சினிமா விரும்பிகளுக்கு உபயோகமுள்ள ஒரு சோசியல் மீடியா பற்றி தான் இந்த பதிவு. இதனை பற்றி ஒரு ஷார்ட் வீடியோ ஒன்றை பதிவு செய்து இருக்கிறேன் . அது உங்களுக்கு உதவியாக இருக்கும் வேண்டுவோர் இணைப்பில் சென்று பார்க்கவும் . பலருக்கும் தான் பார்த்த, ரசித்த படங்களை பற்றி டைரி எழுதி வைக்கும் பழக்கம் இருக்கும் . தற்போதுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் சில பயனுள்ள தளங்கள் அதற்க்கு உதவியாக இருக்கிறது . குறிப்பாக சினிமா படங்கள் பார்த்து அது குறித்து எழுதி வைப்பவர்கள் நீங்கள் என்றால், உங்களுக்கான தளம் தான் இது . .*இதில் உங்களின் வாட்சலிஸ்ட் ஐ உருவாக்கி கொள்ளலாம் .
*விருப்ப பட்டியல்கள் பலவற்றை உருவாக்கலாம். *தேதி வாரியாக பார்த்த படங்கள் டைரி போல உருவாக்கலாம் . *உங்களின் நண்பர்கள் பார்த்த படங்கள் அவர் கொடுத்த ரேட்டிங் பார்க்கலாம். இன்னும் பல ........ . சில சுவாரசியமான படங்களை தேடி கொள்ளலாம் . 99.9 % எல்லா படங்களும் உண்டு . அது லீகல் எங்கே ஸ்ட்ரீம் செய்கிறார்கள் என்ற தகவலும் கிடைக்கும் . இல்லை என்றால் இல்லை . மொபைல் ஆப் ஆகவும் இணையம் மூலமும் இதனை பயன்படுத்தி கொள்ளலாம் . இதில் உறுப்பினராக இணைந்த பின்னர் உங்களின் அக்கௌன்ட் ஐ பின்னூட்டத்தில் போடுங்கள் .
Post a Comment