வாய் பேச முடியாத மற்றும் காது கேற்காத ஒரு பெண் , அவளுக்கும் இன்னொரு சைக்கோ கொலைகாரனுக்கும் இடையில் நடக்கும் தப்பிக்கும் போராட்டம் தான் இந்த Hush படத்தின் மேலோட்டம் . சீட் எட்ஜில் அறவிடும் அளவிற்கு முரட்டு த்ரில்லரா என்று கேட்டால் நிச்சயம் இல்லை , ஆனால் சிறிய பரபரப்பை தரும் முடிவில் என்ன ஆனது என்பதை தெரிந்துகொள்ள நீங்கள் பார்க்க வேண்டும் .
ஹாரர் த்ரில்லர் திரைப்படங்களுக்கு உலகில் ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு . குறிப்பாக அதிலும் ஒரு பெண் ஒரு சைக்கோவிடமோ அல்லது கொலைகாரனிடம் இருந்து தப்பிப்பது போன்ற எலியும் பூனையும் ஆட்டம் என்றால் பரபரப்பை பார்வையாளருக்கு கிளப்பிவிடும் . நீங்கள் ஏற்கனவே இதுபோன்ற படங்களை பார்த்துள்ளீர்கள் என்றாலும் இதனை மிஸ் செய்யாமல் பார்க்குமாறு பரிந்துரை செய்கிறேன் . ஏனென்றால் சமீபத்தில் கூட கொரியாவில் Midnight என்றொரு படத்தை பார்த்தேன் . அதில் சைக்கோ சீரியல் கில்லர் ஒருவன் செருப்பை தொட்டதற்காக அந்த பெண்ணை தேடி கொலை செய்ய செல்வான் . அந்த பெண்ணுக்கும் காது கேற்காது , பேச முடியாது .
SxSw திரைப்படவிழாவில் இந்த படத்தினை திரையிட்டு இருக்கிறார்கள். வெறும் 1 மணி நேரம் 20 நிமிடம் ஓடக்கூடிய படம்தான் . தமிழில் கூட இதே கான்செப்ட் ஐ வைத்துக்கொண்டு இரண்டு படங்களை இரண்டுவிதமாக ரீமேக் செய்துள்ளார்கள் . அது எந்தெந்த படம் என நினைவில் இருந்தால் கமெண்ட் செய்யுங்கள் . Hush படத்தில் ஒரு சிறிய சீட்டில் எழுதிவிடக்கூடிய அளவுதான் வசனங்கள் இருக்கும் , த்ரில்லர் படப்பிரியர்களுக்கு மற்றும் இதுபோன்ற படங்களை எடுக்க நினைப்பவர்க்ளுக்கு அவசியம் இது சுவாரசியத்தை தரும் .
கொஞ்சம் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் பார்க்க விருப்பம் உள்ளவர்கள் மட்டும் பார்க்கலாம், நல்ல படம் தான் நண்பர்களுக்கும் பரிந்துரைக்கவும் Don't Breathe (2016) , P2, Midnight , Blind , Invisible Man , Calvire போன்ற படங்களையும் நேரமிருக்கும் பட்சத்தில் பார்த்துவிடுங்கள் . ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம் . கொரியாவில் இதுபோன்ற எலியும் பூனையுமாக பரபரப்பான பல படங்கள் உள்ளன . அதை எல்லாம் சொன்னால் லிஸ்ட் பெருசாகி விடும் . தனிப்பட்ட பதிவில் அதையெல்லாம் பதிகிறேன் .
தற்போது Netflix ல் காணக்கிடைக்கிறது .
Post a Comment