Pari (2020,Greece) - Film Intro By Tamil | மொழி தெரியாத ஊரில் மகனை தேடும் தாய்

பல வரைமுறைக்கு கீழ் வாழவேண்டும் என்கிற சூழலில் இருக்கும் "ஈரான்" "ஆப்கான்" மற்ற கிழக்காசிய நாடுகள் , குறிப்பாக மதக்கட்டுப்பாடு உள்ள நாடுகளிலிருந்து  வெளியநாடுகளுக்கு சென்று படிக்கும் வேலைபார்க்கும் அல்லது அங்கே  வசிக்கும் நபர்களை, பற்றிய  படங்களை பார்ப்பதில் சிறிய ஆர்வம்  இருந்தது . அவர்களின் நிலைப்பாடு அங்கே என்ன ? முற்றிலும் வேறுபட்ட கலாச்சாரம் , மக்கள் , இனம் , மதம் , மொழி என அவர்கள் அதனை எப்படி சாதகமாக்கி வாழ்வில் பயணிக்கிறார்கள் என தெரிந்துகொள்ள நினைத்தேன் . அப்படி தேர்வுசெய்து வைத்திருந்த படம் ஒன்றை காணும் வாய்ப்பு இன்று கிடைத்தது . 
தந்தையை தேடி பயணம் , தாயை தேடி பயணம் , மகனை, மகளை  தேடி பயணம் என பல படங்களை இந்த உலக சினிமாவில் கண்டிருப்போம் . அதே போலொரு கதையைமப்பில் உருவான படம்தான் இந்த பரி . ஒரு திரைப்படத்தை பார்ப்பதற்கு முன் அது என்னமாதிரியான கதைக்கருவை கொண்டுள்ளது , இரு வேறுபட்ட நாடுகளில் என்ன தொடர்பு என்ன வித்தியாசம் . குறைந்தபட்சம் Wiki , Letterboxd , One line, ட்ரைலர் யாவது பார்த்து  தெரிந்துகொண்டு பார்த்தல் நிச்சயம் உங்களால் முழுமையாக புரிந்துகொள்ள முடியும் . தன்னபிக்கை அதீத காத்திருப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக தெரிகிறது . 


உதவித்தொகையின் மூலம் தனது மேற்படிப்பிற்காக Greece  நாட்டிற்கு செல்லும் பபாக் என்கிற இளைஞனை காண தாயும் தந்தையும் ஏர்போட்டிற்க்கு வந்திறங்குகிறார்கள் . வெளிநாடுகளுக்கு அவர்கள் பயணம் செய்வது இதுவே முதல் முறை . கிரீக் மொழி தெரியாத ஊரில் தனது மகனுக்காக ஏர்போட்டிலே காத்திருந்து அவன் அங்கே வரவில்லை என்பதனால்  இறுதியாக அவன் வசிக்கும் பகுதிக்குகே  வருகிறார்கள் . அங்கு வந்தால் அவன் மூன்று மாதங்களுக்கு முன்பே இங்கிருந்து கிளம்பிவிட்டதாகவும் , வாடகை பாக்கி இருப்பதாகவும் சொல்கிறார்கள் .   எங்கு சென்றான்? என்ன ஆனான்? என்பதை பற்றி ஒன்றும் தெரியவில்லை . 


முன் பின் பழக்கமில்லாத ஊர் , திக்குமுக்காடும் ஆங்கிலத்தையும் வைத்துக்கொண்டு தனது மகனை கண்டறிய அவன் சென்ற இடங்கள் , படித்த கல்லூரி , பெர்சிய தூதரகம் என அனைத்திலும் தேட ஆரம்பிக்கிறார்கள் . இங்கே வெளிநாடுகளில் இருந்து வரும் பெரும்பாலோனர் கிறித்தவ மதத்திற்கு மாறி விடுகிறார்கள் . அதே போல இங்கு அவரர் விருப்பத்திற்கு ஏற்ப சுதந்திரமாக வாழமுடிகிறது , தனிப்பட்ட எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லை என்பதை கண் கூடாக பார்த்து தெரிந்துகொள்கிறார்கள் .  மகனை தேடிக்கொண்டிருக்கும் சமயத்தில்  அவர்கள் எதிர்பார்த்திடாத தீடீர் சம்பவங்கள் நடக்க , அப்படி இருந்தும் தனது மகனை தேடும் முயற்சியை பரி கைவிடவில்லை . இறுதியில் பரியின் தேடல் என்ன ஆனது , அவளின் நிலை என்ன? மகனை கண்டுபிடித்தாரா  என்பதே இந்தப்படம் . 


இயக்குனருக்கு இது முதல் திரைப்படம் . இந்த திரைப்படத்தை பரிக்கே அவர் சமர்ப்பித்துள்ளார் . படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் சிறப்பாக நடித்திருந்தார்கள் . ஒரு சில காட்சிகளை கேமரா மேன் கண் முன்னே நிறுத்தி இருந்தார் . இயக்குனர் யார் ? அவருக்கு இந்தப்படத்தை எடுக்க எது தூண்டியது போன்ற கேள்விகளுக்கு சில Interview ல் பதில் சொல்லியிருக்கிறார் . அவசியம் படத்தை பார்த்துவிட்டு நீங்கள் இதனை தேடி படித்து தெரிந்துகொள்ளுங்கள் . பெர்லின் மற்றும் இதர திரைப்படவிழாக்களில் பங்குகொண்டு திரையிடப்பட்டு இருக்கிறது . குறிப்பிட்ட சில விருதுகளையும் வென்றுள்ளது . 


மற்ற நாடுகளில் இணை தயாரிப்பில் உருவான இந்தப்படம் 8 விருதுகளையும் பத்திற்கு மேற்பட்ட நாமினேஷன்களையும் பெற்றுள்ளது . இந்த திரைப்படம் தற்போது எந்த ஒரு OTT யிலும் இல்லை . வேண்டுமானால் Festivalscope தளத்தில் திரைப்படவிழாவை VPN பயன்படுத்தி காணலாம் . 


நன்றி 


உங்களின் கருத்துக்களை தெரிவித்து பிடித்த  பதிவுகளை மற்றவர்களுக்கும் Share செய்தால் எனக்கும் தொடர்ந்து பதிவிட ஆர்வமாக இருக்கும் . 


Post a Comment

Previous Post Next Post