நாடோடிகள் பற்றி பல படங்களை பார்த்திருப்பீர்கள் , ஊரில் ஆங்காங்கே கூடாரமிட்டு குறிப்பிட்ட நாள்கள் வியாபாரத்தை நடத்திவிட்டு அடுத்த பகுதியை நோக்கி சென்றுகொண்டே இருப்பார்கள் . அப்படி கஜக்கஸ்தான் நாட்டு படமொன்றை தான் இன்று அறிமுகம் செய்ய போகிறேன் . இந்த படத்திற்கும் விஜய் சேதுபதிக்கும் ஏன் உலகநாயகன் கமல்ஹாசனுக்கு கூட ஒரு சிறிய தொடர்பு இருக்கிறது அதை இறுதியில் சொல்கிறேன் .
அகன்ற நிலப்பரப்பை கொண்ட காய்ந்த புல்வெளி பகுதியான கஜகஸ்தான் கிராமம் . பல கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த ஓர் பாதையும் மில்லை போதுமான கரண்ட் வசதியுமில்லை . எந்தவொரு அடையாளமில்லாத தூசி நிறைந்த பகுதிக்கு ரஷ்ய கப்பல் பணியில் இருந்து வரும் ஆசா தனது சகோதரி சமல் குடும்பத்தோடு வசிக்க வருகிறார் , அங்கே இவர்கள் ஆடு மேய்க்கும் தொழிலும் இருக்கிறார் . அவர்கள் ஏற்கனவே ஒரே கூடாதரத்தில் மூன்று குழந்தைகளோடும் கணவனோடும் வசித்து வருகிறார் . ஆசா தனக்கென ஒரு பண்ணையை வைக்க விரும்புகிறார் . அப்படி சொந்தமாக பண்ணை வைக்க வேண்டுமானால் அவர் முதலில் திருமணம் செய்திருக்க வேண்டும் .
அங்கே திருமணம் செய்துவைக்க தக்க சுற்றுவட்டாரத்தில் துல்பன் என்ற ஒரே ஒரு பெண் தான் இருக்கிறார் . அவரை பெண் பார்க்க செல்கிறார்கள் , பெண்ணை திருமணம் செய்துகொள்ள ஆசா திமிங்கலம் ,சுறா மீன் ,ஆக்டொபஸ் என தான் பார்த்த அத்தனையும் அவரின் பெற்றோர்களிடம் சொல்கிறார் . கூடுதலாக இத்தனை ஆடுகளை தருகிறோம் வெளிநாட்டு லைட் செட்டப் ஒன்றை தருகிறோம் என்கிறார்கள் . எதோ ஒரு காரணத்திற்காக ஆசா நிராகரிக்கப்படுகிறார் . அதற்க்கு பிறகு என்ன ஆனது என்பதுதான் இந்தப்படம் . நீங்கள் எதிர்பார்த்திருக்கவே மாட்டீர்கள் அப்படி ஒரு படம் .
இந்த திரைப்படத்திற்கும் எதிர்ப்பு இருந்திருக்கிறது , நம் நாட்டை பற்றி எத்தனையோ நல்ல விஷயத்தை சொல்லி இருக்கலாம் , இதை ஒரு படமென்று எடுத்து வைத்திருக்கிறீர்கள் , நம் நாட்டின் ஏழ்மையை பற்றி நீங்கள் படமெடுக்க தேவையில்லை என எதிர்ப்புகள் ஆயிரம் கிளம்பினாலும் உலக அளவில் பெருமளவு கவனிக்கப்பட்டு , சிறந்த படத்திற்கான விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது . நான் இப்படி ஒரு படத்தை தான் எடுக்க விரும்பினேன் என இயக்குனரின் பேட்டி இணையத்தில் இருக்கிறது அவசியம் அதையும் பாருங்கள் . இந்த திரைப்படத்தில் சகோதரியாக நடித்த Samal Yeslyamova தான் இயக்குனரின் இரண்டாவது படத்தில் முக்கிய கதாபாத்திரம் அவசியம் அதையும் பார்த்துவிடுங்கள் .
ஒரு திரைப்படம் உங்களோடு பேச வேண்டும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் , முற்றிலும் உண்மை சொல்கிறதோ இல்ல பாதி உண்மையோ இல்லை முற்றிலும் பொய்யோ , உங்கள் சிந்தனையை மாற்றி விட வேண்டும் . அதை நிச்சயம் இந்தப்படம் முன்னெடுக்கும் , ஒரு சிறிய தூண்டுதலாவது கிடைக்கும் என்று நம்புகிறேன் .
இந்த திரைப்படத்தை பற்றி என்னுடைய சக சினிமா பிரியர் நண்பர்களோடு பேசுகையில் அதனை பல பேருக்கும் பிடித்திருப்பது ஆச்சர்யமாக இருந்தது . பார்த்தவர்கள் பலரும் இப்படி ஒரு படத்தை இதுவரை பார்த்ததேயில்லை அவ்வளவு யதார்த்தமான படம் என்றார்கள் . பல வருடங்களுக்கு முன்பு சென்னை திரைப்படவிழாவில் இதே படத்தை ஓப்பனிங் பிலிம் ஆக திரையிட்டார்கள் அப்போது பார்த்த விஜய் சேதுபதி அது குறித்து 2017 ஆம் ஆண்டு 15 ஆவது சென்னை திரைப்படவிழாவில் இறுதி நாளில் பேசி இருக்கிறார் . அதே திரைப்படவிழாவில் கைதி , விக்ரம் புகழ் லோகேஷ் கனகராஜ் மாநகரம் திரைப்படத்திற்காக ஒரு விருதையும் வென்றார் . வீடியோ இணைப்பை இணைக்கிறேன் பார்த்துவிட்டு வாருங்கள் .
விஜய் சேதுபதி பேச்சு ...
நான் சினிமாவை மற்ற மொழிகளில் மூலம் தான் கற்றுக்கொன்டேன் . சினிமாக்களில் வாய்ப்பு தேடும் சமயங்களில் திரைப்படம் பார்ப்பதில் கவனம் செலுத்துவதில்லை சாதாரணமாக வெளிநாட்ல அவங்க படம் எடுக்குறாங்க இங்க நம்ப எடுக்கிறோம் என்ன வித்தியாசம் என மேம்போக்காக இருந்தேன் . அப்போது விகடனில் உலக சினிமா படங்களை அறிமுகம் செய்துகொண்டிருந்தார் செழியன். அவரின் கட்டுரையில் Life Is Beautiful திரைப்படத்தை தான் முதலில் பார்த்தேன் . பிறகு நண்பர்களோடு கலந்து கொண்டு உலக சினிமா திரைப்படவிழாவில் நான் பார்த்து ஆடிப்போன படமென்றால் அது Tulpan தான் என்கிறார் . முழு விடியோவை இங்கே பாருங்கள் .
2008 ஆம் ஆண்டு இந்திய திரைப்படவிழாவான கோவாவில் கமல்ஹாசன் கையில் இந்த இயக்குனர் ஒரு விருதை வாங்கினார்.
மத்திய ஆசியாவில் இருந்து வெளிவரும் படங்கள் எல்லாம் எதோ ஒரு தனித்துவமை கொண்டதாக இருக்கிறது . எப்படி ஒரு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து வெளிவரும் படங்களை அவர்களின் , வாழ்வு , குடும்பம் நிலை , கல்வி , பொருளாதாரம், கலாச்சாரம் என ஒன்றுவிடாமல் கவனிக்கிறோமோ அதுபோல இந்த ஆசியப்படங்களும் கவனம் ஈர்க்கின்றன . சமீபத்தில் என் பட்டியலில் கஜகஸ்தான் நாட்டு படங்கள் லிஸ்ட் கூடிக்கொண்டே போகிறது . சினிமாவை நேசிக்கும் ஒவ்வொருவரும் பார்த்தே தீர வேண்டிய படம் , நிறைய கற்றுக்கொள்ளலாம் .
அடுத்த படத்தில் சந்திக்கலாம் . இந்தப்படம் தற்போது இந்தியாவில் எந்த ஒரு OTT யிலும் இல்லை கொஞ்சம் தேடினால் கிடைத்துவிடும் . தேடிப்பாருங்கள் . தேடி கிடைக்காத பட்சத்தில் இந்த வாரம் நமது டெலெக்ராம் குழுவில் கேளுங்கள் தருகிறேன் .
إرسال تعليق