The Warden (2019,Iran) - Film Intro By Tamil | ஈரான் சிறையிலிருந்து காணாமல் போன கைதி

Aiport இருக்கும் பகுதியை பெரிது படுத்துவதற்காக அருகில் இருக்கும் சிறைச்சாலையை இடிக்க வேண்டிய சூழல் வருகிறது. அரசாங்க விதி படி அங்குள்ள மொத்த பொருட்கள் மற்றும் கைதிகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட இருக்கின்றனர். இதற்கு பிறகு அந்த சிறைச்சாலையில் முதன்மை அதிகாரியாக இருப்பவருக்கு , மேல் உயர் பதவி கிடைக்க இருக்கிறது. அந்த குஷியில் ஆடி மகிழ்ச்சியில் இருப்பவருக்கு ஒரு எதிர்பார்த்திராத  பிரச்சனை ஒன்று வர இருக்கிறது .. அதனை எப்படி எதிர்கொண்டார் ? என்ன பிரச்னை ? என்பதெல்லாம் படத்தில் . 





சிறைச்சாலையில் எல்லாம் முடிந்து ஒரு வழியாக கொஞ்சம் கொஞ்சமாக ஷிப்ட் செய்து விட்டார்கள். அப்படி முடிந்துவிட்டால் எப்படி சினிமா சுவாரசியமாகும். இங்குதான் ஒரு திருப்பம் . கைதிகளின் ஒருவன் மட்டும் மிஸ்ஸிங் ஆகுறான். அவன் ஒருவேளை தப்பித்து விட்டானா என தேடுகையில் அதற்கு வாய்ப்பே இல்லை. என்னை மீறி எவனும் தப்ப முடியாது . அவன் இங்குதான் எங்கோ மறைந்து கொண்டு இருக்கிறான் என தேட ஆரம்பிக்கிறார்கள். அதற்கு பிறகு சில பல திருப்பங்கள். இதில் இன்னும் என்ன சுவாரசியம் என்றால் அந்த கைதி ஒன்றிரண்டு வாரங்களில் தூக்கிலிட பட வேண்டியவன். ஆஹா அப்ப பலே ஆளாகத்தான் இருக்கும். இதற்கு மேல் என்ன ஆகி இருக்கும் என்பதனை ஆர்வம் இருப்போர் தேடிப்பிடித்து பாருங்கள். ஈரான் நாட்டு படங்கள் என்றாலே அது இப்படித்தான் இருக்கும் என ஒரு வரைமுறை இருக்கும் . இது கொஞ்சம் வேறுபட்டது . 


இயக்குனருக்கு இது இரண்டாவது திரைப்படம். முதல் படத்தை நேரம் அமைவின் பார்க்க வேண்டும். ஈரான் நாட்டு திரைப்படங்கள் மேல் பலருக்கு பல அபிப்பிராயங்கள் இருக்கும். பெரும்பாலான படங்கள் குடும்ப நிலை அவர்களின் வாழ்வு பற்றியதாகவே இருக்கும். சில படங்கள் பார்க்க தொடங்கி கிடப்பில் விட்டவையும் உண்டு. இந்த திரைப்படத்தை பார்க்க பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை.கோவா , கேரளா , சென்னை திரைப்படவிழாவில் கலந்துக்கொண்டுள்ளது என்பதற்க்காக பார்த்தேன். எடுத்துக்கொண்ட கதையை சுவாரஸ்யமாகவே கொடுத்து இருக்கிறார்கள். வாய்ப்பு இருப்போர் ஒருமுறை தாராளமாக பார்க்கலாம். 

 The Warden (2019,Iran) / Persian / Nima Javidi 

ஒன்றரை மணி நேரத்திற்கு குறைவாக ஓடும் இந்த திரைப்படத்தில் ரசிக்கும் படியான நடிப்பும். சிறப்பான கேமரா ஒர்க்கிங் குறிப்பிட தகுந்தவை. நடிகை அவ்வளவு அழகாக இருக்கிறார். பயப்பட வேண்டாம் இது நீங்கள் நினைக்கும் அளவு கலை படமெல்லாம் இல்லை கமர்சியல் சினிமா தான் திருப்பங்களுடன் ஜாலியாக போகும். ஆங்காங்கே சில லாஜிக் மிஸ்டேக்கள் இருந்தாலும் பெரித்தாக பாதிக்காமல் சென்றது சிறப்பே . No Date No Sign (2017) ல் நடித்த Navid Mohammadzadeh இதில் உயர் அதிகாரியாக சிறப்பாக நடித்துள்ளார். 

நன்றி


இந்தப்படத்தை தற்போது இந்தியாவில் எந்த OTT தளமும் Streaming செய்யவில்லை . வேண்டுமானால் தேடிப்பெறலாம் . 

Post a Comment

Previous Post Next Post