The Children (2008, UK) - Film Intro By Tamil | குழந்தைகளுக்கு பரவும் கொடூர வைரஸ்

ஏற்கனவே  குழந்தைகள் கொலை செய்வார்களா ?  என ஆச்சர்யமாக Case 39 என்ற  படத்தை பற்றி பதிவு செய்திருந்தேன் , அதில் குழந்தை நேரிடையாகவும் மறைமுகமாகவும் , பாதிக்கப்பட்ட ஒரு அனுமானுஷ்ய நிகழ்வால்  பின்னப்பட்ட கதையை கொண்டிருக்கும் . ஆனால் இங்கே ஒரு வைரஸ் பரவுகிறது அதுவும் குழந்தைகளை டார்கெட் செய்து பரவுகிறது அவர்களின் மூளையை குழப்பி கொலை செய்ய தூண்டுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா ?  கண்ணனுக்கு தெரியாத ஒரு விஷயம் நம்மை ஆட்டிப்படைத்தால் எப்படி இருக்கும் . The Happening என்றொரு படமிருக்கிறது அதில் தீடீர் தீடீர் என மக்கள் கீழே விழுந்து இருப்பார்கள் . BirdBox படத்தில் கண்ணில் பார்த்தல் போதும் உடனே இறப்பார்கள் . 



"You brought them into this world. Now ... They will take you out." 


Covid Lock down சமயத்தில் இந்த வைரஸ் சம்மந்தப்பட்ட சில படங்களை பார்க்க ஆரம்பித்தேன் . அதே சமயத்தில் இணையத்தில் தேடும் பொழுது எனக்கு கிடைத்த படம்தான் இது . ஒரு சில பரபரப்பான காட்சிகளை தவிர மற்றபடி ஒன்றும் இல்லை .  ஆயிரம் இருந்தாலும் அதெப்படிங்க குழந்தைகளை கொலை செய்ய தூண்டவும் எப்படி யோசித்திருப்பார்கள்  ? என உங்களின் கேள்விகள் புரிகிறது . சினிமாவில் இப்படியும் சில தீவிரமான Genre Horror Subgenre படங்கள் உண்டு , ஆகாயல் விருப்பம் உள்ளோர் ஹாரர் பிரியர்கள் மட்டுமே பார்த்தல் நலம் . 

ஒரு சில திரைப்படங்களை சுவாரஸ்யத்தை கூட்டுவதற்காக இறுதியில் இந்த சீரியல் கொலைகள் , அல்லது பொழுதை கழிக்க வரும் தம்பதிகளை கொன்றது சிறுவர் , சிறுமிகள் தான் என முடிப்பார்கள் . அப்படிப்பட்ட படங்களில் இறுதியில் ஒரு ட்விஸ்ட் ஆகத்தான் நமக்கு தெரியப்படுத்துவார்கள் ,, ஆனால் இங்கே ட்ரைலரிலே உங்களால் ஒருசில காட்சிகளை விளங்கி கொள்ள முடியும் . அதாவது யார் கொலை செய்கிறார்கள் என்பதை . 


வருட இறுதி, தன்னோட விடுமுறை நாள்ல கிறித்துமஸ்சையும் ,மற்றும்  நியூ இயர்யும் மகிழ்ச்சியா கொண்டாட சகோதரியின் வீட்டிற்கு குடும்பத்தோடு செல்கின்றனர் ஒரு குடும்பம்  . அங்கே நிகழும் சில அசம்பாவிதங்கள் அதை தொடர்ந்து நடக்கும் சில கொடுரக் கொலைகள் நடக்க ஆரம்பிக்கிறது . அந்த கொலைகளை யார் செய்தார்கள், யார் செய்ய தோன்றுகிறார்கள் என பல மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் கதைக்களமாக இல்லாமல் , சாதாரண ஹாரர் த்ரில்லர் அனுபவத்தை தரும் . .  முடிவு என்ன என்பதே இந்த திரைப்படம் . கிளைமேக்ஸ் பிறகான காட்சி உங்களுக்கு அதிர்ச்சி தரலாம் . 


படத்துல ஒரு முக்கியமான கதாபாத்திரம் சீன மருந்துகள் குறித்து பேச ஆரம்பிக்கிறார் . வருசத்துக்கு 50+ புது வைரஸ் உருவாகிட்டு இருக்கு . இத பத்தி பேசிட்டு இருக்கும் போதே சில விபரீதங்கள் நடக்க ஆரம்பிக்குது . ஆமா அது ஒரு வைரஸ் , அதுவும் குழந்தைகளுக்கு மட்டுமே பரவும் வைரஸ் . அது அவங்களை கொடூரமான நிலைக்கு தள்ளும் . கொலை செய்ய வைக்கும் . சுத்தி இருக்க மக்களுக்கு இப்படி ஒரு வைரஸ் கிளம்புனா அம்புட்டும் க்ளோஸ். இப்படி பட்ட வைரஸ் என்னல்லாம் செஞ்சது னு பாருங்க . 



ஹாரர் என்ற திரைப்பட வகையில் பல Sub Genre திரைப்படங்கள் வந்துவிட்டன . அதிலும் சைக்கோக்கள் கொலை செய்வது போன்ற படங்கள் ஏராளம் . இங்கே குழந்தைகள் சைக்கோவானால் அதுவும் ஒரு வைரஸ் மூலம் என்பது தான் ஒரு வித்யாசம் . அதிலும் எப்படி காட்சிகளை படமாக்கி இருப்பார்கள் ன்னு யோசிக்க வச்சது , . Them , Eden lake போன்ற படங்களை பார்த்தவர்களா ? உங்களுக்கான படம்தான் இது , மற்றவர்கள் ட்ரைலர் பார்த்து பார்க்கலாமா? வேண்டாமா என்பதனை உறுதி படுத்தி கொள்ளுங்கள் . மனதளவில் பாதிப்பை தரும் சிலருக்கு அவர்கள் தவிர்க்கலாம் .


இந்த திரைப்படத்தை இந்தியாவில் எந்த OTT யிலும் காண முடியாது தற்போது . இதனை VPN பயன்படுத்தி அமெரிக்கா Itunes , Youtube ல் rental எடுக்கலாம். இல்லையேல் TUBI US , மற்றும் VUDU US ல் காணலாம் .  


நன்றி 

Post a Comment

أحدث أقدم