வெறும் ரத்தக்களரியான சைக்கோ சீரியல் கில்லர் படங்கள் என வந்துகொண்டிருந்த கொரியாவில் மர்மம் நிறைந்த குறிப்பாக அறிவியல் புனைவு கொண்ட ஒரு திகில் , ஆக்சன் திரைப்படம் வருகிறது என்றால் அதன் மீதான கவனிப்பு கூடுமல்லவா ? அப்படிதான் இதன் முதல் பாகம் கொடுத்த கொடுத்த அந்த ஈர்ப்பு இரண்டாம் பாகத்திற்கான காத்திருப்பு . நான்கு வருட இடைவெளியில் வந்திருக்கும் இந்த இரண்டாம் பாகத்திற்கும் முதல் படத்திற்கும் தொடர்புண்டு .
இந்த திரைப்படத்தின் முதல் பாகத்தை பார்த்தவர்களுக்கு இது என்னமாதிரியான படம் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும் , ஒருவேளை நீங்கள் பார்க்கவில்லை என்றால் படம் எதை பற்றி பேசுகிறது என்பது தெரிய வாய்ப்பில்லை . ஆங்கில திரைப்படங்களுக்கு பிறகு நான் அதிகமாக விரும்பி பார்ப்பவை என்றால் அது சவுத் கொரியர்களின் திரைப்படங்களை தான் , அவர்களின் திரைப்படங்களாட்டும் இல்லை சீரீஸ்களாகட்டும் பலதரப்பட்ட ரசிகர்கள் இந்தியாவில் உண்டு .
2000 திற்கு மேல் வெளிவந்த பல கொரியப்படங்களை பார்த்துள்ளேன் . இதன் முதல் பாகத்தை பற்றி ஒன்றுமே தெரியாமல் ஒரு ஆக்சன் அதகளமான படம் என நண்பர் பரிந்துரைப்பின் பேரில் தான் அப்போது பார்த்தேன் . படம் தொடங்கி 1 மணி நேரம் ஆச்சு பெருசா ஒண்ணுமில்லை ன்னு கிடப்பில் போட்டு பலநாள் கழித்து தான் அந்த மீதியை பார்த்தேன் . ஆனால் நான் எந்த காட்சியில் விட்டேனோ அங்கிருந்து தான் ஆக்சன் துவங்கும் . கடைசி கிளைமேக்ஸ் காட்சிகளில் ஆக்சன் கலக்கல் தான் .
My View திரைப்பட பார்வை :
பொதுவாகவே புவியீர்ப்பு விசைக்கு எதிராக ஒன்று நடக்கிறது என்றால் அது சூப்பர் ஹீரோ படமாக இருந்தால் பொறுத்துக்கொள்ளலாம் . இல்லை பாலைய்யா ஒரு மாட்டு வண்டி அல்லது தேர் "சக்கரத்தை" எடுத்து ஒத்தக்கையில் சுழட்டி ஆட்களை பந்தாடுவது போல இருந்தாலும் பார்ப்பேன் என்றால் உங்களுக்கு பிரச்னை இல்லை . ஏனென்றால் சூப்பர் ஹீரோக்கள் என தெரிந்துவிட்டாலே போதும் கண் கட்டி வித்தை போல தான் காட்சிகள் இருக்கும் . அந்தவகையில் முதல் படம் பல்வேறு பார்வைகளை கவர்ந்தது . பல பில்லியன் பார்வைகளை தொட்டு இயக்குனரின் மற்ற படங்களோடு தொடர்பு படுத்தயில் நல்ல வரவேற்பை பெற்றது . இதன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த மொத்தமாய் மூன்று படங்களை வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள் . என்ன பிரச்னை என சரியாக தெரியவில்லை . இதனை வெளியிட்ட ஹாலிவுட் புகழ் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் பின்வாங்கியது . கொரிய படங்களில் முதலீடு செய்வதை தவிர்ப்பதாகவும் , எதிர் காலத்தில் எந்த பிரச்சனையும் வேண்டாம் எனவும் ஆளாளுக்கு ஒரு தகவலை சொன்னார்கள் .
அதற்கு பிறகு வேறொரு நிறுவனத்தின் மூலம் பல பட்டி டிங்கரிங் வேலைகளை பார்த்து சூரியை போல நான் முதலில் இருந்து பரோட்டாவை சாப்புடுகிறேன் என இரண்டாம் படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் , ஆனால் ஒட்டுமொத்தமாய் குளறுபடி செய்யாமல் மேலும் சில கதாபாத்திரங்களை உள்ளே புகுத்தி கொடுத்திருக்கிறார் . உதாரணத்திற்கு நம் எந்திரன் திரைப்படத்திற்கும் , 2.0 விற்கும் இருக்கும் அந்த வித்தியாசம் போலத்தான் . ஆனால் சில சர்பிரைஸ் இணைப்புகளை கொண்டு இரண்டையும் சிறப்பாகவே இணைத்துள்ளார் என்பது இந்த படப்பிரியர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி .
ஒரு ரகசிய மாந்த்ரீக சூனிய திட்டம் ஒன்று இருப்பதாக வைத்துக்கொள்வோம் . அவர்களின் வேலை குழந்தைகள் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளுக்கு மரபணு செலுத்தப்பட்டு அதீத சக்தியுள்ள வலிமையான மான்ஸ்டர்களை போல உருவாக்குவதுதான் . ஒரு சிலருக்கு கடுமையான பாதிப்புகளையும் சிலருக்கு அது நினைத்து பார்க்க முடியாத அளவிற்கும் இருக்கும் . உதாரணத்திற்கு உங்களை சுட்டாலோ இல்லை கத்தியால் வெட்டினாலோ மீண்டும் உங்களுக்கு உடனுக்குடன் அந்த காயம் சரியாகி விடும் . X Man திரைப்பட பிரியர்களுக்கு இது சப்பையாக தெரியும் , புரிகிறது. அதே போல உங்களை சாகடிக்க மூளையை நோக்கி தலையில் குத்தி சுட்டு கொல்ல வேண்டும் ஒரு ஜாம்பியை போல . இப்படி முந்தைய படத்தில் இந்த கூட்டத்தில் இருந்து தப்பித்து செல்லும் ஒரு சிறுமி அவளை தொடர்ந்து நடக்கும் கதை என முதல் பாகத்தையும் .
அதே போல இங்கு பள்ளிக்கு பேருந்தில் சென்றுக்கொன்று இருக்கும் வேறொரு சிறுமி பேருந்தொடு கடத்தி இந்த நரகத்தில் மாட்டிக்கொண்டு அங்கிருந்து காணாமல் வெளியே ஒரு வீட்டில் அடைக்களமாகி அவர்களை நோக்கி வரும் பிரச்னைகளை எப்படி சமாளித்தார்கள் என்பதுதான் , காஞ்சனா அரண்மனை போல அதே டெம்ப்லேட் அதே கதையா என்றால் கிட்டத்தட்ட அப்படியும் சொல்லலாம் இல்லைன்னு சொல்லலாம் . இவளும் ஒரு சிறுமி என இரண்டாம் பாகமுமாய் நகர்கிறது . முடிவு என்ன என்பதை தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். சலிப்பை தந்தால் நேரமிருக்கும் போது பார்த்துக்கொள்ளுங்கள் .
முடிவாக :
சரி முதல் பாகம் 40 ஆடி பாய்கிறது என்றால் இந்த இரண்டாம் பாகம் 60 அடி பாய்கிறது . தொடக்கத்தில் இருந்தே விறு விருப்பை கூட்டி இருக்கிறார்கள் . பார்வையாளர்களான நமக்கும் அட எப்படியும் இப்படித்தான் நடக்கும் என ஒரு கட்டத்தில் சலிப்பை தந்துவிடக்கூடிய அளவிற்கு நகர்த்தி இருக்கிறார்கள் . சிலருக்கு முதல் பாகம் பிடித்திருப்பதாவாகவும் , சிலருக்கும் இரண்டாம் பாகம் பிடித்திருப்பதாகவும் பலதரப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளது . உங்களுக்கு முதல் பாகம் பிடித்திருக்கிறது என்றால் அவசியம் இரண்டாம் பாகத்தை பாருங்கள் . கூடுதலாக Oru Credit சீன் ஒன்றையும் வைத்துள்ளார்கள் . முடிவில் அதனையும் நீங்கள் காணலாம் .
வன்முறை சார்ந்த திரைபடமென்பதால் இந்தப்படத்தில் இன்னும் கூடுதலான ரத்தத்தை தெறிக்க விட்டு இருக்கிறார்கள். ரத்தம் தெறிக்கும் காட்சிகளோ அய்யயோ எனக்கு அலர்ஜி என்பவர்கள் இதனை தவிர்க்கலாம் . எந்த ஒரு ஆபாச காட்சிகள் இல்லை என்பதால் தாராளமாக டிவி யில் பார்க்கலாம் .
இயக்குனரை பற்றி :
Park Hoon-jung இயக்குனரின் முந்தைய படங்களை பார்த்தவர்களுக்கு அவருடைய திரைப்படங்கள் எப்படி இருக்கும் என தெரிந்திருக்கும். எனக்கு இவரின் இயக்கத்தில் வந்ததில் மிக பிடித்த fav படமென்றால் அது THE TIGER: AN OLD HUNTER'S TALE தான் . கொரியாவின் புலி முருகன் என யாராவது சொன்னால் வாயிலே மிதியுங்கள் . கொரியாவின் டெக்னலாஜி, பழிவாங்கல் கதை , பனிமலை , Old Boy நாயகன் என அட்டகாசமான படம் அது , என்னை பொறுத்தமட்டில் அதற்கு பிறகு தான் இவரின் மற்ற படங்கள் எல்லாம் . new world , VIP , Night in The Paradise , Sundown போன்ற படங்களை இயக்கியுள்ளார் மற்றும் I Saw The Devil படத்திற்க்கு Screen Play வில் பணியாற்றி இருக்கிறார் .
Festival & விருதுகள் :
இந்த திரைப்படம் Fantasia Film Festival 2022 வில் பங்குகொண்டது .கொரியாவில் 2022 ஆம் வெளியான படங்களில் அதிக வருமானத்தை ஈட்டி தந்திருப்பதில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது Witch 2 படம் . முதலில் இருப்பது வேறு யாரும் இல்லை Ma Dong-seok தான் The Roundup (2022) Crime City 2 தான் அந்தப்படம் . இவரும் ஒரு Producer தான் . விரைவில் அதையும் பார்க்க உள்ளேன் .
திரைப்பட தகவல்கள் Film Details :
Trailer :
எங்கே காணலாம், Where To Watch :
இந்த திரைப்படம் தற்போது லீகளாக கொரியாவில் ஸ்னீயிட் , கூகிள் பிளே , சினி ஹாம் மற்றும் சில VOD யில் மட்டுமே தற்போது ஸ்ட்ரீமிங் ஆகிறது . 20 ஆம் தேதி வாக்கில் குறிப்பிட்ட சில நாடுகளில் Netflix ல் வெளியாகும் என சில தகவல்கள் கிடைத்தன . முதல் பாகத்தை தற்போது நீங்கள் அமேசான் பிரைம் இந்தியாவில் பார்த்துக்கொள்ளலாம் . இரண்டாம் பாகத்திற்காக காத்திருந்தும் பார்க்கலாம் இல்லை தேடியும் பார்க்கலாம் .
பிடித்த பதிவுகளை ஷேர் செய்து Movies Museum தளத்திற்கு உதவுவீர்களாக . பரிந்துரைகள் , கேள்விகள் , தகவல்கள் இருப்பின் கமன்ட் ல் தெரியப்படுத்துங்கள் .
நன்றி .
إرسال تعليق