Little Berlin (2020,Germany) - Short Film Intro By Tamil | ஒரு காளை மாட்டின் சோகக்கதை

உலக வரைபடத்தில் பல மாற்றங்களை கொண்டு வந்த இரண்டாம் உலகப்போர் பற்றி எத்தனை எத்தனையோ கதைகளை கேள்விப்பட்டு இருப்பீர்கள்  . அது  சம்மந்தப்பட்ட திரைப்படங்கள் , தொடர்பான டாக்குமென்டரிகள் என ஏற்கனவே பலவற்றை பார்த்து இருப்பீர்கள்.  அதில் இந்த பீட்டர் என்ற காளையை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்களா என்று தெரியாது . பீட்டரின் வாழ்வின் நடந்த ஒரு சோகத்தை தான் இந்தக் குறும்படம். உண்மையிலேயே  என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது . 








ஒரு அழகான பசுமையான ஜெர்மன் கிராமம் பீட்டர் என்ற புத்திசாலியான பார்க்க கொஞ்சம் சுமாரான காளை மாடு . குறிப்பிட்ட சொல்ல வேண்டிய விஷயம் அந்த  கிராமத்தில் இருந்த ஒரே ஒரு காளை மாடு பீட்டர் தான் . பீட்டருக்கு 36 ஜோடிகள் . வாழ்வில் செழித்து மகிழ்ந்த பீட்டரின் வாழ்வில் இரண்டாம் உலகப்போர் என்ற இடி விழ , அதனை தொடர்ந்து  நடந்தது பெரும் சோகம் தான் இது .   

The Inner Germany என்ற புத்தகத்தின் மூலம் இந்த காளைமாட்டின் கதை படமாக்கப்பட்டு இருக்கிறது . ஜெர்மன் வீழ்ச்சிக்கு பிறகு , சோவியத் ரஷ்யா கிழக்கிலும்  , அமெரிக்கா மேற்கிலும்  நாட்டை பங்குபோட்டுக்கொள்ள நடுவே எழுப்பினார்கள் பெர்லின் சுவர் . லிட்டில் பெர்லின் என்றழைக்கப்பட்ட அந்த குட்டி கிராமத்தில் 36 பசு மாடுகள் கிழக்கிலும் ஒரே ஒரு காளை மாடான நம்ப பீட்டர் மேற்கிலும் சிக்கிக்கொண்டார் . சுவருக்கு அந்தப்பக்கம் இருக்கும் 36 பசுக்களுக்கு எப்படியும் பீட்டர் நம்மை வந்துசேருவான் என ஏங்கி இருக்கிறார்கள் . பீட்டரோ  கடும் சோர்விலும்  குடும்பம் குட்டிகளை இழந்த சோகத்தின்  வருத்தத்திலும் உள்ளார் . பீட்டரின்  கதை என்ன ஆனது? என்பதை தெரிந்துகொள்ள அவசியம் நீங்கள் இந்த குறும்படத்தை பார்த்தே தீருங்கள் என பரிந்துரை தருகிறேன் . 




ஒருபக்கம் கமியூனிஸ ஆட்சி மறுபக்கம் ஜனநாயக ஆட்சி மனுஷகுக்கு தான் பிரிவினை ன்னா பாவம் மாடுகளுக்குமா ? பெர்லின் சுவர் பற்றியும் அதன் வரலாறு பற்றியும் , அங்கிருந்து தப்பிக்க சுவாரசியமான முயற்சியை செய்த குடும்பம் The Balloon (2018) என்ற படம்  பற்றியும் சுருக்கமாகவும் விளக்கமாகவும் இங்கே எழுதியுள்ளேன் அவசியம் அதை படித்து விட்டு இதை படித்தால் உங்களுக்கு இன்னும் தகவல் கிடைக்கும் . 



இந்தப்படத்தை இந்தியாவில் இருந்து நிச்சயம் பார்க்க முடியாது , நீங்கள் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறீர்கள் என்றால் Arte தளத்தில் இலவசமாக பார்க்கலாம் . VPN உபயோகிக்க தெரிந்தால் உபயோகித்து பாருங்கள் . இல்லை என்றாலும் கவலை விடுங்க நம்ப டெலெக்ராம் குழுவில் என்னை கேளுங்கள் நான்  தருகிறேன் . ஷார்ட் ஹிஸ்டரி டாக்குமென்டரி காமெடி காதல் அன்பு கலந்து குறும்படமாக்கி அதனை திரைப்பட விழாக்களில் திரையிட்டு பார்வையாளர்களின் பாராட்டை பெற்றிருக்கிறார்கள் . பிரிவினை வாதம் நமக்குமட்டுமல்ல மக்களே , இந்த உலகில் உயிருள்ள அத்தனை ஜீவனிற்கும் தான் . இந்த குறும்படத்தை பிரிவினையால் பாதிக்கப்பட்ட அத்தனை பேருக்கும் அர்ப்பணிப்பு செய்துள்ளார்கள் .. பீட்டர் You Great Da Cutetaandi 

நன்றி ..

நமது தளத்தில் இடம்பெறும் கட்டுரைகள் பிடித்திருந்தால் ஷேர் செய்து வளர்ச்சிக்கு உதவுங்கள் . 



Post a Comment

Previous Post Next Post