான் இருக்கும் என சில படங்கள் வெளியூர் பார்வையாளர்கள் மனதில் பதிந்து தற்போது  கொஞ்சம் கொஞ்சமாக மாற்றமடைந்து வந்து கொண்டிருக்கிறது சிறப்பு.  

சரி இங்கு போலீஸ் படங்களும் , கோர்ட் ரூம் படங்களும் அதிகம் குறிப்பாக கமர்ஷியலை கொண்டு மக்களுக்கான ரசிகர்களுக்கான படங்கள் மேலும்  அதிரடியான படங்கள் மட்டுமே  பிரபலம் , இந்த படங்களை தாண்டி ஆர்ப்பாட்டமில்லாத உண்மைக்கு நிகரான படங்களும் உண்டு ,  விசாரணை, ஜெய் பீம் , பிங்க் , Mulk இன்னும் நிறைய ஷார்ட் பிலிம்களும் , சீரீஸ் களும் வந்துகொண்டு இருக்கின்றன , அதிகாரத்தில் இருப்பவர்கள் அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை இதுபோன்ற படங்கள் மூலமாக பார்த்ததை தான் இந்த சந்தோஷ் படமும்.


சந்தியா சூரி இயக்கத்தில் வெளிவந்துள்ள சந்தோஷ் திரைப்படம் 77 ஆவது கான்ஸ் ல் முதல் முறையாக திரையிடப்பட்டது மேலும் சில திரைப்பட விழாக்களில் நாமினேஷன் ஆகி திரையிடப்பட்டு கொண்டு இருக்கிறது வருகின்ற டிசம்பர் அமெரிக்கா திரையரங்கில் வெளியாக இருக்கிறது . 

இயக்குனர் இதற்க்கு முன்பு ஆவணப்படங்களையும் ஷார்ட் பிலிம் ஐ யும் எடுத்துள்ளார் .  I for India - Documentary , Around India with a Movie Camera - Documentary ,  The Field - Short film, Santosh 2024 , சந்தோஷ்  ஒரு பெண் இயக்குனரின் பார்வையிலும் முக்கிய கதாபாத்திரமான பெண் போலீஸ் கான்ஸ்டேபிள் பார்வையிலும் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படம். 

இறந்த கணவனின் வேலை மனைவியான சந்தோஷ் சைனி க்கு கிடைக்கிறது , முன் பின் பழக்கமில்லாத வேலை , தலித் சிறுமி ஒருவர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்படுகிறார் , அவரின் உடல் தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் கிணற்றில் கிடக்கிறது . அந்த கிணற்று நீர் தான் அங்கு வசிக்கும் மக்களுக்கு குடிநீர் அதில் ஏற்கனவே ஒருமுறை  பூனை மற்றும் நாய் விழுந்து இறந்து விடுகிறது. இதற்கு காரணம் யாராக இருப்பார்கள் மக்கள் கொடுக்கும்  புகார்களை எடுக்கவும் விசாரிக்கவும் காவல் அதிகாரிகள் முன் வரவில்லை , புதிதாக வேலைக்கு சேர்ந்த சந்தோஷ் இதற்கு முயற்சி செய்கிறார் .

அந்த சமயத்தில் இறந்த சிறுமியின் உடலை நடு வீதியில் போட்டு போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள் குடும்பத்தினர் , நீதி கேட்டு போராடும் மக்களை அப்புறப்படுத்திய காவல் துறை , அங்கே யாகம் ஒன்றை நடத்துகிறார்கள் , படத்தின் கதை களம் UP வட இந்தியாவில் ஒரு கிராமம் ,  அந்த கேஸ் ஐ விசாரிக்கும் பொறுப்பு ஒரு பெண் காவலற்கு கொடுக்கப்பட இதன் கீழ் அனுப்பிவைப்படுகிறார் சந்தோஷ் சைனி முடிவில் சரியான குற்றவாளி கண்டுபிடித்தாரா ? நீதி கிடைத்ததா என்பதே இந்தப்படம்.

திரைப்படங்களில் எப்போதுமே இண்டிபெண்டண்ட் படங்களுக்கும் நாட்டின் மக்களின் உண்மையான பிரச்னைகளை குறித்து பேசும் படங்களுக்கும்  தனிக்கவனமும் முக்கியத்துவமும் இருக்கும் அந்தவகையில் கான்ஸ் ல் அறிமுகம் ஆன சமயத்திலே பார்க்க முயற்சி செய்து இன்று தான் ஒரு பிரைவேட் ஸ்க்ரீனரில்  காண முடிந்தது , நாயகியின் நடிப்பு சிறப்பு  Shahana Goswami மற்ற படங்களை காண வேண்டும் , இந்த படம்  இந்தியாவில் திரைக்கு திரைப்பட விழாவில் வந்தாலும் காணுங்கள் வேறு எங்காவது Virtual காண கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன். 

நன்றி 




Post a Comment

Previous Post Next Post