நீச்சல் விளையாட்டில் இந்திய, உலக அளவில் வருவதற்கு முயற்சித்து கொண்டிருக்கும் கன்யா என்ற பதின் பருவ சிறுமி தனது முதல் மாதவிடாய் வரும் பொழுது அவரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்கள் தான் இந்த கதை . அபூர்வா சதீஷ் என்ற பெண் இயக்குனரின் பார்வையில் மற்றுமொரு குறும்படம் .
Kanya 2020 |
My View குறும்படப் பார்வை :
வயதிற்கு வந்துவிட்டாய் இனிமேல் நீ இப்படி இருக்க கூடாது , இப்படித்தான் இருக்க வேணும் அதுதான் வரைமுறை . இதையெல்லாம் செய்யக்கூடாது என முட்டுக்கட்டை போட்டு அதை ஒரு பெரிய விஷயமாக கருதி விழா எடுத்து ஊருக்கு தெரிவிப்பதன் நோக்கில் கன்யா என்ற சிறுமியின் பார்வையில் நகர்த்தப்பட்டிருக்கும் ஒரு குறும்படம் தான் இது . 2020 ல் பூசன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இருந்தது இந்த குறும்படம் .
நேற்றுவரை தெரு நண்பர்களோடு செவன் ஸ்டார் , கிரிக்கெட் விளையாடி வந்த பெண்ணை இன்று முதல் அதற்கெல்லாம் அனுமதி மறுக்கப்படுவது தொடர்ந்துகொண்டிருக்கும் ஒரு சம்பவம் தான் . பதினைந்து நிமிடத்திற்குள் ஓடும் இந்த குறும்படத்தை நேரமிருந்தால் அவசியம் ஒருமுறை பார்க்கலாம். ஒளிப்பதிவின் மெனெக்கெடல் பார்க்கையில் தெரிகிறது .
ஆண் பெண் என இருவரும் டிக் டாக் , ரீல்ஸ் முதற்கொண்டு இந்த மாதவிடாய் பிரச்னை குறித்து பல விதமான வீடியோ கிளிப் மற்றும் ஷார்ட் பிலிம் என நிறைய வந்தாகிவிட்டது , ஒரு சில ஆண்கள் செய்யும் கிரிஞ்சுக்கள் தவிர்த்தால் கடுமையான விஷயம் தான் அவர்கள் எதிர்கொள்வது , பத்தோடு பதினொன்றாக நின்று விடாமல் ஒளிப்பதிவிலும் படமாக்களிலும் தனித்துவமாக நின்று காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது . மேற்கொண்டு உலக சினிமா மேடைகளில் பல்வேறு ரசனை உள்ள மக்கள் மத்தியில் திரையிட்டு பாராட்டை பெறுவது கூடுதல் கவனம் .
இயக்குனரை பற்றி :
அபூர்வா சதீஷ் , தற்போதைய சமூக சூழல் நிகழ்வுகளை தன் திரைப்பட பாணியில் உருவாக்கி கொண்டிருக்கும் ஓர் அறிமுக பெண் இயக்குனர் . அவர் ஒன்றிரண்டு குறும்படங்களை இயக்கியுள்ளார் என சில தளங்களில் தகவல் உண்டு . எந்த ஒரு படைப்பும் காலப்போக்கில் அதன் நிலைப்பாட்டிலும் கட்டமைப்பிலும் சில மாறுதல்களை கொண்டே இருக்கும் அந்தவகையில் தான் பார்த்துணர்ந்த பார்த்துக்கொண்டிருக்கிற சில சம்பவங்களை படமாக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறார் , புகழ்பெற்ற அகாடெமியில் விருதுகளை வென்ற படைப்பாளர்களின் மூலம் சினிமா பயின்றவர் . மேலும் நல்ல நல்ல சினிமாக்களை மக்களுக்கும் உலக சினிமா மேடைக்கு கொண்டு செல்வார் . அவருக்கு வாழ்த்துக்கள் .
விருதுகள் :
இந்தக் குறும்படம் சில திரைப்பட விழாக்களில் பங்குகொண்டு , சில குறும்பட பிரிவுகளில் பரிந்துரைகளில் வந்துள்ளது . சிறந்த இயக்குனருக்கான விருதையும் வென்றுள்ளது . Raindance , Dharmasala , Jafna , இன்னும் பல பெருநகரங்களில் பங்குகொண்டுள்ளது . முக்கியமாக பூசன் திரைப்பட விழாவிலும் பங்குகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது .
குறும்பட தகவல்கள் Details :
இந்த குறும்படத்தின் போஸ்டர் கவனம் ஈர்க்கும் வண்ணம் உள்ளது , ஒரு சிகப்பு வட்டத்தில் நான்கு பிரிவுகளாக ஒரே முகம் .
Kanya 2020 ‘கன்யா’ Directed by Apoorva Satish
முடிவாக :
இதுபோன்ற விஷயங்களில் எனக்கு சரியான புரிதல் இல்லை , எனக்கு அதனை புரியப்படுத்த ஒருவர் வாழ்வில் நிச்சயம் வருவார் . அதனால் அது குறித்து எனோ தானோ என நான் இப்போ பேசுவதும் உளறிக்கொட்டுவதும் சரியாக இருக்காது , ஆண்கள் குறித்த பிரச்சனையை எப்படி ஒரு ஆண் மூலம் தெரிந்துகொள்வது சரியாக இருக்குமோ அதே போலத்தான் பெண்கள் குறித்த பிரச்சனையும் . உண்மையில் நான் எதையவது ஆன்லைன் படித்து இங்கே எழுதினாலும் தெளிவான பார்வையாக இருக்காது . ஒவ்வொருவருக்கும் ஒரு நிலைப்பாடு , கருத்துக்கள் இருக்கும் . என் குடும்ப சொந்தங்ககளில் நான் பார்த்தவற்றில் கூட எனக்கு கடுப்பு இருந்துள்ளது . பெரியவர்கள் வகுத்து வைத்த பார்முலாக்கள் பெரும்பாலானவற்றில் எனக்கும் உடன்பாடு இருந்ததில்லை . இதனை முடித்துக்கொள்கிறேன் . சிறுமியாக நடித்தவர் அழகாக இருக்கிறார் . ஒளிப்பதிவு பேரழகு . நல்ல குறும்படம் . நன்றி
Trailer :
எங்கே காணலாம் :
மன்னிக்கனும் இந்த குறும்படம் இப்பபோதைக்கு எங்கையும் இல்லை . மக்கள் பார்வைக்கு வரும்பொழுது நிச்சயம் தெரியப்படுத்துகிறேன்
إرسال تعليق