Broker (2022, South Korea) - Film Intro By Tamil | தேவாலய பெட்டியில் கைவிடப்பட்ட குழந்தை

சமீபத்தில் ஆசிய திரைப்படங்களான கொரியா மற்றும் ஜப்பான் நாட்டிலிருந்து வெளிவரும் திரைப்படங்கள் உலக திரைப்பட விழா மேடைகளில் உயரிய  விருதுகளை வாங்கி குவிக்கின்றனர் . ஒரு சிறிய விஷயத்தை எடுத்துக்கொண்டு அதனை தொடர்ந்து எழுதப்படும் கதைகளுக்கு பலத்த வரவேற்பு சினிமாக்களில்  உண்டு , அதிலும்  Kore-eda வின்  குடும்பங்களை இணைப்பது எது ? வறுமை மற்றும் குடும்ப திருட்டுகளை மையப்படுத்தி 2018 ஆம் ஆண்டு வந்த படம் பலரின் கவனத்தை ஈர்த்தது . அதற்கு முன்பே சில சிறந்த படங்களை இயக்கியுள்ளார் .  அந்தாண்டு பல விருதுகளை வாங்கியும் பல்வேறு திரைப்பட விழாக்களில் நாமினேஷன் ஆகியும் இருந்தது . 

Broker(2022) MoviesMuseum.com



உலக சினிமா பிரியர்களின் ரசனைக்கு தீனி போடும் வகையில் இவரது  இயக்கம் கூடிக்கொண்டே வருகிறது . கொரியா , ஜப்பான் நாட்டு சினிமாக்கள்  உலக அரங்கில் பல பாராட்டுகளை வாங்கி குவிப்பது சமீபத்தில் நிறையவே காண முடிகிறது .   இது இன்று நேற்று உருவான கதையல்ல , ஆரம்பத்தில் இருந்தே ஆசியா திரைப்படங்கள் தனிப்பட்ட வகையில் ஒருவித உன்னதமான பிணைப்புடன் இருக்கும் . 2019 ஆம் ஆண்டு பல விருதுகளை வாங்கிக்குவித்த Parasite கொரியத் திரைப்படம் , போன வருடம் ஜப்பான் நாட்டு படமான Drive My Car இந்த முறை அந்தளரவிற்கு இல்லாவிட்டாலும் கவனிக்கத்தக்க வகையில் இரண்டு கொரியப்படங்களை வெளியிட்டு இருக்கிறது  . இரண்டுமே ஒரே நிறுவனத்தில் இருந்து வெளிவந்தவை . இந்த வருட கான்ஸ் திரைப்பட விழாவில் அந்த இரண்டும் சிறந்த திரைப்படத்திற்கான போட்டியில் பங்குகொண்டன .  என இவர்களின் சினிமா பட்டியல்கள் கூடிக்கொண்டே போகின்றன . 

Broker  (2022) My View திரைப்பட பார்வை : 

பார்க்க சிறு வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் தனது கைக்குழந்தை  மகனை பூஷன் நகரில்  உள்ள தேவாலயம் ஒன்றில் வெளியே விட்டு செல்கிறாள் . அந்த குழந்தை மேல் ஒரு பேப்பரில் நான் உன்னை வந்து கூட்டிச்செல்கிறேன் என எழுதிவிட்டு செல்கிறாள் .  பெற்றோர்களே தான் பெற்ற குழந்தைகளை கைவிடும் சூழலில் அந்த குழந்தைகளுக்கு ஆதரவு கொடுக்கும் நோக்கில் அவர்களை  எடுத்து, பாதுகாத்து அடைக்களம் கொடுக்க "குழந்தை பெட்டி" கொண்ட தேவாலயம் ஒன்று அந்தப்பகுதியில்  இருக்கிறது . அதில் பகுதி நேர பணி செய்யும் நாயகன் அவருடைய நண்பர் என இருவரும்  குழந்தை தரகர்கள்  ஆவார் , அந்த  தேவாலய விதிப்படி அங்கே கைவிடப்பட்ட குழந்தையின் மீது எத்தனை குறிப்புக்கள் இருந்தாலும் . பெற்றோர்கள் மீண்டும் வாங்கிக்கொண்டு செல்வதில் சில சிரமங்கள் இருக்கிறது . அந்த குழந்தைக்கு அடைக்களம் கொடுத்து அவர்களை வளர்த்து தேவையான சமயத்தில் வேண்டுவோருக்கு அந்த ஆலையம் மூலமாகவே தத்துக் கொடுக்கப்படும் . ஆனால் கடந்த நாற்பது வாரங்களில் ஒரே ஒரு குழந்தை தான் தத்துக்கொடுக்க பட்டு இருக்கிறது . முதல் நாள் பெட்டியில் போட்ட குழந்தையை இரண்டாம் நாள் காண வரும் தாய்க்கு ஒரு அதிர்ச்சி . 


இந்த குழந்தை அங்கு கைவிடப்பட்டதற்கான எந்த சாட்சியமும் அடுத்த நாள் அங்கே இல்லை , கேமராவில் எதுவும் பதிவாகவில்லை . நகரத்தில் ஒரு கொலை குற்றம் நடந்திருப்பதாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது .  குழந்தை எங்கே யாரிடம் இருக்கிறது, கொலைக்கும் இதற்கும் சம்மந்தம் உண்டா ??  என ஒரு பரபரப்பான த்ரில்லரை உருவாக்கி இருக்கலாம் , ஆனால் இயக்குனரின் திறமை இதில் தான் உள்ளது , இதனை எப்படி ஒரு குடும்ப ட்ராமாவாகவும் அதே நேரத்தில் பீல் குட் பயணம் போன்ற நிகழ்வையும் ஏற்படுத்த முடியும் ? இவர் அதனை நடத்திக்காட்டி இருக்கிறார் . 

ஆம் குழந்தையை தரகர்கள் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் . இதனை அறிவித்து தாயையும் தன்னுடன் அழைத்து செல்கிறார்கள் .  குழந்தையை பெற்ற , குழந்தை பெட்டியில் விட்டு சென்ற தாய் மற்றும் இரு தரகர்களும் குழந்தையை தத்துக்கொடுக்க விருப்பமுள்ள குடும்பத்தை நோக்கி பயணம் செய்கிறார்கள் . இவர்களை பின் தொடர்ந்து இரு  விசாரணை காவல் அதிகாரிகளும்  வருகிறார் . இறுதி என்ன என்பதே இந்தப்படம் .   வழக்கம் போல இல்லாமல் இவரின் மென்மையான திரைப்பட வடிவாக்கத்துடன் ஒரு சிறிய சஸ்பென்ஸ் ஒன்றும் படத்தில் உள்ளது கூடுதல் சிறப்பு . 

பல் வேறு நாடுகளில் கருக்கலைப்பு செய்வதும் குற்றம் , குழந்தைகளை இப்படி ஆதவற்று விட்டு செல்வதும் குற்றம் தான் . இப்படி அவர்களை தூக்கி எறிவதற்கு பதிலாக நான் கருவிலே கூட அழித்து இருக்கலாம் என அவள் சொல்லும் காட்சிகளெல்லாம் சொல்லில் அடக்க முடியாதவை , இடையில் குழந்தையை விற்று கொடுக்கும் தரகர் ஒருவருக்கும் அந்த பெண்ணிற்கும் நடக்கும் பேச்சு கவனிக்கத்தக்கது . குழந்தைகளை எறிந்துவிட்டு செல்லும் இந்த உலகத்தில் அதனை விற்பவர்களும் இருக்கிறார்கள் . அதனால் இதனை யாரும் நியப்படுத்த முடியாது என்பதே அந்த பேச்சு . 

முடிவாக :

இந்த திரைப்படம் எல்லா தரப்பட்ட சினிமா பிரியர்களுக்கு பிடித்து விடும் என சொல்ல முடியாது . அவரின் ரசிகர்கள் கூட சிலர் Letterboxd இதர தளங்களில் குறைந்த சரசியான மதிப்பீட்டை வழங்கி யுள்ளார்கள் . என்னை பொறுத்தமட்டில் தனிப்பட்ட விருப்ப அடிப்படியில் 3.5 / 5 Letterboxd யில் கொடுத்துள்ளேன் . எனக்கு இதுபோன்ற ட்ராவல் சம்மந்தப்பட்ட கதைகளில் தொடர்பு படுத்தப்பட்டு வரும் படங்கள் பிடிக்கும் . 



படம் Family Drama என்பதால் தாராளமாக குடும்பத்தோடு பார்க்கலாம் . 


இயக்குனரை பற்றி

உலக சினிமா பிரியர்களுக்கு மிகவும் பழக்கமான ஒரு இயக்குனர் தான் இவர் . இவரின் முந்தைய திரைப்படம் பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்டது . தற்போது கொரியன் மொழியில் முதல் படத்தை எடுத்துவிட்டார் . ஜப்பான் திரைப்பட புகழ் இயக்குனரான இவர் சில அழகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார் , இவரின் மற்ற திரைப்படங்களோடு ப்ரோக்கர் திரைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தால் அதே மெய்க்கவரும் வண்ணம் உணர்வுகளின் பிரதிபலிப்பதை காண முடியும்  , ஆனால் அவ்வளவு சிறப்பொன்றும் இல்லை தான் . ப்ரோக்கர் என்ற இந்த படம் அவர் இயக்கத்தில் வந்துள்ள 20 வது படம் . 2018 ஆம் ஆண்டு கான்ஸ் திரைப்படவிழா விழாவின் உயரிய விருதான அந்த விருதை இவருடைய Shoplifters திரைப்படம் வென்றது . அதற்கு பிறகு இந்த படம் நாமினேஷன் வரை வந்துள்ளது . கடந்த மாதம் முதல் வாரத்தில் கொரியாவில் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது . சமகாலத்தில் உள்ள தலைசிறந்த இயக்குனர்கள் என்றொரு பட்டியல் உருவாக்கப்பட்டால் நிச்சயம் அதில் இவருக்கு ஒரு இடமிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை . 

விருதுகள் :

இந்த திரைப்படம் கான்ஸ் திரைப்பட விழாவில் பங்குகொண்டு சிறந்த நடிகருக்கான விருதை Song Kang-ho வென்றுள்ளார் , மற்றும் உயரிய விருதான பால்'ம் டி ஓர் விருதுக்கு நாமினேஷன் பரிந்துரையில் வந்துள்ளது . இதுபோக ஒன்றிரண்டு திரைப்பட விழாவில் மட்டுமே தற்போது பங்குகொண்டுள்ளது வருகின்ற திரைப்படவிழாக்களில் இன்னும் சில விருதுகளை வெல்வதற்ககான வாய்ப்புள்ளது . 

திரைப்பட தகவல்கள் Movie Details  :






Trailer :




எங்கே காணலாம் Where to watch :

தற்போதைக்கு இந்த திரைப்படம் திரைப்படவிழாக்களில் காணக்கிடைக்கிறது . ஆகையால் வருகின்ற திரைப்பட விழாவில் காத்திருந்து பார்க்கலாம் . மற்றும்  Streamings ல் வந்தால் தெரியப்படுத்துகிறேன் . நன்றி !

Post a Comment

أحدث أقدم