Suzhal - The Vortex (2022) - TV Series Intro By Tamil | சுழல் .. சுழட்டுச்சா ??

ஒரு சம்பவத்தை கொண்டு பின்னப்பட்ட பல கிளை கதைகளை ஒன்றன் பின் ஒன்றாக முடிச்சுகளை அவிழ்த்து பார்வையாளனை கட்டுக்குள் வைத்து இறுதியில் அந்த சீரீஸ் க்கு நியாயம் செய்யும் வகையிலும் அடுத்ததடுத்த சீரீஸ்கள் வருவதற்கான முன்னெடுப்பை வைப்பதிலும் தான் சுவாரஸ்யம்  இருக்கிறது . இதை எல்லாம் 2 மணி நேரத்தில் முடித்திருக்கலாம் . அரை மணி நேரத்தை வெட்டி தூர வீசி இருக்கலாம் . இன்னும் குறைந்த  நேரத்தில் எடுத்திருக்கலாம் .  வேற லெவல் , உலக படத்தை தூக்கி சாப்பிடும் அளவிற்கு இருக்கு . ஷார்ட் பிலிம் ஆக்கி இருக்கலாம் , ரெண்டவது எபிசோட் ல் தூங்கி விட்டேன் , அப்புறம்  ஆறு முறை சிறுநீர் கழிக்க சென்று விட்டேன் , தேவையில்லாத ஆணி , தரம் , நீங்க சொன்ன அந்தளவிற்கு சுவாரஸ்யமில்லை  என ஆளாளுக்கு ஒரு கருத்தை சொல்வார்கள்  . அது மனித இயல்பு முடிந்தவரை அதை விட்டுவிடுங்கள் .  




ஒரு சில படங்களையோ அல்லது சீரீஸ்களையோ பார்க்கும் பொழுது இதே மாதிரி தமிழில் இல்லையே , அல்லது தமிழ் Dubbed கூட இல்லையே , நம்ப ஆட்களுக்கு ஹீரோயினை தொரத்தி தொரத்தி காதல் டார்ச்சர் கொடுக்குற கான்செப்ட் படங்கள் தான் காலம் பூரா வரும் போல என  புலம்பிக்கொண்டிருக்கும் சமயத்தில் . லாக்டவுனில்  நடந்த ஒரே புண்ணியம்  OTT வளர்ச்சியில் பல கவனிக்கத்தக்க சினிமாக்களை காண முடியவைத்ததும் அதனை தொடர்ந்து பல முன்னெடுப்புகளை நிகழ்த்தியதும்  தான்  . Web சீரீஸ் தமிழுக்கு முழுவதும் புதிதாக பழக்கப்பட்டது . பெரும்பாலான சினிமா பிரியர்கள் மத்தியில் தற்போது வளர தொடங்கி இருக்கிறது . இந்த சமயத்தில் அதற்கான ஆதரவை மக்கள் கொடுத்தால் இதனிலும் பல தரப்பட்ட சினிமாக்கள் வெளியே வரலாம் .  நம்முடைய சினிமா ஏக்கத்திற்கு தீனி போடும் வகையில் ஆக்கபூர்வமான போட்டிகள் நடக்கும் , ஆக  திறைமை க்கு தகுந்த பாராட்டுக்கள் அவர்களை நிச்சயம் வந்து சேரும் . 



எந்த சீரிஸ் எடுத்துக்கொண்டாலும் இடையிலும் கடைசி இரண்டு எபிசோட்களும்  சும்மா  தீயாய் பறக்கவிடுவார்கள் . பரபரக்க வைப்பதில் இந்த எபிசோட்கள் எல்லாம் மிகவும் பிரபலம் . அதே தீவிரம் தான் இந்த சுழல் சீரீஸ் உம் செய்திருக்கிறது . டுவிஸ்ட் ஓ ! இல்லை திருப்புனை ஓ இல்லாமல் பார்வையாளர்களை குஷி படுத்த முடியாது , ஆனால் பார்க்கிற நாமும் சும்மாய் இருக்க மாட்டோம் . இவனா கொக்கமக்கா அவனா ? நிச்சயம் அவன் இல்லை ன்னு பேசிக்கிட்டே இருப்போம் .  அப்படி இவர்களும் சில சுவாரசியத்தை முயற்சி செய்திருக்கிறார்கள் . அந்த வகையில் நம்மை ஆச்சர்யப்படுத்தவும் தவறவில்லை . ஒருகட்டத்தில் நமக்கே இவன்தான் என ஒருவன் புடிபடுவான் , ஆனான் அவனும் இல்லை என முடிப்பதுதான் உலக சீரீஸ் களின் சாராம்சமே . ஆகையால் அது ஒரு புதிய நுட்பம் என அதுவே உலகத்தரம் என கம்பை சுழட்டி விடாதீர்கள் , 

இந்தியாவில் வெளியான பெரும்பாலான சீரியல் கில்லர் , அல்லது கொலைகாரன் கதை , அல்லது விசாரணை சம்மந்தப்பட்ட எதுவுமே சரியாக  முழுபெறவில்லை என்பதுதான் உண்மை . எங்கெங்கோ  தேடுவார்கள் கடைசியில் சட்டை பாக்கெட்டுக்குள் தான் இருந்தது சாவி என்பதை போலத்தான் இருக்கும்  நம் ஊர் படைப்புகள் . அதிலும் கொலைகாரனுக்கு நியாயம் செய்யும் வகையில் அவனுக்கு ஒரு பின் கதை முன் கதை இதனால் தான் இப்படி தீவிரமாக ஆனான் , அவன் ஒரு குழந்தை என்பதெல்லாம் கடுப்புகளை கிளப்பிவிடும் .  . கடைசி வரை நான் எதுக்குடா சரிப்பட்டு வரமாட்டேன் என்பதை போல யார்டா அவன், என தேடி தேடி பார்த்தாலும் கிடைக்காமல் போன கொலைகாரன் பற்றி எத்தனை எத்தனையோ படங்கள் சீரீஸ்களும்  உலக சினிமாவில் உண்டு , சாம்பிளுக்கு Memories Of Murder படத்தை பாருங்கள் . ஆக ஒரு கதையை எடுத்துக்கொண்டு இறுதிவரை ஒருத்தனை Stunning Aga வைப்பதில் தான் இயக்குனரின் திறமையிலும் இருக்கிறது , குறிப்பாக எழுத்தின் முக்கியத்துவமும் இருக்கிறது . 

தீப்பிடிச்சு எரியுற பேக்டரி , கடத்தப்படுற பெண் , ரத்தக்காவு , மயான திருவிழா ,காணப்போற Gun  , போலீஸ் விசாரணை , டுவிஸ்ட் , பிண்ணனி இசை ன்னு ஒவ்வொரு எபிசோடும் நன்றாக  எடுத்திருக்கிறார்கள் , ஆனால் பின்னிப்பெடல் எடுத்து இருக்கிறார்கள் என சொல்ல முடியவில்லை  . வழக்கம் போல எல்லா விஷயமும் எல்லாமும் பிடிக்கனும் ன்னு அவசியம் இல்லை . முடிந்தவரை அவர்களும் சுவாரசியமாய் தான் முயற்சி செய்துள்ளார்கள் . மொத்தம் 8 எபிசோட் . இதுதான் மேட்டர் என சொல்லி இதுபோன்ற சீரீஸ் ஐ அறிமுகத்துவது நியமாக இருக்காது . 

அதே நேரத்தில் நான் இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன் . நீங்கள் பல சுவாரசியமான படங்களையோ , அல்லது சீரீஸ்களையோ ஏற்கனவே பார்த்து இருக்கும் பட்சத்தில் இது உங்களின் நேரத்தை வீணாக்கலாம் . இப்படித்தான் தமிழில்  விலங்கு என்றொரு சீரீஸ் ஐ மக்கள் பேச தொடங்கினார்கள் . நானும் நண்பரும் அந்த சீரீஸ் ஐ  ஜப்பான் நாட்டு Cold Fish என்ற  படத்தோடு தொடர்பு படுத்தி பேசிக்கொண்டிருந்தோம் . 
அது குறை சொல்லும் அளவிற்கு ஒன்று இல்லை என்றாலும் , Cold Fish ல் கணவன் மனைவி சேர்ந்து சிலரை கைக்குள் போட்டுகொண்டு அவர்களை கொலை செய்து  உடல் உறுப்புகளை துண்டுதுண்டாக நறுக்கி  இவர்களை  ஆற்றிலோ குட்டையிலோ மீனுக்கு போட்டுவிட்டு எலும்புகளை எரித்து சாம்பலாக்கி விடுவார்கள் ., 

அதனை இந்த விலங்கோடு தொடர்பு படுத்தி பார்த்தல் விலங்கு ஒரு Lite version . கொலைகாரன் பார்வையிலும் கொலை செய்யப்பட்டதன் பார்வையிலும் குறைந்த அளவே நகரும் . விசாரணை பேர்வழி என பல படங்களை பார்த்ததனால் எனக்கும் விலங்கு ஒரு சாதாரண Avg சீரீஸ்  அப்படி தோன்றி இருக்கலாம் .  என்னை பொறுத்தமட்டில்  விலங்கும் சரி சுழலும் சரி நேரமிருக்கும் பட்சத்தில் ஒருமுறை பார்க்கலாம் சீரீஸ் . ஒரே சிட்டிங் ல் பார்த்து முடிப்பதனால் யாரும் யாருக்கும் அவார்ட் ஐ தரப்போவதில்லை . அது ஒரு ஆர்வத்தின் வெளிப்பாடு அவ்வளவே  . 

Kathir நல்ல நடிகர் பரியேறும் பெருமாள் , கிருமி , மதயானை கூட்டம் , சிகை படங்களில் நன்றாக நடித்திருந்தார்  , திமிரு பிரபலம் Shreya  , பார்த்திபன் , ஐஸ்வர்யா மற்றும் பலர் நன்றாக நடித்துள்ளார்கள்  . 

கூடுதலாக சொல்லவேண்டுமானால் நமக்கு எல்லாம் பிடித்தே ஆக வேண்டிய கட்டாயமில்லை ஆனால் பிடித்ததை மட்டும் எடுத்துக்கொள்ளலாம் . அந்த வகையில் எனக்கு ஒரு சில காட்சிகள் சில எபிசோட்கள் சுவாரசியமாய் இருந்தது , ஆனால் உலக தரமான சீரீஸ் என்று உருட்டுவதை எல்லாம் சிரிப்பை தருகிறது . உலக சீரீஸ்கள் பார்ப்பவர்கள் இதனை கேட்டால் கொஞ்சம் வருத்தப்படுவார்கள் . திருவிழா கேப்ரவுண்ட் ஐ வைத்துக்கொண்டு ஒரு சுவாரசியமான சம்பவமும்  அதை தொடர்ந்து பின்னப்பட்ட கதை என அடுத்தடுத்த எபிசோட் ஆக கொண்டுவந்திருப்பதில் பாராட்டத்தக்கது . 

சுழல் உங்களையும் ஒரே ஒருமுறை சுழட்டும் ..  அது எங்கன்னு பாக்கிற உங்களுக்கு புரியும் . அதுக்கப்புறம் அவ்ளோதான் . 

நேரமிருந்தால் பார்க்கலாம் நிச்சயம் ஒருமுறை . அடுத்தடுத்த பல நிறைய சீரீஸ் கள் தமிழ் சினிமாவிலும் வரவேண்டும் . வரவிருக்கும் இயக்குனர்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் நன்றி , இந்த தொடரை தற்போது அமேசான் பிரைமில் காணலாம் . 

Post a Comment

Previous Post Next Post