இந்த Georgia நாட்டு திரைப்படத்தை சமீபத்தில் பார்க்க முடிந்தது . இயக்குனர் Levan Bakhia விற்கு இது இரண்டாவது படம் . Unpredictable Psychological Thriller படங்கள் எப்போதுமே ஒருவிதமான படபடப்பை ஏற்படுத்த கூடியவை. பார்வையாளர்களான நமக்கு ,அந்த தாக்கம் படத்தின் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை இருக்கும். ஒரு சில சமயங்களில் காட்சிகளை பொறுத்து கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கோவம் வரும் . என்னதான் சினிமாவாக இருந்தாலும் ஒரு சில ஜானர்களில் வரும் படங்கள் அந்த மாதிரி. பிறகு நீங்களே சொல்லுவீங்க Revenge is always sweet ன்னு .
மலயாளத்தில் 2019ல் மே மாதம் வந்து சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த Ishq (2019) திரைப்படமும் இதன் தழுவல் தான். தழுவல் என்றால் அபிஷியலாக அவர்கள் சொல்லவில்லை . புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன் . அப்புறம் ரெண்டு படங்களும் எனக்கு பிடித்தன . ரெண்டும் பார்க்கலாம் . எதிரிக்கு கூட இந்த நிலை வரக்கூடாது ..
******** முக்கிய குறிப்பு ********
படம் பார்ப்பதற்கு முன்பே அதனுடைய முன்னோட்டத்தையும் என்ன வகை படம் என்பதனை கொஞ்சம் தேடிவிட்டு தொடருங்கள் . I Spit on your Grave Series, Bedeviled , They Call Her one eye, The Virgin Spring , Rape ,Revenge 2017, Psychological , போலத்தான் இந்த படமும் But Not a usual Revenge Movie . முன்னோடத்தை பார்த்த பிறகு என்னால் இதுபோன்ற வகை படங்களை பார்க்க முடியாது என்பவர்கள் தயவுசெய்து பார்க்காமல் விலகி இருப்பதே நல்லது . சிங்கிள் ரூம் , ஒன் லொக்கேஷன் , மினிமலிஸ்ட் கதாபாத்திரங்களை கொண்ட , ஹாரர் த்ரில்லர் Survival வகை படங்களை தேடிக்கொண்டு இருக்கையில் கண்ணில் சிக்கியது தான் இந்த படம் . தலைப்பே வித்தியாசமா இருக்கு பார்ப்போம் ன்னு ஆரம்பிச்சா படு பயங்கரமா இருந்தது படம் . ஒருவிதமான TENSE ஸ்டோரி SCREENPLAY பார்க்கிற நம்மாளயே கன்ட்ரோல் பண்ணமுடியாம கோவத்தை ஏத்தி விற்றும். அதுலயும் குறிப்பா முதல் பாதி இரண்டாம் பாதி ன்னு சீரியஸ்லி ரொம்ப கடுமையானது சொல்றதே .
படம் முடிஞ்சும் கொஞ்சம் அப்செட்டாகத்தான் இருந்துச்சி. Darkness Of Human Soul ,Terrifying scenes, அப்பறம் க்ளைமேக்ஸ் ன்னு . டேனியல் மற்றும் அவனோட காதலி தங்களோட திருமண நிச்சியத்திற்கு பிறகு இவங்க நண்பனான கிறிஷ் ஐ கூட்டிகிட்டு Georgia ல இருக்க ஒரு மலைக்கு ட்ரிப் போறாங்க . தன்னோட நெருங்கிய நண்பனான க்றிஸ் எதிர்பாராத விதமா நிலத்துல பதிச்சு வச்ச Landmine மேல காலை வச்சுடுறான் . அது மேல இருந்து கால கொஞ்சம் எடுத்தாலோ இல்லை நகுந்தாலோ வெடிச்சுடும் , ஒவ்வொரு செகண்ட்டும் மரணம் தான் , பக்கு பக்குன்னு இருக்கும் . உதவிக்கு ஆள் வேணும்ன்னாலும் அந்த இடத்துல இருந்து கிட்ட தட்ட கீழ போக நாலுமணி நேரமாச்சும் ஆகிடும் . மொழி தெரியாத ஊர்ல போய் இப்படி மாட்டிகிட்டு கதி கலங்கிடும் .
இது இல்லாம அதிர்ச்சியான திருப்பங்கள் அதிர்ச்சியான பிரச்னைகள் சந்திக்க நேர்வார்கள் . அவன் தப்பிச்சானா இல்லாயாங்கிறது ஒரு பக்கம். இதுக்கு மேல தான் படமே அது என்ன ன்னு ஆர்வமிருக்கவங்க பார்த்து தான் தெரிஞ்சுக்க வேணும் . இந்த திரைப்படங்கள் ஏற்படுத்திய தாக்கம் படு பயங்கரமா இருந்தது . எதிரிக்கு கூட இப்படிப்பட்ட நிலைமை வந்துவிட கூடாது . இதுல Cinematography மிக சிறப்பா இருந்துச்சி . அதுக்கு தகுந்த மாதிரி சவுண்ட்டிராக் பிண்ணனி சின்ன சின்ன இசை ன்னு ஒரே பதட்டத்தோட இருக்கும் . முக்கிய கதாபத்திரங்கள் பிறகு வரக்கூடிய கதாபாத்திரங்கள் ன்னு நடிப்பு மிக சிறப்பா இருந்தது .
சரி இப்போ இதற்கும் இஷ்க் படத்துக்கும் என்ன தொடர்பு . மலயாள சினிமாக்கள் பொதுவாகவே பீல் குட் என்ற வகைக்குள்ளே அடக்கிவிடுவார்கள் எப்படியும் வருசத்துக்கு அஞ்சு படமாவது பீல் குட் வகையில் வந்துவிடும் இந்த திரைப்படம் காதல் ஆனால் காதல் கதை அல்ல என்று தான் தொடங்கும் . எதிர்பாரத ஒரு சம்பவத்துக்குள்ள மாட்டிகிட்டு பாடாய்படுவது தான் . அதை நான் சொல்லி தெரிஞ்சுக்கிட்டா நீங்கள் என்ன பாப்பீங்க அமேசான் ப்ரைம் ல் உள்ளது Ishq . Youtube ல உள்ளது Landmine Goes Click ரெண்டையும் பார்த்தே தெரிஞ்சுக்கோங்க. இங்க நூத்துல அம்பது சதவீதம் பேரு எங்கோ பார்த்ததை, கேட்டதை படித்சதைத்தான மறு உருவாக்கம் செய்து சொந்த படைப்பாக்குகிறார்கள் .
அப்படி பாக்கையில் இந்த படம் மலயாள இயக்குனருக்கு இன்ஸ்ப்பியர் ஆகி இருக்கலாம். வெவ்வேறு நாடுகளில் பல மொழிகளில் மனிதர்களின் மாறுபட்ட பன் முகங்களை பதிவு செய்துகொண்டே தான் இருக்கிறார்கள்.அதில் இந்த படம் டார்க்னெக்நெஸ் ஆப் ஹுமைன் சைட் பத்தியும் அவனோட Terror Psycho தனத்தையும் சொல்லுது , எந்த ஊருல தான் சைக்கோ இல்ல சொல்லுங்க . வாய்ப்புள்ளவர்கள் விரும்பினால் இரண்டு படங்களையும் கனத்த இதயத்தோடு பாருங்கள் .
Landmine Goes Click (2015,Georgia) / English, Georgia / Levan Bakhia
إرسال تعليق