ஒரு ஆழமான, அதே நேரத்தில் சற்று மனதை உலுக்கும் short film இதை பார்த்த பிறகு ஒரு கேள்வி எழுகிறது.
“இந்த மாதிரி ஒரு situation நிஜ வாழ்க்கையில் நடந்தா, இந்த வயசுல இருக்கிற பசங்க அப்பாவை வீட்டிலேயே வச்சிக்கணும் ன்னு நினைப்பிங்களா? இல்லனா அப்பாவை psychiatric treatment க்கு அனுப்பி, நம்ப orphanage care-க்கு போய்டலாம்ன்னு முடிவெடுப்பீங்களா?
இந்த film இயக்குனரின் பார்வையில் ஒரு அமைதியான, ஆனால் மிகவும் வலுவான பதிலை தருகிறது. இந்த இரண்டு underage brothers, society-யோட system-ஐ எதிர்த்து நிற்கிறார்கள். என்ன மாதிரியான பிரச்னை ?
அவர்கள் பள்ளியில் தம்பி ஒரு நாள் மூக்கு வாய் எல்லாம் ரத்தத்தோடு வருகிறான் , அடிக்கடி மற்றவர்களோடு சண்டை , துவைக்காத துணி ஒரே நாற்றம் அடிக்கிறது இருவரின் மேல் என பள்ளி முதல்வர் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து அப்பாவிடம் தொலைபேசியில் பேசுகிறார் ஆனால் அப்பாவின் செல்போன் வாஸ் சேஞ்சர் மூலம் மூத்த அண்ணன் தான் பேசுகிறான் அவனுக்கோ வயது 15 . முடிவில் தலைமை ஆசிரியர் வீட்டிலுள்ள அப்பாவை சந்திக்க நேராக வருகிறார். அவருக்கு Frontotemporal dementia இருப்பது வெளியுலகத்தில் யாருக்கும் தெரியாது? எப்படி இவர்கள் இதனை எதிர்கொண்டார்கள்
ஒரு வேலை தலைமை ஆசிரியருக்கு அவர்களின் அப்பாவிற்கு உடம்பு சரியில்லை எனகண்டுபிடிப்பிச்சு அவர்களும் ஒத்துக்கொண்டா, அப்பா – ட்ரீட்மெண்ட் க்கு போக வேண்டி வரும் பசங்க – தனித்தனியா பிரிக்கப்படுவார்கள் குடும்பம் – முற்றிலும் உடைந்து போய்விடும் அதனால்தான் அவர்கள் உண்மையை மறைக்கிறார்கள். அது தவறு இல்லை. அது அன்பால் எடுக்கப்பட்ட முடிவு ஆனால் முடிவில் என்ன? என்பதே இந்த திரைப்படம்.
98 ஆவது ஆஸ்காருக்கு சிறந்த குறும்படங்கள் பிரிவில் 15 குறும்படங்களில் ஷார்ட்லிஸ்ட் பட்டியல் அறிவிக்கப்பட்டது. முதல் குறும்படமாக இதனை பார்த்தேன். மொத்தம் 27 நிமிடங்கள் ஓடக்கூடிய இதனை Jan Saczek என்ற போலந்து நாட்டு திரைப்படக்கல்லூரி மாணவர் இயக்கியுள்ளார், புகழ்பெற்ற Krzysztof Kieślowski Film School பயிலும் இவரின் குறும்படம், போலந்து திரைப்பட விழாவில் கவனம் பெற்று ஆஸ்கார் வரை வந்துள்ளார்.
Frontotemporal dementia ஒரு நோய் மட்டுமல்ல. அது ஒரு குடும்பத்துக்குள்ள roles-ஐ புரட்டிப் போடும் tragedy. இங்க அப்பா குழந்தையா மாறுகிறார். குழந்தைகள் பெரியவர்களா மாற வேண்டிய கட்டாயம்.
இந்த short film-ல பசங்க பயப்படுறது சரிதான். இந்தியாவில் கூட பலருக்கு இந்த பிரச்னை இருக்கலாம் , என்னுடைய பாட்டிக்கு வயதாக வயதாக என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் இருந்தார், எங்கோ போவது , எதையாவது தட்டிவிடுவது , குழந்தை போல தன்னை முற்றிலும் மறந்து நடந்து கொண்டாங்க . வயதாகிவிட்டது இனி இவர்கள் இப்படித்தான் என விட்டுவிட்டார்கள்.
உதாரணத்திற்க்கு அம்மா இறந்து அப்பாவுக்கு இந்த நோய் இருக்கு”ன்னு சொன்னா custody ,child welfare , forced separation, treatment , orphanage என பல பிரச்னைகளை சந்திக்கலாம் இது real possibility.
உங்க ஊர்ல (எந்த நாடாக இருந்தாலும்) இப்படியான குடும்பம் இருந்தா, system அவர்களைக் காப்பாத்துமா? இல்லனா கவர்மெண்ட் ‘procedure’ன்னு சொல்லி பிரிச்சுடுமா?


Post a Comment