Such Beautiful People (2013,Ukraine) - Film Intro By Tamil | அன்பு தானே சார் எல்லாம் அழகான மனிதர்கள்

கிரிமியாவின் கருங்கடல் கரை பகுதியில் பரந்த நிலப்பரப்பில் அழகாக துவங்குகிறது கதை . பரபரப்பான நகரங்களில் வாழ்பவர்களுக்கு  இதுபோன்ற பகுதியில் வாழ்நாளில் ஒருமுறையாவது வாழ்ந்துவிட வேண்டிய எண்ணம் நிச்சயம் இருக்கும் . கடற்கரை ஒட்டி இரண்டு வீடுகள் , நீங்கள் விரும்பிய வாழ்க்கை , வேறென்ன வேண்டும் . அப்பகுதிக்கு புதிதாக காரில்  வரும் ஒருவர்  ஓர் கடைக்கு முன் வண்டியை பின் எடுத்து நிறுத்துகிறார் . கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த ஒரு கடை தான் இருக்கிறது  .  காலை மற்றும் மாலை என இரு நேரங்களில் மட்டும் கடை செயல்படும் . பொதுவாகவே  காலை அங்குள்ள மக்கள் வேலைக்கு செல்வதற்கு  முன்பும் , வேலை முடிந்து வீடு திரும்பும் சமயத்திலும் அங்கே வந்து   மீன்கள்  மற்றும் பியரை குடிப்பதை வழக்கமாக வைத்துள்ளார்கள் . 



அப்பகுதியில் காரை நிறுத்தி இறங்கி கடை திறக்க யாராவது வருவார்கள் என  காத்துக்கொண்டிருக்கும் வேலையில் சைக்கிளில் ஒரு பெண் வந்திறங்குகிறார் . எனக்கு திருமணம் ஆகிவிட்டது எனக்கு ஒரு மகனும் உண்டு என்னை அப்படி பார்க்காதே  . என்னுடைய தோழி ஒருவர் இருக்கிறார் உனக்கு வேண்டுமானால் நீ விருந்தினராக அங்கே வந்து தங்கலாம் என்கிறார் . அவனும் அதற்க்கு சம்மதிக்க அங்கே ஓர் இரவு தங்குகிறார் . அவளுடைய தோழியும் புதிதாக வந்த ஆளும் இருவரும் பேசிக்கொள்கிறார்கள் , ஆனால் மார்த்தாவிற்கு எதோ ஒன்று புடிபடவில்லை . 

துணையற்று கிடக்கும் தனது தோழிக்கு எப்படியாவது ஒரு ஆண் நண்பரை துணையாக்கி தர வேண்டும் என விரும்புகிறாள் அந்த கடை கார பெண்   . குறைந்தபட்சம் அவன் உன்னோடு ஒருநாளாவது தங்க வேண்டும் என விரும்புகிறார் . ஆனால் இவள் அழைத்து வந்த ஆணையோ அவளுக்கு பிடிக்கவில்லை , அவள் விரும்பும் ஒர்  ஆணை தான் அவள் நேசிக்க விரும்புகிறாள் . அப்படி அவள் விரும்பிய துணையை தேர்வு செய்தாளா ? என்பதனை ஒரே நேர்கோட்டில் அவ்வளவு அழகாக சொல்லி இருக்கிறார்கள் . 


மனிதர்களுக்குண்டான தொடர்புகள் , ஒருவருக்கு ஒருவர் அன்பு செலுத்துதல் அன்பை தேடுதல் , மனித எண்ணம் இதை எல்லாம் பற்றி பேசுகிறது  படம்  .. இதுபோன்ற கதையமைப்புககளில் எனக்கு ஸ்வீடிஷ் நாட்டு இயக்குனரான ராய் ஆண்டர்ஸனை தான் மிகவும் பிடிக்கும் அவர் கையாளும் விதம் முற்றிலும் மாறுபட்டது .  இந்த திரைப்படம் எனக்கு அவரின் லைட் வெர்சனை போன்றதோர் உணர்வை தந்தது . Martha வாக நடித்த Polina Voynevych அப்படியே வாழ்ந்திருக்கிறார் . ஒரு அழகான பீல் குட் ட்ராமாவாக இருக்கிறது . இதே போல ஆயிரம் படம் இருக்கலாம் ஆனால் இது தனி ரகம். 


இந்த திரைப்படம் ஒரு அழகான சிறுகதை போன்ற உணர்வையையோ அல்லது கவிதையை போலவோ அல்லது ஒரு பாடலை கேற்பது போன்ற உணர்வையோ தருமா என கேட்டால் கிட்ட தட்ட தான் முயன்று உள்ளார்கள் . எனக்கு பிடித்திருந்தது எல்லோருக்கும் பிடிக்குமா என்பது தெரியவில்லை .  படத்தின் தலைப்பே அவ்வளவு அழகான மனிதர்கள் என்பதுதான் உண்மையிலேயே அவர்கள் மட்டுமல்ல தான் விரும்பியதை செய்ய முயலும்  அவர்களின் மனமும் எண்ணமும் , ஆசையும் , விருப்பமும் அத்தனைக்கும் உண்டான தொடர்பும் அழகுதான் , இயக்குனரின் இன்னொரு படமொன்றை பார்க்க வேண்டும் . 

இந்த திரைப்படம் OTT யில் இல்லை கொஞ்சம் தேடினால் கிடைக்கும் தேடிப் பாருங்கள் . 


Post a Comment

أحدث أقدم