Bombshell (2019,USA) - Film Intro By Tamil | பத்திரிக்கை துறையும் பாலியல் தொல்லையும்

பத்திரிக்கை செய்தி துறையில் பணிபுரியும் சிலருக்கு பதவி உயர்வோ, அல்லது அவர்களின் அடுத்த கட்ட நகர்வோ செல்ல வேண்டும் என்றால். அவர்கள் சில நடைமுறைகளை கடந்து வர வேண்டும். உயர் பணியில் இருப்போர் கொடுக்கும் டார்ச்சர் அத்தனையும் சகித்துக்கொண்டு, அந்த பணியை செய்வது என்பதெல்லாம் கொடுமை. அதிலும் பாலியல் ரீதியாக அதிகமாக பாதிக்கப்படுவது பெண்கள் . நடந்த உண்மை சம்பவங்களை கோர்த்து படமாக்குவது என்பது சாதாரண காரியமில்லை . ஆரம்பித்த 20 , 25 நிமிடங்கள் என்ன போகிறது என்ற விளங்காமல் இருந்தேன் . பிறகு தான் அந்த கதை புரிய வந்தது. 





எதிர்த்து பேசவும் முடியாமல். வெளியே சொல்லவும் முடியாமல் அவர்களை நிலை வருத்தற்குரியது . பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ,சீண்டல்கள் , அட்ஜஸ்ட்மென்ட் , மேலும் அத்துமீறல்கள் என  உயர் அதிகாரிகளின் மறுபக்கத்தை காட்டிவிடுகிறார்கள். படத்தில் மீட்டிங்ல் பேசிக்கொள்வார்கள் ,மீடியா என்றாலோ. அல்லது மதிப்பு மிக்க என்னைப்போல் உன்னைப்போல் உள்ள ஆள்களுக்கு மரியாதை கெடுப்பது போன்ற பிரச்னைகள் வருவது இயல்பு தான். இதை எல்லாம் அவர்கள் பிரபலமாக செய்கிறார்கள் . இதை எல்லாம் பெரிது படுத்தாமல் கடந்து விட்டு போக வேண்டும் என பேசிக்கொள்வார்கள். உயர் அதிகாரிகளின் பாலியல் ரீதியான துன்புறுத்தல் இங்கும் இருக்கின்றன. நம் சினிமா துறை, மீடியா துறை ,மற்ற தொழில் அலுவலகம் என எங்கும் நிறைந்த இருக்கின்றனர். 


என்றாவது அவர்கள் வெளியே வந்தால் . அவர்களை காப்பாற்ற ஒரு கூட்டம் இருக்கிறது . குறிப்பாக  நடந்த mee too . பாதிக்கப்பட்டவர்கள் மனைநிலை இருப்போர் இந்த படத்தை பார்த்தால் அவர்கள் இன்னும் பெரும் மன உழைச்சலுக்கு ஆளாகலாம். படமாக்கப்பட்ட வகையில் நிறைய காட்சிகளை நீக்கி இருப்பார்கள் என்பதை பார்க்கையில் தெரிந்தது. இந்த படத்தில் மூன்று முக்கியமான கதாபாத்திரங்கள். அவர்கள் மூவரும் ஒரே அலுவலகம் வெவ்வேறு துறை . இந்த காட்சியில் தான் மூவரும் இணைத்தார் போல இருக்கும். இவர்கள் மூவரை பற்றிய உண்மை சம்பவ படம் தான் இது . சினிமாவாக மேக்கிங்ல் சுமாராக இருந்தாலும் பேசப்பட்ட விடயம் ரொம்ப முக்கியமானது . மற்றும் அவசியமானது. அந்த வகையில் இந்த திரைப்படத்தை நிச்சயம் மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன். .  அவசியம் ஒரு முறை பாருங்கள் .


பெங்களூர் 2019 தியேட்டர் ல பார்த்த படம். இந்த படத்தை Mubi Go தேர்வு செய்து இருந்தார்கள். Mubi சினிமா செயலி பயனாளர்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன். வாரம் ஒரு திரைப்படம் அவர்களே தேர்வு செய்து ஒரு இலவச டிக்கெட் ஐ கொடுப்பார்கள். ஜனவரி முதல் வாரம் இந்த திரைப்படம் தான் தேர்வு செய்தார்கள் . அவர்களுக்கு மிக்க நன்றி . இதனை பார்த்துக்கலாம் ஒரு வாரம் டைம் இருக்கு என விட்டு விட்டேன் , கடைசி நாளான அன்று தான்  பார்க்க முடிந்தது.. . தற்போது MUBI Go செயலி தற்காலிகமாக இந்தியாவில் நிறுத்திவைக்க பட்டுள்ளது 


இந்தப்படத்தை தற்போது நீங்கள் Lionsgate தளத்தில் பார்க்கலாம் . நன்றி 

Post a Comment

Previous Post Next Post