அதுக்கு நீ சரிப்பட்டு வரமாட்ட காமெடி போல கடைசி வரை எதுக்குடா நான் சரிப்பட்டு வரமாட்டேன் ன்னு வடிவேலு புலம்பிக்கொண்டே இருப்பார் .
அப்படி நாயகன் ஒருவர் தான் என்ன குற்றம் செய்தோம் எதுக்காக நம்மை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் . அடைத்துவிட்டு குற்றத்தை ஒப்புக்கொள் இல்லையேல் உனக்காக வாதாட வக்கீலை தேர்வு செய் என கட்டளையிடுகிறார்கள் என எதுவும் புரியாமல் மண்டையை பிய்த்துக்கொள்கிறார் . தடம் புரளும் வாலிபரின் 20 நிமிட கதை .
18 Mins | Oscar Nominated Short Film
முடிவில் அவர் என்ன ஆனார் என்பது இந்த குறும்படம் . ஜாலியான Fun கான்செப்ட் தான் ஆனால் கவனிக்கத்தக்கது . ஆஸ்காரில் ஷார்ட் பிலிம் பிரிவில் நாமினேஷன் ஆகி இருப்பது குறிப்பிடத்தக்கது . வேண்டுவோர் தேடினால் கிடைத்துவிடும் .
ஒருநிமிஷம் இந்த திரைப்படம் நிகழும் காலம் தொழில்நுட்ப வளர்ச்சி படுபயங்கரமாய் முன்னேறிய காலகட்டம் . ஆம் இங்கே போலீஸ் என ரோபோக்கள் தான் . டெக்னலாஜி தான் எல்லாம் . மீதியெல்லாம் ஷார்ட் பிலிம் ல பார்த்துக்கோங்க !
இந்தப்படம் Youtube லே இருக்கு தேடுனா கிடைச்சுடும் . இல்லைன்னா டெலெக்ராம் நம்ப க்ரூப் ல கேளுங்க அனுப்பறேன்
إرسال تعليق