ஒரு திரைப்படத்தை பார்க்கையில் விடவிடத்து கையும் காலும் வியர்த்துப்போய் அதிர்ந்து பார்த்து இருக்கீங்களா ? (ஹாரர் சினிமாவை தவிர்த்து) . அப்படி என்னை ஆச்சரியப்பட வைத்த திரைப்படத்தை பற்றிய என்னுடைய அறிமுகத்தை இந்த பதிவில் பகிர்கிறேன். குறிப்பு : அகன்ற திரையில் இந்த படத்தை பார்ப்போர் கொடுத்து வைத்தவர்கள்.
ஒரு உண்மை சம்பவத்தை படமாக்குவது என்பது சாதரண காரியமில்லை. என பலமுறை சொல்லியிருக்கிறேன் . பார்வையாளனுக்கு அது தரும் அனுபவம் அந்த காலகட்ட நிகழ்வுக்கே அழைத்து சென்று நம்மையும் அதோடு கட்டிப்போட்டு விடும். அதிலும் "அந்த உண்மை சம்பவம் War பின்புலத்தில் இருந்து வந்தால் " , பிறகு அந்த ஆர்வம் நம்மை விட்டு வைக்காது. உடனே பார்த்திவிடு , என்ற வெறியை கிளப்பி விட்டு விடும். போருக்கு பிறகு ஜெர்மனியில் நடந்த சில முக்கிய சம்பவங்களில் இதுவும் ஒன்று.
இரண்டு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மொத்தம் 8 பேர் கிழக்கு ஜெர்மனியில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு சட்டத்திற்கு புறம்பான வழியில் செல்கிறார்கள். எப்படி , எதில் செல்கிறார்கள்? என்பதெல்லாம் அட்டகாசமாக காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சென்றார்களா? இல்லையா? என்பதனை படத்தை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கொஞ்சம் வரலாறை பற்றி பார்ப்போம். போரில் தோல்வி கண்ட ஜெர்மனி தலைவர் ஹிட்லர் தற்கொலை செய்துகொள்கிறார். வெற்றிகண்ட நேச நாடுகளான அமெரிக்காவும் , சோவியத் ரஷ்யாவும் நாட்டை பங்குபோட்டு கொண்டனர். நாடு இரண்டாக பிரிக்கப்பட்டது. ஒன்று மேற்கு ஜெர்மனி . மற்றொன்று கிழக்கு ஜெர்மனி . கிழக்கை ரஷ்யா ஆண்டது. மேற்கில் அமெரிக்கா. இரண்டுக்கும் நடுவில் பெர்லின். பெர்லின் சுவர் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். இரண்டாம் உலகப்போருக்கு பிறகு உலக வரைபடத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெர்மனி வரைப்படத்திலும் ஒரு மாற்றம் ஏற்பட்டது.இரண்டுக்கும் நடுவில் பெர்லின் சுவர் எழுப்ப பட்டது. அதன் கதைக்கு வருவோம்.
அரசாங்க உத்தரவுக்கு அனைவரும் கட்டுப்பட்டே ஆக வேண்டும். மீண்டும் ஒரு சர்வாதிகார அரசில் மக்கள் வாழ விரும்பில்லை. அனைவரும் குடும்பத்தோடு சுதந்திரமாக வாழ ஆசைப்பட்டனர். தங்களின் விருப்பம் போல மேற்கில் இருப்பர் கிழக்கிற்கும், கிழக்கில் இருப்போர் மேற்க்கும் செல்ல விருப்ப பட்டனர். தம் தம் சொந்தங்களை பிரிந்துள்ள மக்கள் எப்படியாவது ஒன்றிணைய வேண்டும் என முழு நம்பிக்கையில் இருந்தனர். அமெரிக்கா வசம் இருந்த மேற்கு ஜெர்மனி வளர்ச்சி கண்டு கொண்டே இருந்தது. இங்குள்ள மக்கள் அங்கு செல்வதை தடுத்த ரஷ்ய அரசு பெர்லின் சுவரை எழுப்பி நாட்டின் எல்லையாக அறிவித்தது. 45 ஆண்டுகாலம் பிரிந்தே இருந்த ஜெர்மன். Oct 3 1990 ல் இணைந்தது.
கிழக்கிலுள்ள மக்கள் அங்கு செல்லவும் மேற்க்கில் உள்ள மக்கள் இங்கு வரவும் ஒரே வழித்தடம் அதுதான். பெரும்பாலான மக்கள் மேற்கு ஜெர்மனிக்கே சென்றனர் அகதிகளாக. அப்படி வருவோரை அமெரிக்க அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.இங்குள்ள மக்கள் அங்கு செல்வதை நிறுத்த தான் பெர்லின் சுவர் கிழக்கு ஜெர்மனியால் கட்டப்பட்டது குறிப்பிட தக்கது. பல போராட்டங்கள் பல தடைகள் என எதுவும் வேலைக்கு ஆகவில்லை. 1989 ல் போராட்டம் முழு வீச்சில் வெடித்தது. 1990 ல் பிறகு இரண்டும் சேர்ந்தது வரலாறு.
அதிகம் அறியப்படாத போர் சம்மந்தப்பட்ட, அல்லது போருக்கு பிறகு போன்ற திரைப்படங்களை பார்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம். அதிலும் இந்த திரைப்படம் சமீபத்தில் பார்த்ததில் வெகுவாக என்னை கவர்ந்தது. தி வால்க் திரைப்படம் பார்த்து இருப்பீர்கள் அந்த படபடப்பு இங்கும் இருக்கும் . Cell No 7 கொரியன் படத்தில் தந்தையும் அந்த குழந்தையும் எப்படியாவது அந்த பலூன் மூலம் அங்கு சென்று விடவேண்டும் என பார்வையாளர்கள் விரும்பி இருப்போம். அதே போல தான் இங்கும் விரும்பி பார்த்தேன். சமீபத்தில் பார்த்த படங்களிளே இதுதான் Best, ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை எனக்கு பரபரப்பை தந்தது. வரலாறு மற்றும் போருக்கு பிறகான படங்களை விரும்பி பார்க்கும் நபரா நீங்கள் அப்படியென்றால் அவசியம் இந்த ஜெர்மன் நாட்டு திரைப்படத்தை பாருங்கள்.
இதே பெயரில் திபெத்தியன் நாட்டு படமொன்றும் இருக்கிறது , அதையும் பெங்களூர் திரைப்படவிழாவில் திரையிட்டார்கள் அதுவும் அவசியமான ஒரு பலூன் கதையை பேசக்கூடிய படம்தான் . கூடிய விரைவில் அதற்கும் ஒரு பதிவு நமது பக்கத்தில் பதிகிறேன் .
இந்த கிழக்கு, மேற்கு பெர்லின் சுவர் பிரிவினை மனிதர்களுக்கு மட்டுமல்ல விலங்குகளுக்கும் தான் அவசியமான ஒரு குறும்படம் ஒன்று இருக்கிறது அதையும் பார்த்துவிடுங்கள் . இணைப்பு இங்கே
இந்தப்படம் இந்தியாவில் எந்த OTT யிலும் இல்லை நீங்கள் அமெரிக்காவில் இருந்தால் Vudu , Youtube , Kanopy , ITunes என பல தளங்களில் Rental எடுத்து பார்த்துக்கொள்ளலாம் . ஆனால் இந்தியாவில் இருந்து VPN பயன்படுத்தி பார்க்க தெரிந்தால் பாருங்கள் . இல்லையேல் இணையத்தில் கொஞ்சம் தேடினால் கிடைத்து விடும் . தேடி கிடைக்காத சமயத்தில் என்னிடம் கேளுங்கள் தருகிறேன் .
நன்றி
إرسال تعليق