Mediterraneo: The Law of the Sea (2021 , Spain ) - Film Intro By Tamil | தண்ணீரில் தத்தளிக்கும் மக்கள்

மனிதநேயம் ஒன்று மட்டும் போதும் . என தன்னார்வள  தொண்டு நிறுவனம் ஒன்றின் மெய்காப்பாளராக இருக்கும் ஆஸ்கர் என்பவர்  ஒருவரின் உண்மை சம்பவத்தின் நிகழ்வுகளே இந்தப்படம் . அவரோடு சேர்ந்து அவர் மகளும் சக நண்பரும் அரசாங்கமே முன் வந்து செய்திடாத ஒரு சம்பவத்தை செய்கிறார்கள் . அது என்ன சம்பவம் , ஏன் என படத்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள் . அவசியம் ட்ரைலர் பாருங்கள் இணைப்பு கீழே  .

Mediterraneo: The Law of the Sea 2021


புலம்பெயர்ந்தவர்களின் போராட்ட வாழ்க்கை , அவர்களுக்கு நேர்ந்த சம்பவங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா ? குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து , கிட்ட தட்ட பல  லச்சத்திற்கும் அதிகமானோர் கடல்வழி பயணத்தில் மூலமே மற்ற நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைய  செல்கிறார்கள் . உயிரை கையில் பிடித்துக்கொண்டு அந்த கடலில் பயணம் செய்து ஐரோப்பிய எல்லையில் அடைவதற்குள் நடக்கும் போராட்டம் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை  . புலம்பெயர்ந்தவர்கள் , அகதிகள் சம்மந்தப்பட்ட எத்தனை எத்தனையோ திரைப்படங்களையும் , உண்மை சம்பவங்களையும் , டாக்குமென்டரிகளையும் கண்டிருப்பீர்கள் .


சிரியாவிலிருந்து , ஈராக்கிலிருந்து , ஆப்கானிலிருந்து மற்ற சில நாடுகளில் இருந்தும் நிலையற்ற தன்மை , உறுதியற்ற அரசாங்கம் , சொந்த நாட்டிலே விரட்டியடிக்க படுதல் என பல லச்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்   , கடல் வழி மூலம் இல்லீகளாக வருபவர்கள் எத்தனையோ பேர் இடையில் காணாமலும் இறந்தும் போய் இருக்கிறார்கள்  . இவர்களுக்கு உதவ ஒருசிலரை தவற யாருமே முன் வருவதில்லை . இதைப்பற்றி கேள்வியை முன் வைத்தாலும் உன் வேலையை நீ பார் , என் வேலையை நான் பார்க்கிறேன் , இதையெல்லாம் பற்றி நீ கவலை பட தேவை இல்ல என அடைக்களம் கொடுக்கும் சிலரும் சொல்கின்றனர் .  

இந்த திரைப்படத்தை பற்றி பார்ப்பதற்கு முன்பு ஆலன் பற்றி தெரிந்துகொள்வோம் . ! 

அய்லான் என்ற மூன்று வயது சிறுவனின் புகைப்படம் இணையத்தையே அதிரச்செய்தது உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறன் . அந்த குழந்தையை  பற்றி கேள்விப்படாதவர்களுக்காக கீழே புகைப்படத்தையும் இணைக்கிறேன் . (இந்த திரைப்படத்தில் அந்த புகைப்படத்தை  பார்த்த ஒருவர் திடீரென ஒரு முடிவை எடுக்கிறார் அதை பற்றித்தான்  இந்த திரைப்படம் உருவாகி இருக்கிறது  ). துயரமான சம்பவத்தை எதிர்கொண்ட மூன்று வயது அய்லான்க்கு  நிச்சயம் இப்படி ஒரு சம்பவம்  தனக்கு  நடக்கும் என தெரிந்திருக்காது . எப்படியாவது அங்கே சென்று விட வேண்டும் என பெரியவர்களுக்கு $3000 மும் , சிறியவர்களுக்கு $1800 உம் கட்டி உங்களை பாதுகாப்பாக படகு மூலம் அங்கே அழைத்து செல்கிறோம் என்கிறார்கள் கடத்தல் கும்பல் , அதாவது இங்கிருப்பவர்களை அங்கே கொண்டு செல்பவர்கள் பணத்தை வாங்கிக்கொள்கிறார்கள்   . 

Aalan


ஆனால் வாக்குறுதி அளித்தபடி அங்கு ஒன்றும் நியாயமாக  நடக்கவில்லை ,  படகுக்கு பதில் ஒரு ரப்பர் டிங்கி , அதுதான் அவர்களுக்கு  படகு , அதுபோக லைஃப் ஜாக்கெட் என்ற பெயரில் காலி பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்கள் நிரப்பட்ட எதற்கும் பலனில்லாத ஒன்று , குறிப்பிட்ட அளவு என இல்லாமல் பல மக்களை ஒரே ரப்பர் டிங்கியில் ஏற்றிக்கொண்டு  இதுதான் உங்கள் பாதுகாப்பு உபகரணம் என கூறி  பல மக்களை ஏற்றிக்கொண்டு நடு கடல் வரை வந்து அவர்களை அங்கேயே தத்தளிக்க விட்டு செல்கிறார்கள் . இவர்களை மீட்க எந்த ஒரு மீட்பு படையும் அங்கே இல்லை . தண்ணீரிலே தத்தளித்து இறுதியில் அதில் சிலர் மட்டுமே உயிரோடு எஞ்சுகின்றன , மீதம் கடலிலே இறந்து விடுகின்றனர் . அப்படி இறந்த ஒரு குழந்தை தான் அய்லான்  , அந்த புகைப்படத்தை பார்த்த பிறகு இவருக்கு பெரும் வருத்தத்தை தருகிறது . 


நீரில் மூழ்கி இறக்கும் மக்களை கண்டு , அவர்களுக்கு நிச்சயம் நம்முடைய உதவி தேவைப்படும் என ஆஸ்கர் என்பவர் ஸ்பெயின் லிருந்து  தீடீரென  கிளம்பி கிரீஸ் லெஸ்போஸ் ற்கு வருகிறார் , தன்னுடைய சொந்த முயற்சியில் தன்னார்வலராக முன்னிறங்கி மக்களை காப்பாற்ற நினைக்கிறார் , ஆனால் இந்த நாட்டு அரசாங்கம் மற்றும் காவல் துறையில் இருப்பவர்களால் சில முறை அவரை கைது  செய்தும் சிறையிலும் அடைக்கப்படுகிறார் . "மக்கள் நீரில் மூழ்கி இறக்கும் சம்பவம் "   எங்களுக்கு ஒன்றும் புதல்ல என்கிறார்கள் , ஒருகட்டத்தில் அவரை வெளியே விடுகிறார்கள் . ஏற்கனவே பல உயிர்களை இழந்து விட்டோம் இனிமேல் அப்படி இழக்க விடக்கூடாது என அவர் முழு மூச்சில் தன்னுடய சக குழுவோடு இந்த மக்களை மீட்க மீண்டும்  இறங்குகிறார் . நம்ப முடியாத ஒரு அதிர்ச்சிகரமான காட்சி ஒன்று இருக்கும் , அதாவது கிட்ட தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதி கடலில் தத்தளித்துக்கொண்டு இருப்பார்கள் . இவர்கள் வெறும் மூன்று பேர் ஒரே ஒரு ரப்பர் படகு . 



பெரும்பாலான நாடுகளில் ஆள்கடத்தல்கள் ஒரு முக்கிய குற்றம் இங்கே அகதிகளாக வருபவர்களுக்கு சாமானியன் ஒருவன் தானாக முன்வந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்வது குற்றமாக பார்க்க படுகிறது . அவர்கள் இலீகளாக இங்கே குடியேறியவர்கள் நீங்கள் உங்கள் வாகனத்தில் ஏற்றுவது சட்டப்படி குற்றம் , இது ஆள்கடத்தல் கீழ் உங்கள் மேல் வழக்கு தொடுக்கப்படும் என பல பிரச்னைகள் அவர் மேல் எழுகிறது . இருந்தும் அவர் இதனை கை விடவில்லை . தொடர்ந்து தன்னுடைய முயற்சியால் பலமக்களை அவர் காப்பாற்றுகிறார் . 




தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டு இருக்கும் மக்களை காப்பற்ற இவர் எடுக்கும்  முயற்சி இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இந்த திரைப்படம். . படத்தின் முடிவில் உண்மையான ஆள்களின் புகைப்படங்கள் இடம்பெறும் . உங்களின் இதயத்தை கணக்க செய்யலாம் . திரைப்படத்தை நான் பெஸ்டிவல் ஸ்கோப் தளத்தில் ஆன்லைன் திரைப்படவிழாவில் பார்த்தேன் . ஒருவேளை எதாவது OTT யில் வந்தால் நிச்சயம் தெரியப்படுத்துகிறேன் . 


Aylan Baby 2022 என ஒரு திரைப்படமும் உருவாக்கிக்கொண்டு இருக்கிறது அதன் ட்ரைலர் இணைப்பு இங்கே , 




பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது , ஸ்பெயின் சார்பாக 94 வது ஆஸ்காருக்கு அனுப்ப மூன்று திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டன , அதில் Penélope Cruz நடித்த Parallel Mothers (2021) மற்றும் அவருடைய கணவர் நடிப்பில் வெளியான The Good Boss (2021) படமும் தேர்வாகி இருந்தது . அதனால் இந்தப்படம் அனுப்பவில்லை , முடிவில் The Good Boss அனுப்பப்பட்டு 15 ஷர்ட்டலிஸ்ட் பட்டியலிலும் இடம்பெற்றது .  


நன்றி 

Post a Comment

أحدث أقدم