Reflection (2021,Ukraine) - Film Intro By Tamil | உலகில் எதிர்கொள்ளவேண்டிய அத்தனையும் பிரதிபலிப்பே

கடிகார முள்ளை விட வேகமாக சுழலும் உலகில் நாம் எதிர்கொள்ளும் அத்தனையும் நம் பிரதிபலிப்பே என்பதை சிறியதாக உணர்த்துகிறது இந்தப்படம்  . புறாவிற்கு வானத்தை போலவே கண்ணாடி பிரதிபலித்து இருக்கும் . இயக்குனர் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் தான் இந்த திரைப்படத்தை எழுத ஆர்வத்தை தூண்டி இருப்பதாக தகவல் .  எதிர்பாராத விதமாக தான் தங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கண்ணடியில் புறா ஒன்று வேகமாக தாக்கி இறந்துவிடுகிறது .. தன்னுடைய பத்து வயது மகளும் அவரும் இருக்கும் சமயத்தில் தான் இப்படி நடந்து விடுகிறது .  அதனின் வெளிப்பாடாக தான் இந்த கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் . 

பதிவை முழுமையாக படித்தால் எங்கே காண கிடைக்கும் போன்ற தகவல் உங்களுக்கு தெரியும் 




ரஸ்யாவிற்கும் உக்ரைனுக்குமான போர் பற்றிய திரைப்படங்கள் பார்த்து இருப்பீர்கள் , போரினால் பாதிக்கப்பட்ட , அதிலிருந்து மீள முடியாமல் தவிக்கும் மனநிலை , பார்த்த சம்பவங்களை மறக்கமுடியாமல் அல்லல் படும் கடுமையான நிலை , என  தான் உணர்ந்த பெரும்பாலானவற்றை கொண்டு தான் இயக்குனர் படங்களை இயக்கி இருக்கிறார் . இதுவரை மொத்தம் 7 . அதில் இரண்டு டாக்குமென்டரி படங்கள் . பிரதிபலிப்பு என்ற இந்தப்படம்தான் 7 வது படம் . இவரின் கடைசி இரண்டு படங்களை பார்த்தல் எனக்கு சுவீடன் நாட்டு இயக்குனரான  ராய் ஆன்ட்ரஷன் அவர்களின் திரைப்படமாக்கல் முறையை கொஞ்சம் முயற்சி செய்கிறார் என்று தோன்றுகிறது .. 

$ads={1}

பெரும்பாலான படங்கள் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவானவை மிகவும் வலி வேதனை நிறைந்து எடுத்திருப்பார்கள் . இயக்குனரின் முந்தைய படம் Atlantis (2020,Ukraine) பார்த்தவர்க்ளுக்கு அவரின் பிலிம் மேக்கிங் ஸ்டைல்  எப்படி இருக்கும் என்ற சிறு அபிப்ராயம் கிடைக்கும் . அவருடைய வரிசையில் இந்தப்படத்தையும் புரிந்துகொள்ள சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும் . படத்தை இரண்டு பாதிகளாக பிரித்துக்கொண்டாள் நம்மால் எளிதில் புறிந்துகொள்ள முடியும் . 


அவரச சிகிச்சை மருத்துவரான நண்பனும் இவரும் ரஷ்ய உக்ரைன் போர் நடக்கும் கிழக்கு எல்லையில் எதிர்பாராத முறையில் சிக்கிக்கொள்கிறார்கள் . அங்கேயே துப்பாக்கியால் சுடப்படும்  நண்பன் , சிறைபிடிக்கப்படும் நாயகன் . பிறகு  நம் கண் முன்னே நடந்த கொடுமையான வன்முறைகளையும் சித்திரவதைகளையும் அனுபவித்து ஒருவனின் உயிர், உடலை விட்டு பிறந்தால் உடனே அவனை எரித்துவிட்டு அடுத்த ஒருவனை சித்தரவதை கூண்டில் ஏற்றும் ராணுவ கொடூரங்களை பார்த்துக்கொண்டு திகைக்கிறார் . இவரையும் விசாரணை செய்துவிட்டு  ஒரு வாய்ப்பு கொடுக்க படுகிறது . உன்னை உயிருடன் விட்டு விடுகிறேன் ஆனால் இங்கே நடந்ததை யாரிடமாவது சொன்னால் உன்னை தேடி கண்டுபிடிப்பது எனக்கு ஒன்னும் பெரிய விஷயமல்ல . என ரஷ்ய அதிகாரிகள் அவரை வெளியே விடுகின்றனர் . அடுத்ததாக  இதிலிருந்து மீண்ட அவரின் வாழ்க்கை இயல்பானதாக இருந்ததா ? என்பதை நீங்கள் படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . 


மரணம் என்பதை நிச்சயமாக நாம் அனைவரும்  ஏற்றுக்கொண்டு ஆக வேண்டும் , அது அது இன்றோ நாளையோ என்றோ ஆனால் அது இயற்கையின் பாடு , நாமாக தேடிக்கொள்வது முறையல்ல . முடிந்தவரை வாழும்பவரை வாழ்ந்துவிட்டு மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளலாம் . அதன் மூலம் இப்போதே உண்டாகும் கவலைகள் , கேள்விகள் , மனதிற்குள் எழும் சந்தேகங்கள் , மீளமுடியாத மறுப்பு ,  மரணத்தை புரிந்துகொள்ளுதல் என அத்தனையும் நம்மை பாதிக்கும் . கடிமான மன உளைச்சலை தரும் . ஒருவித பதட்ட மனநிலை , எப்போதுமே இருக்கும்  . எல்லாம் என்றாவது ஒருநாள் நமக்கு கடும் வருத்தத்தை தரலாம் . முடிந்தவரை இதுபோன்ற சிந்தனைகளில் இருந்து விலக முயற்சியுங்கள் . 


இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனைகள் , போர்கள் மையமாக கொண்டு நிறைய படங்களை பார்த்திருப்போம் . அதே வகையில் இந்தப்படமும் கொஞ்சம் கடினமானது தான் . ஒருசில காட்சிகள் ரத்த வெள்ளத்தில் இருக்கும் . போர் சம்மந்தப்பட்ட அதன் பின்ணணியில் உருவாக்கக்கூடிய படங்களை பார்ப்போர் மட்டுமே பார்க்கவும் . படம் பார்த்த பலரும் இந்த படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறது என்றே பெரும்பாலான கருத்தை முன்வைத்தார்கள் , ஒருவேளை அவரின் படத்தை முதல் முறை பார்த்து இருக்கலாம் . இவர்களுக்கு பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த லாவ்டியாசின் படங்கள போட்டுக்காட்டினால் சரியாய் இருக்கும் . 



ராய் ஆண்டர்சன் அவர்களின் திரைப்படங்களை பார்த்து இருக்கிறீர்களா ?? மனித எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்தும் ஒரு அட்டகாசமான இயக்குனர் ., தனிபட்ட ஸ்டைலிஷ் மேக்கிங் ஐ கொண்டிருக்கிறார் . அவருக்கு இதுபோன்ற எண்ணம் எங்கிருந்து உருவானது என்றெல்லாம் எனக்கு இப்போது வரை தெரியாது . ஆனால் என்னை பொறுத்தவரை அவரின் திரைப்படங்கள் வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் . இந்தப்படத்தை பார்க்கும் பொழுது எனக்கு அவரின் படங்கள் தான் நியாபகத்திற்கு வந்தன . 


$ads={2}

ஒரு சில காட்சிகளுக்கு மட்டுமே கேமரா பின்தொடர்ந்து நகரும் மற்றபடி ஒரே இடத்தில வைத்துவிட்டு காட்சிகளை மெதுவாக படமாக்கி இருப்பார்கள். இந்த நரகமான சூழலில்  பிறந்திருந்தால் நிச்சயம் என்னால் மனதளவில் கூட கட்டுப்படுத்தி இருக்க முடியாது , ஆனால் தான் பார்த்த எதையுமே வெளியில் சொல்லாமல் தனக்குள்ளே வைத்துக்கொண்டு சாதாரண ஒரு ஆளாக வருவது சாத்தியமில்லாத ஒன்றாக தான் கருதுகிறேன் .  இழப்பு , சோர்வு , வருத்தம் , மன அழுத்தம் , என அனைத்தும் மிக ஆழமாக அணுகுகிறது . 


 நீங்கள் Atlantis , Donboss , Badroads , மற்றும் Homeward போன்ற உக்ரேனிய படங்களை பார்த்து உள்ளீர்கள் என்றல் இதையும் அவசியம் பார்க்கலாம் . 

வெனிஸ் திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட இந்தப்படம் இன்னும் உக்ரைனில் வெளியாகவில்லை . போர் பிரச்சனையில் இருப்பதனால் . இந்த திரைப்படத்தை நான் FestivalScope தளத்தில் கண்டேன் . இந்தியாவில்  வேறெந்த OTT தளங்களிலும் இல்லை , But if you search online you will get now .. நன்றி 

நாட்டின் அமைதியை தான் நானும் விரும்புகிறேன் . போர் ஒரு சரியான தீர்வாக இருக்காது . நிச்சயம் அது பல விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் . கடவுள் , மதம் , இனம் , எல்லை , மண் , பொன் , செல்வம்  ,குறிப்பாக   மதத்தின் பெயரில் நடத்தப்படும் எதுவுமே எந்த ஒரு பைசா பலனையும் தராது அழிவை தான் கண்டுகூடாக்கும் , வாழும்வரை மக்களையும்,  உயிர்களையும்  நேசிப்போம் , அன்பை மட்டுமே வருங்கால உலகிற்கு கற்றுத்தருவோம் . கற்றுத்தாருங்கள் .


Post a Comment

Previous Post Next Post