![]() |
Curve (2016) |
படத்தின் ஒளிப்பதிவும் எடிட்டிங் மிக துல்லியமாக காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது , இதற்கான மெனக்கெடல்களும் உழைப்பும் பார்க்கும் போதே புரியும், நிச்சயம் அவர்கள் ஒதுக்கும் தொகை அதிகமாகத்தான் இருக்கும் , ஆனால் நானும் பள்ளிக்கூடம் போகிறேன் என நம் நண்பர்கள் குறும்பட துறையில் ஏன் இன்னும் புதிதாக ஒன்றை செய்யாமல் தவிர்க்கிறார்கள் என யோசிக்கிறேன் . ஏற்கனவே பார்த்த ஒன்றை மீள் எடுக்க , அவர்கள் இதுபோல சில படு சுவாரசியமான Genre களில் ஒன்றை தேர்வுசெய்து உருவாக்கிடலாம் . சரி சினிமா என்பது அவரவர் குழந்தை அவரர் விருப்பம் . நாயகியின் நடிப்பு அருமை , லாரா ஜேன் டர்னர் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் , சில குறும்படங்கள் மட்டுமே நடித்த நாயகி நமக்கும் அங்கே சிக்கிகொண்டுள்ள ஒரு பரபரப்பை தந்துவிடுகிறார் . The Walk என்ற படத்தின் உயர்ந்த இரு பில்டிங் நடுவில் கயிறு கட்டி நடக்கும் படம் ஒருவரை பற்றிய படம் அதை பார்த்தபோது கையெல்லாம் படபடத்து வியர்வை வருமளவிற்கு இருந்தது , அதே போலொரு Lite உணர்வை இந்த குறும்படமும் தந்தது .
My View குறும்பட பார்வை :
ஒரே இடத்தில் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து ஒரு திகில் திரைப்பட அனுபவத்தை தரக்கூடிய பல உலக சினிமாக்களை ஏற்கனவே பார்த்து இருப்பீர்கள் . அதிலும் குறிப்பிட்ட ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டு அதிலிருந்து தப்பிப்பது தொடர்பான படங்கள் ஏராளம் . இதில் பலரின் Fav இன்று வரை இருக்கும் படம் Buried என நம்புகிறேன் . ஆக நான் பார்த்த எத்தனை எத்தனையோ Survival கான்செப்ட் படங்கள் தற்போது பார்க்கையில் எனக்கு எந்த ஒரு வித புது அனுபவத்தை தராது , சொல்லப்போனால் ஏற்க்கனவே இதே போல ஒரு படத்தை பார்த்துள்ளேன் என்பது மட்டும் நினைவில் இருக்கும் . ஆனால் நான் பார்த்த இந்த குறும்படம் எனக்கு முற்றிலும் புதிது . இந்த பெரியில் 2015 ஆம் ஆண்டு ஒரு ஹாலிவுட் படமும் வந்துள்ளது , அதுவும் ஒரு இன்டர்ஸ்டிங் ஆன படம்தான் , அது ஹாரர் த்ரில்லர் பிரியர்களுக்கு பிடிக்கும் மற்றவர்களுக்கு பிடிக்காது .
இந்தக் குறும்படம் தீடீரென பயமுறுத்தி அலற விடும் ஹாரர் குறும்படமில்லை , ஒரு மரண பள்ளத்தாக்கில் வழுக்கும் பாறைகளில் மீது சிக்கிக்கொண்டுள்ள ஒரு பெண்ணை சுற்றி எடுத்துள்ள ஓகே வான த்ரில்லர் குறும்படம் தான் , சாதாரணமாக மேலோமோடமாக ஒரு 10 நிமிட தான் , ஆனால் மறைந்துள்ள மர்மம் அவரர் நோக்கிற்க்கேற்ப எடுத்துக்கொள்ளலாம் . உதாரணத்திற்கு நகரத்திற்கான வழி , உண்மையை சொல்லப்போனால் இந்தக்குறும்படம் பேசக்கூடிய ஒரு மையக்கருவை பல விஷயங்களில் நாம் பொருந்திப் போகலாம் . பார்க்கும் போது உங்களுக்கு புரியும் .
பார்ப்பதற்கு பெரிய அணைக்கட்டு அல்லது தண்ணீர் தேக்கம் , அல்லது எதோ மர்ம கிணறு போல காட்சிதரும் இந்த பள்ளத்தாக்கு அனுபவம் 10 நிமிடங்கள் கடுமையான சூழலை எதிர்கொள்ள வேண்டிய அச்சம் , உயிர்பிழைக்க போராட்டம் , இந்த பதற்றத்திலும் நம்பிக்கை என அப்படியே நகரும்.
ஒரு குறும்படத்தினை அறிமுகம் செய்வதன் அவசியம் அதனை எவ்வளவு சுருக்கமாக சுவாரசியமாக அறிமுகம் செய்யமுடியுமோ அதனை செய்து , கட்டுரையை முடிந்தவரை குறுகிய வடிவில் இருக்க வைத்தல் மிக நல்லது என கருதுகிறேன் , ஒரு திரைப்படம் எடுக்கும் அளவிற்க்கு இதுபோன்ற கதைகளில் முன்கதை பின்கதைகளை புகுத்தி எடுத்திருக்க முடியும் , இருந்தாலும் இதனை குறும்படமாகவே வெளியிட்டு இருப்பது பாராட்டத்தக்கது . இதனை பற்றி என்னதான் நீட்டி முழக்கி சொன்னாலும் அங்கே இருப்பது வெறும் பத்து நிமிடம் தான் மீண்டும் சொல்கிறேன் . ஒரு சிறிய உணவு இடைவெளி கேப்பில் கூட இதனை நீங்கள் பார்த்துவிடலாம் . நிச்சயம் ஏமாற்றாது .
முடிவாக :
இந்த திரைப்படம் எல்லா தரப்பட்ட சினிமா பிரியர்களுக்கு பிடித்து விடும் என சொல்ல முடியாது . Letterboxd இதர தளங்களில் குறைந்த சரசியான மதிப்பீட்டை வழங்கி யுள்ளார்கள் . என்னை பொறுத்தமட்டில் தனிப்பட்ட விருப்ப அடிப்படியில் 3 / 5 Letterboxd யில் கொடுத்துள்ளேன் . எனக்கு இதுபோன்ற பரபரப்பான கதைகளில் வரும் படங்கள் பிடிக்கும் .
த்ரில்லர் , மர்மம் திகில் அனுபமுள்ள படம் தான் , தாராளமாக டிவியில் பார்க்கலாம் .
இயக்குனரை பற்றி :
டிம் ஏகன் ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் , இதற்குமு பின்பு 6 எபிசோட் கொண்ட கொண்ட ஒரு வெப் சீரீஸ் ஒன்றை உருவாக்கி இருக்கிறார் . இதுதான் முதல் குறும்படம் , தானே ஒளிப்பதிவு செய்து எடிட்டிங் உம் செய்து எழுதி இயக்கி இருப்பது கூடுதல் சிறப்பு , சில ஹாரர் படங்களுக்கு ஒளிப்பதிவாளராக முன்பே பணியாற்றி இருக்கிறார் .
விருதுகள் :
2016 ஆம் ஆண்டு வெளியான இந்தக்குறும்படம் Tribeca , Fantastic Fest , TIFF , IFFF மற்றும் IHorror என இன்னும் பல குறும்பட விழாக்களிகள் பங்குகொண்டு விருதுகளையும் வென்றுள்ளார் . மற்றும் சினிமா பிரியர்கள் பலரின் பாராட்டுகளையும் , லச்சக்கணக்கான பார்வைகளையும் பெற்றுள்ளது இந்தக் குறும்படம் . பிறகு ஷார்ட் ஆப் தி வீக் தளத்தில் கடந்த வருடம் பதிவேற்றபட்டு கூடுதல் பார்வையாளர்களை சென்றுள்ளது .
குறும்பட தகவல்கள் :
Trailer :
எங்கே காணலாம் , Where To Watch :
இந்த திரைப்படத்தினை தற்போது Vimeo மற்றும் Youtube தளங்களில் இலவசமாக காணலாம் . பார்த்துவிட்டு உங்களின் கருத்தை இங்கே பதிவு செய்யுங்கள் . நன்றி நான் இரவு தூங்குவதற்கு முன்பு எதார்த்தமாக Youtube ஐ நோண்டிக்கொண்டு இருக்கையில் தான் பார்த்தேன் . இப்படி ஒரு சம்பவத்தை கற்பனை செய்து பார்க்கவே ஒரு மாதிரி இருக்கிறது . இருண்ட கருப்பு பள்ளத்தாக்கு , நுனியில் பிடியில் ஒவ்வொரு அடியும் மரணத்திற்கான வழி என்றால் ஐயோ .
إرسال تعليق