நிறைய ஆக்சன் பாண்டஸி திரைப்படங்களை பார்த்தவர் இயக்குனர் என நினைக்கிறன் இதற்கு முன்பு அவர் இயக்கிய நான்கு படங்களும் அந்த வகையை சேர்ந்தவை தான் . இந்த படம் பக்கா கமர்சியல் பார்முலாவில் உருவாக்கப்பட்ட ஒரு Entertainment Action த்ரில்லர் படம் . சும்மா முதல் பத்து நிமிடங்களை நெருப்பாய் தெறிக்க விட்டு இருக்கிறார்கள் . நம்ப ஊர் புகழ் சாகச ஹீரோவிற்கு இதுபோல படம் பண்ணினால் தீயாய் இருக்கும் ஆனால் சமீபத்தில் அவர் பண்ணிய ஒரு சாகசப் படத்தை நம் ஆட்கள் தவிர்த்து விட்டார்கள் . ஆகையால் இந்த சீன படத்தை வேண்டுவோர் பார்த்துக்கொள்ளலாம் ஒருமுறை ஆங்காங்கே ஆக்சன் அதகளம் செய்திருக்கிறார்கள் .
ஆள் கடத்தல் மற்றும் போதை மருந்து விற்பனை செய்ததால் டான் ஒருவனுக்கு நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது , பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படும் அந்த நீதிமன்றத்தில் திடீர்ன்னு ஒரு சம்பவம் நடந்தேற இருக்கிறது . ஆமாம் இங்கே குற்றவாளி கூட்டினில் இருக்கும் ஒருவனை மீட்க உள்ளே வந்திருக்கும் சிலர் , அவர்களுக்கு தலைமை தாங்கும் ஒரு டாப் Handsome Hunk ரௌடி . இந்த ரௌடி கும்பல் இந்த டானை மீட்டு வர மகனால் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது , மகன் மற்றும் அப்பனின் தொழிலே பெண்களை கடத்தி டார்க் வெப் ல் விற்பது தான் , அவன் தன் தந்தைக்காக வெளியே காரில் காத்துகொண்டு இருக்கிறான் , காவல் துறை ஸ்பெஷல் ஏஜென்ட் ஆக இருக்கும் நாயகனுக்கு உள்ளே எதோ ஒரு பிரச்னை நீதிமன்றத்தில் நடக்க போவதாக தெரிகிறது. ஆனால் எல்லாம் வழக்கம் போல தான் நடக்கிறது என அசால்ட்டாக வெளியே இருந்து விடுகிறார் . போகிற போக்கில் கலவர பூமியாக நீதிமன்றம் மாறுகிறது .
அங்கே இருக்கும் ரவுடி கும்பலுக்கும் போலீசுக்கும் நடக்கும் பத்து நிமிட சண்டை . துப்பாக்கி குண்டுகள் தெறிக்க அலறவிட்டு இருக்கிறார்கள் . பிறகு நடக்கும் சண்டையில் எதிர்பாராத விதமாக அந்த தலைமை ரவுடிக்கும் இந்த ஹீரோவிற்கு நடக்கும் போட்டியில் வெடி குண்டு வெடிக்க ஹீரோவின் கண்கள் பார்வை பறிபோகின்றன , ரவுடி அங்கேயே சுட்டுக்கொள்ள படுகிறார் . இதனை காணும் அந்த டாப் ரவுடியின் காதலி இனி நீ விடப்போகும் ஒவ்வொரு மூச்சும் உனக்கு கிடைத்த பரிசு தான் . எப்படியும் உன்னை பழிவாங்குவேன் என சொல்கிறார் , உடனே பின்னணி இசை பறக்க டைட்டிலை போடுகிறார்கள் .
அந்த பார்வை பறிபோன ஹீரோவிற்கு பள்ளிக்கு செல்லும் ஒரு மகளும் உண்டு . தன் மகளுக்கு எப்போது வேண்டுமானாலும் பிரச்னை வரலாம் என்ற சூழல் , அவர் தன் மகளின் மேல் உயிரையே வைத்துள்ளார் . இப்படி இருக்கையில் மகளின் பள்ளி சார்பாக நடத்தப்படும் நிகழ்ச்சி ஒன்றில் பங்குகொள்ள செல்லும் இவரின் மகள் சிலரால் கடத்தப்பட , கண் பார்வை இல்லாமல் தன்னுடைய மகளை இந்த ஆள் கடத்தல் கும்பல் மற்றும் அந்த பெண்ணிடம் இருந்து எப்படி அவர் காப்பாற்றினார் என்பதுதான் இந்தப்படம் .
கண் பார்வை இல்லாத நாயகன் , நாயகி , மேலும் கொலையை துப்பறியும் படம் , சைக்கோ கில்லரை தேடி , பிறகு கண் தெரியாதவன் சண்டை செய்யும் படம் , என சில படங்களை ஏற்கனவே பார்த்துள்ளேன் , ஆகாயல் எனக்கு இந்தப்படம் கதையை பொறுத்தவரை ஒரு சுமாரான அனுபவம் தான் , சும்மா டைம்பாஸுக்கு பார்த்தல் Action திரைக்கதையும் பின்ணணி இசையும் பிடிக்கும் ஸ்லொவ் மோஷனில் Action க்கு ஒரு கேமரா டெக்னலாஜியை சமீபத்தில் சில படங்களில் பார்க்க முடிந்தது , தி போல இதுலயும் உள்ளன .
இந்த கான்செப்ட் ல் வழக்கம் போல கெட்டிக்காரர்களான கொரியா சினிமா தான் , Blind , Always , போன்ற படங்களை பார்தவர்களுக்கு புரியும் .. பிறகு தமிழில் கூட குக்கூ அழகான படம் . பிறகு சைக்கோ , தாண்டவம் தமிழ் Blind நயன்தாரா நடிப்பில் வந்தது , மற்றம் தெலுங்கில் கார மசாலாவை கண்ணில் தூவி எடுத்த ராஜா தி கிரேட் , மலையாளத்தில் மோகன் லால் மாஸ் காட்டிய (ஒ)ப்பம் ஹிந்தியில் Andhadhun மற்றும் கபில் படங்களை சொல்லலாம் . மற்றபடி Don't Breath , Zatoichi , Blind detective கொஞ்சம் சுவாரசியமாய் இருக்கும் .
உண்மையை சொல்லப்போனால் இந்தப்படத்தில் நான் பார்த்த சில காட்சிகள் ஏற்கனவே தமிழில் மற்றும் ஹிந்தியில் பார்த்தது போன்ற ஒரு உணர்வு ஆகையால் தமிழ் சினிமா டைப்பில் ஒரு சைனா படம் என்றே சொல்கிறேன் . இந்தப்படம் மே 1 ல் சைனாவில் வெளியாகி இருக்கிறது , தமிழில் விக்ரம் ,டாக்டர் , பீஸ்ட் , வலிமை , மார்தானி , வேதாளம் இன்னும் சொல்லலாம் . இதுபோன்ற படங்களில் பார்த்த காட்சிகள் இங்கேயும் உண்டு . இந்த படத்தை பற்றி மேலே நான் சொன்னது வெறும் முதல் 20 நிமிட ஆரம்பம் தான் மீதியை நீங்கள் வேண்டுமானால் மட்டுமே தேடி பார்த்துக்கொள்ளுங்கள் . தற்போதைக்கு இந்தியாவில் Streaming ஆகவில்லை , இணையத்தில் தேடி பார்க்கலாம் . OTT யில் வந்தால் சொல்கிறேன் .
நன்றி ...
إرسال تعليق